search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மழையால் தாமதமாக தொடங்கிய டி.என்.பி.எல் இறுதிப்போட்டி- டாஸ் வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி
    X

    மழையால் தாமதமாக தொடங்கிய டி.என்.பி.எல் இறுதிப்போட்டி- டாஸ் வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி

    • மைதானத்தில் மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9 மணியளவில் டாஸ் போடப்பட்டது.
    • கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்போட்டி இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று அரங்கேறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

    டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (3 முறை) என்ற பெருமைக்குரிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    அதே நேரத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளதால் அந்த அணி பட்டத்தை வெல்ல தீவிர முனைப்பு காட்டும். மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    இந்த நிலையில் வழக்கமாக 7.15 மணிக்கு தொடங்கும் டி.என்.பி.எல் போட்டி இன்று மழை காரணமாக டாஸ் போடுவதில் நீண்ட நேரம் தாமதம் ஆகியது. இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர். மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கபட்டால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதே போல் மைதானத்தில் மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9 மணியளவில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    லைகா கோவை கிங்ஸ் (விளையாடும் லெவன்): கங்கா ஸ்ரீதர் ராஜு, ஜே சுரேஷ் குமார் சாய் சுதர்சன், ஷிஜித் சந்திரன், ஷாருக் கான், யு முகிலேஷ், அபிஷேக் தன்வார், வள்ளியப்பன் யுதீஸ்வரன், மணீஷ் ரவி, எஸ் அஜித் ராம், பாலு சூர்யா, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (விளையாடும் லெவன்): கௌசிக் காந்தி , என் ஜெகதீசன், எஸ் ராதாகிருஷ்ணன், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், எஸ் ஹரிஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், ஆர் அலெக்சாண்டர், சந்தீப் வாரியர்.

    Next Story
    ×