search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நாளை இறுதிப்போட்டி: 4-வது கோப்பை ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்சுடன் பலப்பரீட்சை
    X

    நாளை இறுதிப்போட்டி: 4-வது கோப்பை ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்சுடன் பலப்பரீட்சை

    • கோவையில் நேற்று நடந்த குவாலிபயர் 2 ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை தோற்கடித்தது.
    • நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது.

    கோவை:

    ஜூலை 30- 8 அணிகள் பங்கேற்ற 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம். 23-ந்தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் லீக் போட்டிகள் நடைபெற்றது.

    கடந்த 24-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    திருப்பூர் தமிழன்ஸ் , திண்டுக்கல் டிராகன்ஸ் , திருச்சி வாரியர்ஸ் , சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    பிளே ஆப் சுற்று கடந்த 26-ந்தேதி தொடங்கியது. சேலத்தில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 20 ரன்னில் மதுரை பாந்தர்சை தோற்கடித்து 'குவாலிபயர் 2' ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. தோல்வியை தழுவிய முன்னாள் சாம்பியன் மதுரை அணி வெளியேறியது.

    சேலத்தில் 27-ந் தேதி நடைபெற்ற "குவாலிபயர் 1" ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கோவையில் நேற்று நடந்த குவாலிபயர் 2 ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை தோற்கடித்தது.

    டி.என்.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    கோவையில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி இருந்தது. இதனால் இறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் விளையாடும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவையை தோற்கடித்து 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணி 2017, 2019, 2021-ம் ஆண்டுகளில் டி.என்.பி.எல். கோப்பையை வென்று இருந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கில் கேப்டன் கவுசிக் காந்தி (225 ரன்), சசிதேவ் (204 ரன்), என்.ஜெகதீசன் (186 ரன்) ஆகி யோரும் பந்து வீச்சில் அலெக்சாண்டர் (10 விக்கெட்), சித்தார்த் (8) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். சாய் கிஷோர் (111 ரன், 8 விக்கெட்), சோனு யாதவ் (107 ரன், 8 விக்கெட்) ஆகியோர் ஆல்ரவுண்டு பணியில் நன்றாக செயல்படுகிறார்கள்.

    கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

    கோவை கிங்ஸ் அணியில் கேப்டன் ஷாருக்கான், சுரேஷ்குமார், சாய் சுதர்சன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, அபிஷேக் தன்வர், சூர்யா, அஜித் ராம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    Next Story
    ×