என் மலர்
விளையாட்டு
- முதலில் விளையாடிய நெல்லை அணி 140 ரன்கள் அடித்தது.
- சேப்பாக் அணி வீரர் சாய் கிஷோர் 43 ரன்கள் குவித்தார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
இந்த நிலையில் சேலத்தில் இன்று நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ், கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார்.
ஷாஜகான் 25, சஞ்சய் யாதவ் 21, கேப்டன் பாபா இந்திரஜித் 20, சூர்யபிரகாஷ் 19 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 40 ரன் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் டக் அவுட்டானார்கள். சாய் கிஷோர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். சசியாதவ் 4 ரன்னுடன் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த ராஜகோபால் சதீஷ், ஹரிஷ்குமார் ஜோடி அணியின் வெற்றிக்கு போராடியது.
அதிரடி காட்டிய சதீஷ் 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹரீஷ்குமார் 13 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இதனையடுத்து சேப்பாக் அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்ததுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி.என்.பி.எல்.இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.
- முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவர்களில் 140 ரன்கள் சேர்த்தது.
- அதிகபட்சமாக பாபா அபராஜித் 31 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
இந்த நிலையில் சேலத்தில் இன்று நடைபெறும் முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ், கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார். ஷாஜகான் 25, சஞ்சய் யாதவ் 21, கேப்டன் பாபா இந்திரஜித் 20, சூர்யபிரகாஷ் 19 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்றதால் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கி உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.
அதேசமயம், ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடுகின்றனர். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அல்சாரி, ரோவ்மேன், ஷெப்பர்டு ஆகியோர் நீக்கப்பட்டு, ஹோல்டர், கீமோ மற்றும் கார்ட்டி ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை மாலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டி பற்றி, நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.
இந்த ஜோதி நாடு முழு வதும் 72 நகரங்கள் வழியாக கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் புதுச்சேரி வழியாக கோவை பந்தய சாலைக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றடைந்தது. அங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர் வழியாக இன்று காலையில் மாமல்லபுரம் வந்தடைந்தது. இந்த சுடரை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினார். அப்போது பலூன்கள் பறக்கவிடப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட போலீஸ் ஜீப்பில் ஊர்வலமாக மேள தாளம் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, ரேஸ் பைப், ஜீப் வீரர்கள் அணிவகுப்பு என 5 ஆயிரம் பேர்களுடன் சிறப்பான வரவேற்புடன் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாக மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒலிம்பியாட் ஜோதியை போட்டி நடைபெறும் போர் பாயிண்ட்ஸ் அரங்கத்திற்கு கொண்டு செல்லும் வீரரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வர லட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, பேரூராட்சி தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை வந்தடைந்த ஜோதியை மாநில கல்லூரி மைதானத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் நோக்கி ஜோதி ஓட்டம் தொடங்கியது. ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் ஏந்திச் சென்றார்.
ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் அணிவகுத்து சென்றனர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒலிம்பியாட் ஜோதி நேரு ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மேடைக்கு வந்தடைகிறது. நாளை நடைபெறும் தொடக்க விழாவின்போது இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.
- சிறுமிகளுக்கான போட்டி வெள்ளிக்கிழமையும், சிறுவர்களுக்கான போட்டி சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
- மாநிலம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சார்பில் மாநில வாள்வீச்சு (10 மற்றும் 12 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி காஞ்சீபுரத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 29 மற்றும் 30-ந்தேதிகளில் அங்குள்ள மாவட்ட விளையாட்டு ஸ்டேடியத்தில் (அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம்) நடக்கிறது.
சிறுமிகளுக்கான போட்டி வெள்ளிக்கிழமையும், சிறுவர்களுக்கான போட்டி சனிக்கிழமையும் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் வி. கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- செஸ் ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 19 சுற்றுகளை கொண்டது.
- 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 30 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஆலோசகராக உள்ளார்.
