search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    5வது டெஸ்ட் கிரிக்கெட்-  284 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது இங்கிலாந்து
    X

    ஜானி பேர்ஸ்டோ

    5வது டெஸ்ட் கிரிக்கெட்- 284 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது இங்கிலாந்து

    • இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
    • இங்கிலாந்து சார்பில் ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

    இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் பென்ஸ்டோக் 25 ரன்கள் அடித்தார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் எடுத்தார். போட்ஸ் 19 ரன்னுடன் வெளியேறினார்.

    எனினும் அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 106 ரன்கள் குவித்த நிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. இதனால் இந்திய அணி 132 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களும், பும்ரா 3 விக்கெட்களும் ,ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் அடித்திருந்தது.

    Next Story
    ×