என் மலர்
விளையாட்டு
- வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
- இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் எந்த போட்டியிலும் 20 ரன்களை தாண்டவில்லை.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக பேட்டிங்கில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற கோலி எந்த போட்டியிலும் 20 ரன்களை தாண்டவில்லை.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் தடுமாற்றம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அப்ரிடி, ஜிம்பாப்வேயில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மீண்டும் அணிக்கு வரக்கூடும். மிக நீண்ட நாட்களாக அவர் தனக்கென நிர்ணயித்த தரத்திற்கு ஏற்ப விளையாடவில்லை என்றார்.
அதே சமயம் எனது ஆலோசனைகளை பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என சாமர்த்தியமாக பதில் அளித்தார் அப்ரிடி.
இந்த ஆண்டின் இறுதியில் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடக்கவிருக்கும் மோதல்கள் குறித்து பேசிய அப்ரிடி, பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் அது சமநிலையான அணி என்றும், ஆசியக் கோப்பையில் மட்டுமல்ல, உலகக் கோப்பையிலும் எங்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் அணியில் உள்ள முதல் 12 வீரர்கள் மிகவும் வலிமையானவர்கள். அவர்கள் நல்ல முடிவுகளைக் கொண்டு வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
- மாக்னஸ் கார்ல்சன் நார்வே அணிக்காக போர்டு நம்பர்1-ல் விளையாடுவார்.
- சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் இன்று சென்னை வந்தார். அவர் நார்வே அணிக்காக போர்டு நம்பர்1-ல் விளையாடுவார்.
சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். அப்போது அவருடன் பலர் செல்பி எடுத்தனர். ஆட்டோ கிராப்பும் வாங்கினர்.
இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
- 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
- இந்திய அணியில் 215 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
பர்யிங்காம்:
ஒலிம்பிக் ஆசிய விளையாட்டு போட்டிக்கு அடுத்த படியாக உலகின் 3-வது பெரிய விளையாட்டு திருவிழாவாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி உள்ளது.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இந்திய ஆக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்தி சென்றனர்.
72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடக்கிறது. இந்திய அணியில் 215 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
இன்று இந்தியா பங்கேற்கும் போட்டி விவரம் வருமாறு:-
லாவ்ன் பவுல்ஸ் போட்டி, (இந்திய நேரப்படி மாலை 5.30) டேபிள் டென்னிசில் (மாலை 6.30 மணி) ஆண்கள் அணி தகுதிச்சுற்று, பெண்கள் அணி தகுதிச் சுற்றில் இந்தியா விளையாடுகிறது.
பெண்கள் ஹாக்கியில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்திய அணி கானாவுடன் மோதுகிறது. நீச்சல் போட்டி யில் இந்தியாவின் குஷாக்ரா ராவத், ரஹரி நடராஜ், ஆஷிஷ்குமார், சஜன் பிரகாஷ் பங்கேற்கிறார்கள்.
பெண்கள் 20 ஓவர் கிரிக் கெட்டில் இந்தியா-ஆஸ்தி ரேலியா மோதுகின்றன. இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஸ்குசாஷ் போட்டி மதியம் 2.30 மணிக்கு குத்துச்சண்டை போட்டி மாலை 4.30 மணிக்கும் தொடங்குகிறது. குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் ஷிவா தாபா, ரோகித் டோகாஸ், சுமித் குண்டு, ஆஷிஷ் குமார் களம் காணுகிறார்கள்.
பேட்மிண்டனில் கலப்பு அணியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோது கிறது. இப்போட்டி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. 20 ஓவர் போட்டித்தொடர் 1-1 என்ற களத்தில் சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 31-ந்தேதி நடக்கிறது.
- இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.
- 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது.
இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை (மாலை 3.30 மணி) எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
- வெளியேறுதல் சுற்றில் மதுரையை கோவை அணி தோற்கடித்து இருந்தது.
- இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதும்.
கோவை:
6-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அப்போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தியது.
வெளியேறுதல் சுற்றில் மதுரையை கோவை அணி தோற்கடித்து இருந்தது. இன்று கோவையில் நடக்கும் இறுதி போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நெல்லை-கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதும்.
பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை அணியில் சூரியபிரகாஷ், சஞ்சய்யாதவ், ஹரீஸ், ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் உள்ளனர். ஷாருக்கான் தலைமையிலான கோவையில் அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய்சுதர்சன், அபிஷேக் தன்வார், முகிலேஷ், அஜித்ராம், திவாகர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
- இது போல தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
- இந்திய அணியை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. சிம்ரன் ஹெட்மயர் மற்றும் ஹோல்டர் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் வித்தியாசமான அணியாக இருக்கும். இந்த தொடரில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும். இந்திய அணியை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை வென்று பதிலடி கொடுப்போம். சிம்ரன் ஹெட்மயர் மீண்டும் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது போல தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். தொடரின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் அணி தஜிகஸ்தானை சந்திக்கிறது.
- உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் 1927-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் சிறப்பு மிக்க வாய்ப்பை தமிழ்நாடு பெற்று உள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து முடிந்தன.
இப்போட்டி ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ராஜா, ராணி காய்களை அறிமுகம் செய்து 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவான நேற்று போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று மாலை 3 மணி முதல் போட்டிகள் தொடங்கும்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன. உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 11 சுற்றுகளை கொண்டது. சுவிஸ் முறையில் ஆட்டங்கள் நடைபெறும்.
ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் மாற்று வீரராக இருப்பார். 4 பேர் தான் ஆடுவார்கள். வெற்றி பெற்ற அணிகள் வெற்றி பெற்ற அணியுடனும், தோல்வி அடைந்த அணிகள் தோல்வி அடைந்த அணியுடனும் விளையாடும் வகையில் போட்டி முறை அமைக்கப்பட்டுள்ளது.
