என் மலர்
விளையாட்டு
- இறுதி சுற்றுக்கு ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றதன் மூலம் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு.
- டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்று 27வது இடம் பிடித்தார்.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன
ஆண்களுக்கான100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி அரை இறுதிச் சுற்றில் இந்திய இளம் வீரர் ஸ்ரீகரி நடராஜ் 54:55 வினாடிகளில் கடந்து 4 இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா வீரர் பீட்டர் கோட்ஸே, 53.67 வினாடிகளில் பயண தூரத்தை கடந்து, முதலிடம் பிடித்தார்.
கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஏ ஹீட் பிரிவு நீச்சல் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான நடராஜ், 100மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 54:31 வினாடிகளில் இலக்கை கடந்து 27வது இடம் பிடித்திருந்தார்.
முன்னதாக, காமன்வெல்த் ஆண்களுக்கான 400மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில், இந்திய வீரர் குஷாக்ரா ராவத் 3:57.45 வினாடிகளில் இலக்கை 14வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது.
- கோவையில் நேற்று நடந்த குவாலிபயர் 2 ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை தோற்கடித்தது.
- நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது.
கோவை:
ஜூலை 30- 8 அணிகள் பங்கேற்ற 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம். 23-ந்தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் லீக் போட்டிகள் நடைபெற்றது.
கடந்த 24-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
திருப்பூர் தமிழன்ஸ் , திண்டுக்கல் டிராகன்ஸ் , திருச்சி வாரியர்ஸ் , சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.
பிளே ஆப் சுற்று கடந்த 26-ந்தேதி தொடங்கியது. சேலத்தில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 20 ரன்னில் மதுரை பாந்தர்சை தோற்கடித்து 'குவாலிபயர் 2' ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. தோல்வியை தழுவிய முன்னாள் சாம்பியன் மதுரை அணி வெளியேறியது.
சேலத்தில் 27-ந் தேதி நடைபெற்ற "குவாலிபயர் 1" ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கோவையில் நேற்று நடந்த குவாலிபயர் 2 ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை தோற்கடித்தது.
டி.என்.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கோவையில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி இருந்தது. இதனால் இறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் விளையாடும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவையை தோற்கடித்து 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணி 2017, 2019, 2021-ம் ஆண்டுகளில் டி.என்.பி.எல். கோப்பையை வென்று இருந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கில் கேப்டன் கவுசிக் காந்தி (225 ரன்), சசிதேவ் (204 ரன்), என்.ஜெகதீசன் (186 ரன்) ஆகி யோரும் பந்து வீச்சில் அலெக்சாண்டர் (10 விக்கெட்), சித்தார்த் (8) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். சாய் கிஷோர் (111 ரன், 8 விக்கெட்), சோனு யாதவ் (107 ரன், 8 விக்கெட்) ஆகியோர் ஆல்ரவுண்டு பணியில் நன்றாக செயல்படுகிறார்கள்.
கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
கோவை கிங்ஸ் அணியில் கேப்டன் ஷாருக்கான், சுரேஷ்குமார், சாய் சுதர்சன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, அபிஷேக் தன்வர், சூர்யா, அஜித் ராம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
- இந்திய பெண்கள் அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் விளையாடியது. தொடக்க வீராங்கணைகளாக மந்தனாவும், ஷபாலி வர்மாவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மந்தனா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான விளையாடிய ஷபாலி வர்மா 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். யாஷிகா பாட்யா 8 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தவித்தது. இதனால், இந்திய அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்வரிசையில் களமிறங்கிய ஆஸ்லீக் கார்ட்னர் அதிரடியாக விளையாடினார். அவருக்கு கிரேஷ் ஹாரீஸ் பக்கபலமாக விளையாடி 37 ரன்கள் குவித்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை கடந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய பெண்கள் அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை மாலை 03.30 மணிக்கு தொடங்கும்.
- அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- போட்டி தொடரும் போது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது என அனாஹத் சிங் கூறினார்.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
இதில் நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில். 64 வது சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அனாஹத் சிங் (14 வயது), செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் வீராங்கனை ஜாடா ரோஸ் ஆகியோர் மோதினர்.
இதில் சிறப்பாக விளையாடிய அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார். இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இது மிகவும் உற்சாகமானது. போட்டி தொடரும் போது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது தனது வெற்றி தொடக்கத்திற்குப் பிறகு அனாஹத் சிங் கூறினார்.
- சிங்கப்பூர் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
- ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியா வெற்றி.
