என் மலர்
விளையாட்டு
- காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
- ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா காயத்தால் விலகியுள்ளார்.
புதுடெல்லி:
22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 8 -ம் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
நீச்சல், தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் உள்பட 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடக்கிறது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 111 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள்.
தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், (மகளிர்), சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஆக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.
பி.வி சிந்து , மீராபாய் சானு, ரவி தஹியா , மாணிக் பத்ரா, லவ்லினா, நிகத் ஜரின் உள்ளிட்டோர் பதக்கம் வெல்வார்கள் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- சென்னை வந்த பிரதமரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்
சென்னை:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்கின. பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்று இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கலைஞர்கள் வந்திருந்து கலைத்திறனை வெளிப்படுத்தினர். இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசித்தார். ஒரே சமயத்தில் இரண்டு படங்களுக்கான இசையை அவர் வாசித்து அசத்தினார். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை மணல் ஓவியத்தில் வரைந்து அனைவரையும் கவர்ந்தார் ஓவியர் சர்வம் படேல்.

விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மோடி இன்று பிற்பகல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் புறப்பட்டார். மாலை 5 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருநது ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படைத் தளம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் வந்தடைந்தார். முதல்வர் போன்றே பிரதமரும் வேட்டி, சட்டை அணிந்து வந்தார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
பிரதமர் வந்ததும் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரையாற்றினார். அதன்பின்னர் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார். நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழ் கலாச்சாரம், தமிழர்களின் வரலாறு, பாரம்பரிய கலைகள், தமிழ் சினிமா ஆகியவற்றை பறைசாற்றும் நிகழ்த்து கலை நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தலைவர்கள் உரையாற்றினர். அதன்பின்னர் ஒளிபரப்பப்பட்டது. 75 நகரங்களை கடந்து வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடர்பான காட்சிப்படம் ஒளிபரப்பட்டது. அதன்பின்னர் விஸ்வநாதன் ஆனந்த், ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.கஸ்டாலினிடம் வழங்கினார். அவர், பிரதமர் மோடியிடம் வழங்கினார். அதன்பின்னர் ஒலிம்பியாட் ஜோதி பிரக்ஞானந்தாவிடம் வழங்கப்பட்டு, ஜோதி ஏற்றப்பட்டது. இதன்மூலம் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், 187 நாட்டு செஸ் வீரர்கள் பங்கேற்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி, நேரு ஸ்டேடியம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- வெஸ்ட் இண்டீசில் புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.
- கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே வெற்றிகளைப் பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா இந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 113 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதில் 7 பவுண்டரியுடன் ஷிகர் தவான் 58 (74) ரன்களில் அவுட்டான போது வந்த மழை ஒரு மணி நேரம் பெய்து குறுக்கிட்ட நிலையில் மீண்டும் போட்டி துவங்கிய போது மீண்டும் ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்து சென்றது. அதனால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டி மீண்டும் தொடங்கிய போது 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் – ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினர். அதில் ஸ்ரேயஸ் ஐயர் 44 (34) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 8 (6) ரன்களில் அவுட்டானார். அதனால் 36 ஓவரில் இந்தியா 225/3 ரன்கள் எடுத்தபோது மீண்டும் வந்த மழை முதல் இன்னிங்ஸ் முடியும் நேரம் வரை வெளுத்து வாங்கியது.
அதனால் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 98* (98) ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஹெய்டன் வால்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதை தொடர்ந்து டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடியது. இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து சாதித்து காட்டியுள்ளது.

அதிலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து இந்தியா புதிய சாதனையுடன் கோப்பையை வென்றுள்ளது. மேலும் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. கங்குலி (2002) : 2 -1 (5) 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது.
