என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்துடன் களமிறங்கியது இந்தியா
    X

    கடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்துடன் களமிறங்கியது இந்தியா

    • டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்றதால் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கி உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

    அதேசமயம், ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடுகின்றனர். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அல்சாரி, ரோவ்மேன், ஷெப்பர்டு ஆகியோர் நீக்கப்பட்டு, ஹோல்டர், கீமோ மற்றும் கார்ட்டி ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×