சென்னை:
சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் 1927-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டு இந்தப்போட்டி ஜார்ஜியா நாட்டில் நடந்தது.இதில் சீனா தங்கம் வென்றது. அமெரிக்கா, ரஷியா முறையே 2-வது, 3-வது இடங்களை பிடித்தன.
கொரோனா பாதிப்பு காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பை சென்னை பெற்று உள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் நாளை (28-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ந்தேதி வரை செஸ் ஒலிம்பியாட் திருவிழா நடைபெறுகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு தொடக்க விழா பிரமாண்டமாக நடக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தின் செழுமையான கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாளை தொடக்க விழா மட்டுமே நடைபெறும். 29-ந்தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆரம்பமாகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன. இது பெரிய சாதனையாகும். உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் பங்கேற்கிறார்கள். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 30 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஆலோசகராக உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 19 சுற்றுகளை கொண்டது. சுவிஸ் முறையில் ஆட்டங்கள் நடைபெறும். போட்டிகள் தினசரி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி ஓய்வு தினமாகும்.
தொடக்க விழாவுக்கு முன்பு மாலை 5 மணிக்கு நடுவர்கள் கூட்டம் நடைபெறும். இதே போல முதலாவது ஆட்டம் நடைபெறுவதற்கு முன்பு 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு கேப்டன்கள் கூட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் மாற்று வீரராக இருப்பார். 4 பேர் தான் ஆடுவார்கள்.
வெற்றி பெற்ற அணிகள் வெற்றி பெற்ற அணியுடனும், தோல்வி அடைந்த அணிகள் தோல்வி அடைந்த அணியுடனும் விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். தோற்றால் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. 4 பேர் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒரு நகர்வுக்கு 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும்.
30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் அடிப்படையில் டிராவில் முடித்துக்கொள்ள முடியாது.
சுற்றுகள் முடிவில் அதிக புள்ளிகளை எடுக்கும் அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். 2-வது, 3-வது இடங்களுக்கு முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்படும்.
- தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.
- கடந்த சில நாட்களாக நான் பெற்ற அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் முழு நாட்டிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும் ஏமாற்றம் அடைந்தேன் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்ற 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றது. அதில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசி உலக தடகள சாம்பியன்ஷிப் 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியின் போது காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆகவே அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.
ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி விளையாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நீரஜ் ஜோப்ரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், எனது பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போனதும், நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை இழந்தததும் வருத்தம் அளிக்கிறது. இன்னும் சில தினங்களில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை நினைத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இன்னும் சில தினங்களில் காயங்களில் இருந்து விடுபட்டு விரைவில் களத்திற்கு வருவேன் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக நான் பெற்ற அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் முழு நாட்டிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும் வரும் வாரங்களில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த என்னுடன் சேர உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த். என்று கூறியுள்ளார்.
- இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 360 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி செல்வா சதம் அடித்து அசத்தினார்.
காலே:
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 88.1 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 147 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய முடிவில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் திமுத் கருணாரத்னே 27 ரன்னுடனும், தனஞ்செயா டி சில்வா 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி செல்வா சதம் அடித்து அசத்தினார். கருணாரத்னே அரை சதம் எடுத்து அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 360 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 508 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டியில் விளையாட போவது யார் மற்றும் வெற்றியாளர் யார் என்பதை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
- டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி போன்ற புகழ்பெற்ற மைதானங்களில் நடைபெறுகிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி போன்ற புகழ்பெற்ற மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கடந்த 2021-ல் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையை முதல் முறையாக வென்ற ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இம்முறை கோப்பையை தக்க வைக்க சொந்த மண்ணில் களமிறங்குகிறது.
இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டியில் விளையாட போவது யார் மற்றும் வெற்றியாளர் யார் என்பதை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தும். இறுதி போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் நடப்பு சாம்பியனான அவர்களுக்கு சொந்த மண் சூழ்நிலைகள் சாதகமாக கிடைத்துள்ளது.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து மிகச்சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். தற்போதைய நிலைமையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகளில் மட்டுமே உலகத்தரம் மற்றும் கிளாஸ் நிறைந்த மேட்ச் வின்னர் வீரர்கள் நிறைந்துள்ளார்கள்.