2. எம்எஸ் டோனி (2009) : 2-1 (4) 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
3. சுரேஷ் ரெய்னா (2011) : 3-2 (5)
4. விராட் கோலி (2017) : 3-1 (5) 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
5. விராட் கோலி (2019) : 2-0 (3), 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது
6. ஷிகர் தவான் (2022): 3-0 (3)*
மேலும் கடந்த 2006-க்குப்பின் தொடர்ச்சியாக 12 தொடர்களில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக தொடர்களில் வென்ற அணி என்ற புதிய உலக சாதனையும் படைத்துள்ளது.
2-வது இடம் : பாகிஸ்தான் – ஜிம்பாப்வேக்கு எதிராக (11)
- ஆட்டநாயகனாக டி செல்வா தேர்வு செய்யப்பட்டார்.
- தொடர்நாயகனாக ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட்டார்.
காலே:
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 88.1 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 147 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய முடிவில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் திமுத் கருணாரத்னே 27 ரன்னுடனும், தனஞ்செயா டி சில்வா 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி செல்வா சதம் அடித்து அசத்தினார்.
கருணாரத்னே அரை சதம் எடுத்து அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 360 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 508 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
4-வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 89 ரன்கள் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு போதிய வெளிச்சம் இல்லாத சூழல் உருவாகியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 26 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இமாம் உல்-ஹக் 46 ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 26 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தார்.
இந்நிலையில் 5-வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 97 ரன்னில் 2-வது விக்கெட்டை பறிகொடுத்தது. இமாம் உல்-ஹக் 49 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷ்வான் - பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷ்வான் வெளியேறினார். அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
ஃபவாத் ஆலம் 1, சல்மான் 4, பாபர் அசாம் 81, முகமது நவாஷ் 12, யாசிர் ஷா 27, ஹசன் அலி 11, நசீம் ஷா 18 என வெளியேற பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், ரமேஷ் மெண்டீஸ் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக டி செல்வா தேர்வு செய்யப்பட்டார். தொடர்நாயகனாக ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட்டார்.
- கிரிக்கெட் வீரர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- இந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்குபவர் கேஎல் ராகுல். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடன் ஹிந்தி நடிகையான அதியா ஷெட்டியுடன் இணைத்து பல வதந்திகள் வந்த நிலையில் அதியா ஷெட்டியும் கே.எல்.ராகுலும் தங்களுடைய உறவைப் பற்றி வெளிப்படையாகக் கூறினர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் அதியா ஷெட்டியும் கேஎல் ராகுலும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டிராகிராமில் அதியா ஷெட்டி பதிவு செய்தார். மிகவும் பிடித்தமான ஒன்று என அதில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக கேஎல் ராகுல் இதய எமோஜியை பதிவிட்டார். இந்த புகைப்படத்தை லைக் செய்து கிரிக்கெட் வீரர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரரான குர்ணால் பாண்ட்யா, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அன்பை வெளிப்படுத்தும் இதய எமோஜிக்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.
- முதல் டி20 போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
- சாம் கரனை தோளில் தூக்கிய வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி 234 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் 20 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேர்ஸ்டோவ் சக வீரர்களில் ஒருவரான சாம் கரனை தோளில் தூக்கி உடற்பயிற்சி செய்தார். இந்த வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Jonny Bairstow lifting Sam Curran 😂😂😂
— England's Barmy Army (@TheBarmyArmy) July 26, 2022
📹 IG: reecejtopley pic.twitter.com/HwVH7l6wVr
- 3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- குவாலிபயர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். போட்டியில் நெல்லை ராயல் கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
சேலத்தில் நடந்த "குவாலிபயர் 1" ஆட்டத்தில் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவரில் 140 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு 141 ரன் இலக்காக இருந்தது.
