என் மலர்
விளையாட்டு
- பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.
- ஆண்களுக்கான பிரிவில் ஜெரேமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்.
பர்மிங்காம்:
காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது.
காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
ஏற்கனவே மீராபாய் சானு, ஜெரேமி தங்கம் வென்றுள்ள நிலையில், பளு தூக்குதலில் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ளார்.
இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 191 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 101 ரன்களில் சுருண்டது.
சவுத்தாம்ப்டன்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இதையடுத்து நடந்த டி20 தொடரின் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது.
அந்த அணியின் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 70 ரன்களை எடுத்தார். மார்க்ரம் 51 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 17 ரன், கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் 14 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், இங்கிலாந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ஷம்சி 5 விக்கெட்டும், மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 2-1 என டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது ஷம்சிக்கும், தொடர் நாயகன் விருது ஹென்ரிக்சுக்கும் அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்க உள்ளது.
- முதலில் ஆடிய கோவை அணி 138 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய சேப்பாக் அணி 4 ஓவர் மட்டுமே ஆடியது.
கோவை:
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்கின.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் சாய் கிஷோர் 45 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கங்கா ஸ்ரீதர் ராஜு 27 ரன்னும், ஷாருக் கான் 20 ரன்னும் எடுத்தனர்.
சேப்பாக் அணி சார்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட், சாய் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவுசிக் காந்தி ஒரு ரன்னிலும், ஜெகதீசன் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் சேப்பாக் அணி 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, டிஎன்பிஎல் கோப்பை சேப்பாக் மற்றும் கோவை அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
- இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
- ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறினார்.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- முதலில் ஆடிய கோவை அணி 138 ரன்களை எடுத்தது.
கோவை:
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்கின.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் சாய் கிஷோர் 45 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கங்கா ஸ்ரீதர் ராஜு 27 ரன்னும், ஷாருக் கான் 20 ரன்னும் எடுத்தனர்.
சேப்பாக் அணி சார்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட், சாய் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்குகிறது.
- மைதானத்தில் மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9 மணியளவில் டாஸ் போடப்பட்டது.
- கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
கோவை:
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்போட்டி இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று அரங்கேறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (3 முறை) என்ற பெருமைக்குரிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளதால் அந்த அணி பட்டத்தை வெல்ல தீவிர முனைப்பு காட்டும். மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இந்த நிலையில் வழக்கமாக 7.15 மணிக்கு தொடங்கும் டி.என்.பி.எல் போட்டி இன்று மழை காரணமாக டாஸ் போடுவதில் நீண்ட நேரம் தாமதம் ஆகியது. இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர். மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கபட்டால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே போல் மைதானத்தில் மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9 மணியளவில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
லைகா கோவை கிங்ஸ் (விளையாடும் லெவன்): கங்கா ஸ்ரீதர் ராஜு, ஜே சுரேஷ் குமார் சாய் சுதர்சன், ஷிஜித் சந்திரன், ஷாருக் கான், யு முகிலேஷ், அபிஷேக் தன்வார், வள்ளியப்பன் யுதீஸ்வரன், மணீஷ் ரவி, எஸ் அஜித் ராம், பாலு சூர்யா, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (விளையாடும் லெவன்): கௌசிக் காந்தி , என் ஜெகதீசன், எஸ் ராதாகிருஷ்ணன், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், எஸ் ஹரிஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், ஆர் அலெக்சாண்டர், சந்தீப் வாரியர்.
- இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
- இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.
இந்தநிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது.
வானம் தெளிவான பிறகு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையின் காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.
தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய முனிபா அலி 32 ரன்கள் எடுத்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கணையான இரம் ஜாவத் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.
அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய ஷபாலி வர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்மிர்தி மந்தனா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.
இறுதியில், இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய ஈஷாவின் போட்டி டிராவில் முடிந்தது.
- இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்தியா வெற்றிப் பெற்றார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று மூன்றாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. சரியாக, 3 மணியளவில் தொடங்கிய 3-வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்கின.
இந்நிலையில், இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்தியா வெற்றிப் பெற்றார். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எதிரணி வீராங்கனை பங்கேற்காததால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவின் ரவுனக் சத்வானி 3-வது சுற்றில் வெற்றி பெற்றார். சுவிஸ் வீரர் பேபியனை எதிர்கொண்டபோது 38-வது நகர்த்தலில் இந்தியாவின் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார்.
இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய ஈஷாவின் போட்டி டிராவில் முடிந்தது.
தொடர்ந்து, இந்தியாவின் பொதுப்பிரிவு ஏ அணியில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றிப் பெற்றுள்ளார்.
மேலும், இந்திய பொதுப்பிரிவு சி அணியில் விளயைாடிய அபிஜித் குப்தாவும் வெற்றிப் பெற்றுள்ளார். ஐஸ்லாந்து அணி வீரரை எதிர்கொண்டு விளையாடியபோது 36வது நகர்த்தலில் அபிஜித் குப்தா வெற்றி பெற்றார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஓபன் சி அணியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் வெற்றப் பெற்றுள்ளார். ஐஸ்லாந்து வீரர் ஹான்ஸை தனது 36வது நகர்வில் சேதுராமன் வீழ்த்தினார்.
இதேபோல், இந்திய மகளிர் பி பிரிவில் விளையாடிய வந்திகா அகர்வால் வெற்றிப்பெற்றுள்ளார். இந்தோனேஷியா அணி வீராங்கனை சுகந்தரை தனது ௪௫வது நகர்த்தலில் வந்திகா அகர்வால் வீழ்த்தியுள்ளார்.
இதற்கிடையே, இந்திய மகளர் சி பிரிவில் விளையாடிய சாஹிதி ஆஸ்திரியாவின் மேருபரிடம் தோல்வியடைந்துள்ளார்.
- பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.
- ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரிமி தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் 300 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுங்கா முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ள நிலையில், ஜெரிமி இரண்டாவது தங்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், " நமது யுவசக்தி சரித்திரம் படைத்து வருகிறது! ஜெரேமி ல்ரினுங்காவுக்கு வாழ்த்துக்கள். அவர் தனது முதல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் மற்றும் ஒரு அற்புதமான சாதனையையும் படைத்துள்ளார்.
இளம் வயதிலேயே அவர் மகத்தான பெருமையையும், புகழையும் கொண்டு வந்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
- பளுதூக்கும் பிரிவில் இந்தியா தங்கம் வெள்ளி உள்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது.
- பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மேலும் சாதனை படைக்க பிரதமர் வாழ்த்து.
காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
பர்மிங்காமில் காமல்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிந்த்யாராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும், மேலும் இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், 55 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கேத் சர்காருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அபாரமான முயற்சியால் மதிப்புமிக்க வெள்ளியை வெல்வது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இதேபோல் 61 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பி. குருராஜாவிற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல மைல்கல் சாதனைகள் படைக்க வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
- முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம், இந்தியா தோல்வி
- இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிக்கு போராடும் என எதிர்பார்ப்பு
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகள் தீவிரமாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
- குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, வேல்ஸ் அணிகள் மோதின.
- இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தியா- வேல்ஸ் அணிகளுக்கிடையே ஹாக்கி போட்டி நடைபெற்றது. அதில் மகளிர் ஹாக்கி ஏ பிரிவில் நடந்த போட்டியில் வேல்ஸ் அணியை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து 2-வது வெற்றியை இந்திய மகளிர் அணி பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே 5-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.