வெற்றிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். தோற்றால் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. 4 பேர் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும்.
செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் ஆக மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.
மகளிர் பிரிவில் இந்திய 'ஏ' அணி தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. மற்ற இரண்டு அணியும் முறையே 11, 16-வது இடங்களில் உள்ளன.
ஓபன் பிரிவில் இந்திய 'ஏ' அணி தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் முறையே 11 மற்றும் 17-வது இடங்களில் உள்ளன.
இன்று காலை 9.30 மணிக்கு அனைத்து அணி கேப்டன்கள் கூட்டம் நடைபெறும். மாலை 3 மணிக்கு தொடங்கும் ஓபன் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி (2-வது தர வரிசை) ஜிம்பாப்வே அணியுடன் (94-வது தர வரிசை) மோதுகிறது.
பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்படும் இந்திய 'ஏ' அணி வெற்றியுடன் போட்டியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய 'பி' அணி (2-வது இடம்) ஐக்கிய அரபு எமிரேட்சுடன் (103-வது இடம்) மோதுகிறது. தர வரிசையில் 16-வது இடத்தில் உள்ள இந்திய 'சி' அணி 109-வது இடத்தில் உள்ள தெற்கு சூடான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
பெண்கள் பிரிவில் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய 'ஏ' அணி முதல் சுற்றில் 80-வது இடத்தில் உள்ள தஜிகஸ்தானுடன் மோதுகிறது. 11-வது இடத்தில் உள்ள இந்திய 'பி' அணி வேல்ஸ் (90-வது இடம்) அணியுடனும், இந்திய 'சி' அணி (16-வது இடம்) ஆங்காங்குடனும் (95-வது இடம்) மோதுகின்றன.
நேற்றைய தொடக்க விழாவின்போது பிரதமர் மோடி, இந்திய பெண்கள் மற்றும் அமெரிக்க ஆண்கள் அணிகள் எந்த நிற காயுடன் விளையாட வேண்டும் என்பதை தேர்வு செய்தார். இதில் அவர் இரண்டையுமே கருப்பு நிற காய்களாக எடுத்தார். இதனால் இந்திய பெண்கள் அணி முதல் சுற்றில் கருப்பு நிற காயுடன் விளையாடுகிறது.
முதல் சுற்று போட்டி மாலை 3 மணிக்கு தொங்குவதையடுத்து வீரர்-வீராங்கனைகள் தாங்கள் தங்கி இருந்த ஓட்டல்களில் இருந்து புறப்பட்டு போட்டி நடைபெறும் இடத்துக்கு மதியம் 2 மணியளவில் வருகின்றனர். அவர்கள் பஸ்களில் அழைத்து வரப்படுகின்றனர். இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி உற்சாகத்துடன் தொடங்குகிறது.
- பெண்கள் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கானாவை சந்திக்கிறது.
- டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணிகள் களம் காணுகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பர்மிங்காம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.
இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை (மாலை 3.30 மணி) எதிர்கொள்கிறது.
அதே போல், பெண்கள் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கானாவை (மாலை 6.30 மணி) சந்திக்கிறது. டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணிகள் களம் காணுகிறது. நீச்சல், ஸ்குவாஷ், குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் கால் பதிக்கிறார்கள்.
- முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது.
- 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தி விட்டது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணியில் அஸ்வின், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர்குமார், அக்ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரு நாள் தொடரில் அணியை வழிநடத்திய ஷிகர் தவான், தொடர்நாயகன் சுப்மான் கில் ஆகியோருக்கு இடமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி நிகோலஸ் பூரன் தலைமையில் விளையாடுகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 6-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
- இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்கிறது.
- இந்தியாவுக்கு எதிரான டி20 அணியில் ஹெட்மயர் இடம் பெற்றுள்ளார்.
டிரினிடாட்:
இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் அணியில் ஹெட்மயர் மீண்டும் இணைகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷமார் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயர், டேவன் தாமஸ், ரோவ்மேன் பாவல், ஒடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், டொமினிக் டிரேக்ஸ், அல்சாரி ஜோசப், ஒபெட் மெக்காய், அக்கேல் ஹொசைன், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.
- செஸ் ஒலிம்பியாட் தொடரை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்ததை இந்தியா கண்டித்துள்ளது.
புதுடெல்லி:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை டெல்லியில் கடந்த மாதம் 19-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணம் கடந்த மாதம் தொடங்கி இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த வகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் திடீரென அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளையாட்டுடன் அரசியலை கலக்கும் இந்தியாவின் முயற்சியை பாகிஸ்தான் கண்டிக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் உயர்மட்ட அளவில் எழுப்புவோம் என தெரிவித்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் புறக்கணித்துள்ளதை இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், மதிப்புமிக்க சர்வதேச நிகழ்வை பாகிஸ்தான் அரசியல் ஆக்கி உள்ளது. அவர்கள் அணி வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்த பிறகு இந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 207 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 149 ரன்களை எடுத்து தோற்றது.
கார்டிப்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. அந்த அணியின் ரிலே ருசோவ் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 5 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களை குவித்தார். ஹென்ரிக்ஸ் 53 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி விரைவில் அவுட்டானார். அவர் 14 பந்தில் 29 ரன் எடுத்தார்.
மொயீன் அலி 28 ரன்னும், ஜேசன் ராய் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இங்கிலாந்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் பெலுகுவாயோ, ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் அணி 1-1 என சமனிலை வகிக்கிறது.






