search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்- வெற்றிப் பாதையில் இங்கிலாந்து
    X

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்- வெற்றிப் பாதையில் இங்கிலாந்து

    • நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.
    • ஜோரூட் 76 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 72 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    பர்மிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன் எடுத்தது. 132 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 245 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 378 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. புஜாரா 66 ரன்னும், ரிஷப்பண்ட் 57 ரன்னும் எடுத்தனர். பென்ஸ்டோக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    378 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 109 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் கிராவ்லி 46 ரன்னிலும், ஆலி போப் ரன் எதுவும் எடுக்காமலும் பும்ரா பந்தில் ஆட்டம் இழந்தனர். மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் லீஸ் 56 ரன்னில் ரன்அவுட் ஆனார்.

    4-வது விக்கெட்டான ஜோரூட்-பேர்ஸ்டோவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டதோடு வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது.

    நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது. ஜோரூட் 76 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 72 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி வெற்றிக்கு மேலும் 119 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட் உள்ளது. வெற்றிப் பாதையில் அந்த அணி இருக்கிறது.

    இன்றைய 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டத்தில் 119 ரன்னுக்குள் இங்கிலாந்தின் எஞ்சிய 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டாலும் டெஸ்ட் டிராவில் முடிய வாய்ப்பு இருக்கிறது.

    இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடர் சமநிலையில் முடியும். இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது 'டிரா' ஆனாலோ தொடரை வென்று விடும்.

    Next Story
    ×