என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை பெற்றுள்ளது.
    • குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், 70 கிலோ குத்துச்சண்டை எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    நியூசிலாந்தின் ஏரியன் நிக்கல்சனை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    வரும் புதன்கிழமை காலிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அரையிறுதிக்கு முன்னேறுவதன்மூலம் லவ்லினா போர்கோஹெய்னுக்கு காமன்வெல்த் போட்டியில் பதக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது (2014 - வெள்ளி, 2018 - தங்கம், 2022 - தங்கம்) பதக்கமாகும்.

    இதன்மூலம் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.

    • 3 ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஷிகர் தவான் தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா உள்ளனர்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா உள்ளனர்.

    மேலும், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களை தவிர, குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, சிராஜ், தீபக் சாஹர் அணியில் உள்ளனர்.

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2வது சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகின்றனர்.
    • சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.

    3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களத்தில் இறங்கினார்.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் விளையாடி வரும் நிலையில், மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றிப் பெற்றார்.

    மேலும், சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப்பெற்றுள்ளார்.

    இந்நிலையில், இந்தியா ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றுள்ளார்.

    எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

    • 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    • 61 கிலோ எடைப்பிரிவில் 269 எடையை தூக்கி மூன்றாவது இடத்தை இந்தியாவின் குருராஜா பிடித்துள்ளார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இன்றைய 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் 248 கிலோ (113கி +135கி ) எடை தூக்கி 2ம் இடம்பிடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.

    மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    இந்நிலையில், காமல்வெல்த் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெண்கலப் பதக்கம் வெற்றுள்ளார்.

    61 கிலோ எடைப்பிரிவில் 269 எடையை தூக்கி மூன்றாவது இடத்தை இந்தியாவின் குருராஜா பிடித்துள்ளார்.

    இதன்மூலம், இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது.

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2வது சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகின்றனர்.
    • சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.

    3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் காண்கிறார்.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் விளையாடி வரும் நிலையில், மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றிப் பெற்றுள்ளார்.

    மேலும், சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப்பெற்றுள்ளார்.

    • 55 கிலோ எடைப்பிரிபு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்
    • கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் 248 கிலோ (113கி +135கி ) எடை தூக்கி 2ம் இடம்பிடித்தார்.

    மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர். இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீருக்கு சென்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
    • இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பில் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

    சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பாகிஸ்தான் அணியினர் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தனர்.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீருக்கு சென்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த பாகிஸ்தான் வீரர்கள் நாடு திரும்பினர்.

    சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி வழியாக ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி சென்றது, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிலும் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

    • சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தை ரோகித் சர்மா பிடித்தார்.
    • டி20-யில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    தரோபா:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டம் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 44 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) தினேஷ் கார்த்திக் 19 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 68 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங், அஸ்வின், பிஸ்னோய் தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்ததன் மூலம் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். அவர் 21 ரன் எடுத்து இருந்த போது சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

    மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார். 31 அரை சதங்களுடன் அவர் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் விராட் கோலி (30 அரை சதம்). 3-வது இடத்தில் பாபர் அசாம் (27). 4 இடத்தில் டேவிட் வார்னர் (23). குப்தில் (22) அரை சதம் அடித்து 5-வது இடத்தில் உள்ளார்.

    • நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் அதிகப்பட்ச ரன் இதுவாகும்.

    நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20யில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது. 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 254 ரன்கள் எடுத்ததன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் அதிகப்பட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 243 ரன்கள் எடுத்ததே அதிக ரன்னாக இருந்தது. இதன் மூலம் சொந்த சாதனையை நியூசிலாந்து அணி முறியடித்துள்ளது.

    • வெள்ளை நிற காய்களுடன் விளையாடினேன்.
    • இந்த போட்டி 4 மணி நேரம் நீடித்தது.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணியில் இடம்பெற்றுள்ள ஆர்.வைஷாலி முதல் சுற்று வெற்றி குறித்து கூறியதாவது:-

    தஜிகிஸ்தான் வீராங்கனை சபரினாவுடன் நான் முதல் சுற்றில் ஆடினேன். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினேன். இந்த போட்டி 4 மணி நேரம் நீடித்தது. தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் என் வசம் இருந்தது. ஆட்டத்தின் போக்கை மாற்றுவதற்கு கொஞ்சம் நேரமாகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓபன் பிரிவு இந்திய 'ஏ' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சசிகிரண் வெற்றி குறித்து கூறும் போது, தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் மேலும் திறம்பட விளையாடுவோம். அமெரிக்காவை எதிர் கொள்ளும் போட்டி கடும் சவாலாக இருக்கும் என்றார்.

    • கேஎல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிரினிடாட்:

    இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த லோகேஷ் ராகுல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரை ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனையடுத்து அவர் அணியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு கமிட்டி நேற்று அறிவித்தது. இதற்கு முன்னதாக நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    அந்த அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அணியில் விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், இஷான் கிஷன் ஆகியோரும் இடம் பெற்று இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு களம் காணும் அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

    ×