search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்கும் 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா
    X

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்கும் 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா

    • பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
    • நேரு உள்விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு நேரு உள்விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மதியம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்று இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

    இந்நிலையில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க உளள் கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×