search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முட்டாள் தனமான யோசனை- பும்ரா மீது இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் தாக்கு
    X

    பும்ரா - பீட்டர்சன்

    முட்டாள் தனமான யோசனை- பும்ரா மீது இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் தாக்கு

    • லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை பும்ரா நிற்கவைத்திருந்தார்.
    • கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாக இருந்து இருக்கும்.

    பர்மிங்கம்:

    இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 284 ரன்கள் சேர்த்தது.

    132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது.

    இந்த நிலையில் நேற்றைய 4-வது நாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா சரியாக கேப்டன்சி செய்யவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது-: பும்ரா தனது யோசனைகளை சரியாகப் பயன்படுத்தவில்லை.

    பேட்ஸ்மேன்களால் சுலபமாக கணிக்க முடியும்படி பந்துவீசிவிட்டனர். அதுமட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் இந்தியா சரியான வியூகங்களை வகுக்கவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடிய போதும், தொடர்ச்சியாக லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை பும்ரா நிற்கவைத்திருந்தார். அது பெரிய முட்டாள்தனம். கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாக இருந்து இருக்கும். அதையும் அவர்கள் செய்யவில்லை.

    இவ்வாறு பீட்டர்சன் தெரிவித்தார்.

    Next Story
    ×