அதேபோல் பாபர் அசாம் ரன்கள் அடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் எதிர்பாராத வகையில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டை நான் அதிகமாக பார்த்துள்ளேன். அந்த வகையில் நியூசிலாந்து அல்லது வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான். இந்த அணிகள் டி20 கிரிக்கெட்டில் மிகவும் விரும்பி விளையாடுகின்றன. மேலும் டி20 அவர்களுக்கு மிகவும் பொருத்தமாகவும் அமைகிறது. எனவே அவர்களில் யாராவது ஒருவர் இறுதிப்போட்டியில் விளையாடினாலும் நான் ஆச்சரியப்பட போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹெட்மயர் இன்று காலை உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
- ஹெட்மயர் கடைசியாக மே மாதம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சிம்ரன் ஹெட்மயர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பூரன் கூறியதாவது:-
ஹெட்மயர் இன்று காலை உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இது ஒரு அற்புதமான செய்தி. எனவே, அவரை முடிந்தவரை விரைவில் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம். எப்போது என்று என்னால் சரியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் நீங்கள் அவரை களத்தில் காணலாம்
இவ்வாறு அவர் கூறினார்.
ஹெட்மயர் கடைசியாக மே மாதம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் முடிந்ததும் நெதர்லாந்து தொடருக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை. இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹெட்மயர் களமிறங்குவார் என வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- ஹரிகாவிற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்ட உள்ளது.
- 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார்.
சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதன்படி, இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
அதில், ஆந்திராவை சேர்ந்த ஹரிகா துரோனவள்ளி (31 வயது) நிரைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்குகிறார். உலக தரவரிசையில் ஹரிகா 11-வது இடத்தில் உள்ளார். ஹரிகா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனது 9 வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டம் வெற்றார். தனது 10-வது வயதிலும் ஹரிகா மீண்டும் தேசிய அளவிலான செஸ் போட்டியில் பதக்கத்தையும் வென்றார்.
செஸ் உலகின் வெற்றிநடைபோட்டு வரும் ஹரிகாவுக்கு 2008-ல் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார். இவர் 2011- ல் நடந்த செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரது சாதனைகளை மேலும் சிறப்பிக்கும் விதமாக 2019-ல் ஹரிகாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வெல்லும் முனைப்பில் ஹரிகா மனதளவிலும், உடலளவிலும் தயாராகி வருகிறார். ஹரிகா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்காக மாமல்லபுர செஸ் ஒலிம்பியாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹரிகாவிற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்ட உள்ளது. செஸ் விளையாட்டை பொறுத்தவரை நீண்ட நேரம் அமர்ந்து விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
- ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
- ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா காயத்தால் கடைசி நேரத்தில் விலகி உள்ளார்.
பர்மிங்காம்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
கடைசியாக காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடந்தது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.
22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நாளை (28-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 8 -ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து , நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
நீச்சல், தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் உள்பட 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடக்கிறது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 111 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள்.
தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், (மகளிர்), சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஆக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்கு வாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் , 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கம் பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இந்த முறை அதைவிட கூடுதலாக பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி சிந்து , மீராபாய் சானு, ரவி தஹியா , மாணிக் பத்ரா, லவ்லினா, நிகத் ஜரின் உள்ளிட்டோர் பதக்கம் வெல்வார்கள் என்று கருதப்படுகிறது. ஆக்கியிலும், மகளிர் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு உள்ளது.
ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா காயத்தால் கடைசி நேரத்தில் விலகி உள்ளார். துப்பாக்கி சுடுதல் போட்டி இல்லாதது இந்தியாவுக்கு பாதிப்பே.
நாளை தொடக்க விழா நிகழ்ச்சி மட்டுமே நடக்கிறது. 29-ந்தேதியில் இருந்து போட்டிகள் ஆரம்பமாகிறது.






