search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    40 வருட கபில் தேவ் சாதனையை முறியடித்த பும்ரா
    X

    கபில் தேவ் - பும்ரா

    40 வருட கபில் தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது இந்தியா.

    இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இதில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி பும்ரா முன்னேறி உள்ளார். 1981-1982-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அந்த சாதனை தற்போது பும்ரா (23 விக்கெட்டுகள்) முறியத்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா (SENA) ஆகிய நாடுகளில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இந்திய வீரர்களில் அனில் கும்ளே (141), இஷாந்த் சர்மா (130), ஜாகீர் கான் (119), முகமது சமி (119) கபில் தே (119) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

    Next Story
    ×