என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் - கப்திலை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா
    X

    ரோகித் சர்மா

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் - கப்திலை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா

    • முதலில் ஆடிய இந்தியா 190 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 122 ரன்களே எடுத்தது.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார்.

    முன்னதாக ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்கு தள்ளினார்.

    ரோகித் சர்மா இதுவரை 129 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,443 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே கப்தில் (3,399 ரன்), விராட் கோலி (3,308 ரன்) ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×