பாபா அபராஜித் அதிக பட்சமாக 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாஜகான் 13 பந்தில் 25 ரன்னும் (3சிக்சர்) எடுத்தனர். மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டும், சாய்கிஷோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சாய் கிஷோர் 27 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி ,4 சிக்சர்) கேப்டன் கவுசிக் காந்தி 46 பந்தில் 40 ரன்னும் (1பவுண்டரி, 2 சிக்சர்), ஆர்.சதீஷ் 19 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டும், அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-
தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டும் தான் உள்ளது என்பதால் எதையும் வித்தியாசமாக செய்யாமல் அதிகம் வெற்றி பெற மட்டுமே முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய்கிஷோர் கூறும்போது, 'மிகுந்த நம்பிக்கையுடன் என்னை தயார்படுத்திக் கொண்டே இருந்தேன். கிடைக்கும் தருணத்தில் ஷாட்களை அடித்தேன்" என்றார்.
தோல்வி குறித்து நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் பாபா இந்திரஜித் கூறும்போது, 'நாங்கள் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும். எங்களின் பந்து வீச்சாளர்கள் முடிந்தவரை போராாடினார்கள். இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதால் அதில் வென்று மீண்டும் எங்கள் பயணத்தை தொடருவோம்' என்றார்.
கோவையில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 'குவாலிபயர் 2' ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு 2-வது அணியாக தகுதிபெறும்.
- பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
- நேரு உள்விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு நேரு உள்விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மதியம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்று இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க உளள் கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- அதிரடியாக விளையாடி மொயின் அலி 16 பந்தில் அரை சதம் அடித்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி என்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராய் - பட்லர் களமிறங்கினர்.
ஜேசன் ராய் 8, பட்லர் 22 ரன்னில் லுங்கி என்கிடி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்ததாக டேவிட் மலான் - பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 23 பந்தில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மலான் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த வந்த மொயின் அலி தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 16 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இதில் 6 சிக்கர்கள் அடங்கும். 52 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலியும் 90 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோவும் லுங்கி என்கிடி பந்தில் அவுட் ஆனார்கள்.
இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி என்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா ஆடியது. 7 ரன்கள் எடுப்பதற்க்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டிகாக் 2, ரிலீ ரோசோவ் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ட்ரிக்ஸ் 57 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மில்லர் 8, கிலாசன் 20 என விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்காக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராடினார். அவர் 28 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 8 சிக்சர் அடங்கும்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
- நியூசிலாந்து-ஸ்காட்லாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி எடின்பர்க் நகரில் நேற்று நடந்தது.
- தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 40 ரன்கள் விளாசினார்.
எடின்பர்க்:
ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு இரண்டு 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடுகிறது. நியூசிலாந்து-ஸ்காட்லாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி எடின்பர்க் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
பின் ஆலென் சதம் (101 ரன், 56 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) அடித்தார். தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 40 ரன்கள் விளாசினார். முன்னதாக கப்தில் 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார்.
35 வயதான கப்தில் இதுவரை 116 இருபது ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி 2 சதம், 20 அரைசதம் உள்பட 3,399 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே இந்தியாவின் ரோகித் சர்மா (3,379 ரன்), விராட் கோலி (3,308 ரன்) ஆகியோர் உள்ளனர்.
- இளம் வீரரான அலன் (23 வயது) டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
- நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளையும் கேப்டன் சாட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
நியூசிலாந்து அணி 2 டி20 போட்டி மற்றும் 1 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் - அலன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தது. கப்தில் 40 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிலிப்ஸ் 23 ரன்னில் வெளியேறினார்.
இளம் வீரரான அலன் (23 வயது) டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை (101) பதிவு செய்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் 6 சிக்சர் 8 பவுண்டரிகள் அடங்கும். நீசம் 30 ரன்னில் வெளியேற நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் குவித்தது.
226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளையும் கேப்டன் சாட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 101 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் அலன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
- 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.
புதுடெல்லி:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது.
இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.
இந்தநிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, இந்திய அணியின் கொடியை ஏந்திச்செல்வார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பி.வி.சிந்து இந்திய தேசிய கொடியை ஏந்திச்சென்றது குறிப்பிடத்தக்கது.