பர்மிங்காம்:
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- சத்தியன் ஞானசேகரன் ஜோடி சிங்கப்பூரை சேர்ந்த ஷாவோ ஃபெங் ஈதன் போ மற்றும் கிளாரன்ஸ் செவ் செ யூ ஜோடியை 11-5, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல், சிங்கப்பூர் வீரர் பாங்க் யெவ் என் கோயனை, 11-8, 11-9 11-9 என்ற செட்களில் வீழ்த்தி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், சிங்கப்பூரின் கிளாரன்ஸ் செவ் சே யூவை 11-7, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 254 ரன்கள் குவித்தது.
- சாப்மேன் 83 ரன்னும், பிரேஸ்வெல் 61 ரன்னும் எடுத்தனர்.
எடின்பர்க்:
நியூசிலாந்து அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டி 20 மற்றும் ஒரே ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி எடின்பர்கில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. சாப்மேன் மற்றும் பிரேஸ்வெல் அதிரடியில் மிரட்டினர். இருவரும் அரை சதமடித்தனர்.
சாப்மேன் 44 பந்தில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்தார். பிரேஸ்வெல் 25 பந்தில் 3 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. அந்த அணியில் கிறிஸ் கிரீவ்ஸ் 37 ரன்னும், ரிச்சி பெரிங்டன் 22 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஸ்காட்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 2-0 என டி20 தொடரைக் கைப்பற்றியது. மேலும் டி20 போட்டியில் நியூசிலாந்து அடித்த அதிகபட்ச ரன்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, கானா அணிகள் மோதின.
- இதில் இந்தியா 5- 0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.
லண்டன்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குருப் ஏ பிரிவில் இந்தியா, கானா அணிகள் இடம்பிடித்துள்ளன.
முதல் நாளில் நடந்த மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, கானா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் குர்ஜித் கெளர் (3,39), நேகா (28), சங்கீதா குமாரி (36), சலிமா டேடே (56) ஆகியோர் கோல்களை அடித்தனர்.
- முதலில் ஆடிய இந்தியா 190 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 122 ரன்களே எடுத்தது.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார்.
முன்னதாக ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்கு தள்ளினார்.
ரோகித் சர்மா இதுவரை 129 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,443 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே கப்தில் (3,399 ரன்), விராட் கோலி (3,308 ரன்) ஆகியோர் உள்ளனர்.
- காபூலில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் குண்டு வெடித்தது.
- இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது குண்டு வெடித்தது. அதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய உறுப்பினர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காபூலில் ஷெப்கிஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டி காபூல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் விளையாட்டு வீரர் யாரும் காயமடையவில்லை என அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட்போட்டி நடைபெற்ற போது குண்டுவெடிப்பு நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 190 ரன்கள் எடுத்தது.
- ரோகித் சர்மா 64 ரன்னும், தினேஷ் கார்த்திக் 41 ரன்னும் எடுத்தனர்.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார்.
சூர்யகுமார் யாதவ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட்டானார். ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும், ஜடேஜா 16 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி19 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி திணறியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஷமார் புரூக்ஸ் 20 ரன்னும், நிகோலஸ் பூரன் 18 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் அஷ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய கோவை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
கோவை:
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் இன்று நடந்த 2-வது தகுதிச்சுற்றில் நெல்லை ராயல் கிங்சும், லைகா கோவை கிங்சும் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் 26 பந்தில் 7 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்தார். பாபா அபராஜித் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். அஜிதேஷ் அதிரடி காட்டி 38 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 33 பந்தில் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 24 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், கோவை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்தியா ஏ அணி ஜம்பாப்வேயை வீழ்த்தியதால் வெற்றியை உறுதி செய்தது.
- இந்திய மகளிர் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வைஷாலி தஜிகிஸ்தான் வீரர் அப்ரூபை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது.
இதில், மூன்று வெவ்வேறு அணிகள் பங்கேற்றன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார்.
இவரது வெற்றியைத் தொடர்ந்து, இந்திய பி மகளிர் அணி வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய சி பிரிவு வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஹாங்காவ் அணி வீராங்கனையை 49-வது நகர்த்தலில் ஈஷா கர்வாடே வென்ற நிலையில் பிரதியுஷாவும் வெற்றி பெற்றார்.
மேலும், ஓபன் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய வீரர்களான கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தமிழக இளம கிராண்ட் மாஸ்டர் குகேஷூம் நெற்றி பெற்று அசத்தினார்.
இந்திய பி பிரிவு மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள கோம்ஸ் மேரி ஆன், திவ்யாச தேஷ்முக் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, இந்திய சி பிரிவு மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றார். இதேபோல், செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்தியா ஏ அணி ஜம்பாப்வேயை வீழ்த்தியதால் வெற்றியை உறுதி செய்தது.
இதேபோல், இந்திய மகளிர் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வைஷாலி தஜிகிஸ்தான் வீரர் அப்ரூபை வீழ்த்தி வெற்றி பெற்றார்.






