என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் விளையாடிய மதுரை அணி 126 ரன்களை எடுத்தது.
    • கோவை அணி விளையாடும் போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிப்பு

    8 அணிகள் பங்கேற்ற 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், இன்று சேலத்தில் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி, ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியை எதிர் கொண்டது.

    டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆதித்யா 17 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அனிருத் 7 ரன்னிலும், கேப்டன் சதுர்வேத் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஜெகதீசன் கவுசிக் 17 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் பொறுப்புடன் ஆடினார். அருண் கார்த்திக் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார், அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 127 ரன்கள் என்ற இலக்குடன் கோவை அணி களம் இறங்கியது. 9.5 ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. கோவை தொடக்க வீரர்கள் ஸ்ரீதர் ராஜூ 49 ரன்னும், சுரேஷ்குமார் 20 ரன்னும் எடுத்த களத்தில் இருந்தனர்.

    மழை தொடர்ந்த நிலையில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி கோவை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டி.என்.பி.எல். தொடரில் இருந்து மதுரை அணி வெளியேறியது. கோவை அணி அடுத்ததாக, நாளை நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோதுகிறது.

    • வெளியேற்றுதல் சுற்றில் மதுரை, கோவை அணிகள் மோதின.
    • முதலில் ஆடிய மதுரை அணி 126 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சை அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆதித்யா 17 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அனிருத் 7 ரன்னிலும், கேப்டன் சதுர்வேத் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 17 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் பொறுப்புடன் ஆடினார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது. அருண் கார்த்திக் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார், அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 127 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    • பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

    கல்லே:

    இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கல்லேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 315 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இலங்கை 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. 3-வது நாளான இன்று பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடியது. ரமேஷ் மெண்டிஸ் மற்றும் ஜெயசூர்யாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இந்நிலையில் 2-வது இன்னிங்சை இலங்கை அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களா டிக்வெலா - பெர்ணாண்டோ களமிறங்கினர். 15 ரன்னிலும் பெர்ணான்டோ 19 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 15, மேத்யூஸ் 35, தினேஷ் சண்டிமால் 21 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இரு அணிகளும் நாளை மோதுவது 139-வது ஆட்டமாகும்.
    • 2 ஆட்டம் டை ஆனது. 4 போட்டி முடிவு இல்லை.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை (27-ந் தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

    இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஹாட்ரிக் பெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஒயிட் வாஷ் செய்யும் வகையில் இந்திய வீரர்கள் அதே உத்வேகத்துடன் விளையாடுவார்கள்.

    முதல் 2 போட்டியிலும் விளையாடாத வீரர்களுக்கு நாளைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம். என்று தெரிகிறது. இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோர் இதுவரை 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. காயம் காரணமாக ஜடேஜாவும் ஆடவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்தது. தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.

    நிக்கோலஸ் பூரண் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அடையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி இரண்டு ஆட்டத்திலும் கடுமையான போராட்டத்துக்கு பிறகே தோற்றது. இதனால் அந்த அணி வீரர்கள் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 139-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 138 ஆட்டத்தில் இந்தியா 69-ல் வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டம் டை ஆனது. 4 போட்டி முடிவு இல்லை.

    • ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களில், ஜெஸ் ஜோனாசென் நான்கு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
    • டி20 போட்டிகளில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்திய கேத்ரின் ப்ரண்ட் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய கேப்டன் சக தோழமை வீரரான பெத் மூனியை வீழ்த்தினார், அவர் மூன்று மதிப்பீடு புள்ளிகள் பின்தங்கியிருந்தார்

    ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் சக நாட்டு வீராங்கனையான பெத் மோனியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். முத்தரப்பு தொடரில் அயர்லாந்துக்கு எதிராக 74 ரன்கள் எடுத்த நிலையில் லானிங் முதலிடத்திற்கு முன்னேறினார். மூனி (728) லானிங் (731) புள்ளிகள் எடுத்துள்ளனர். சோஃபி டெவின் மற்றும் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

    தற்போது ஒருநாள் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் லானிங் 2014-ல் முதல் முறையாக டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார். மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் தவிர, நவம்பர் 2016 வரை அவர் முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு முதல் முறையாக அவர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார்.

    அவர் 1,020 நாட்கள் முதலிடத்தில் இருந்தார். இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (1,092) மற்றும் கரேன் ரோல்டன் (1,085) ஆகியோருக்குப் பின் அவர் முதலிடத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களில், ஜெஸ் ஜோனாசென் நான்கு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்தார். அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர் நிகோலா கேரெட் மேலும் 20 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்திய கேத்ரின் ப்ரண்ட் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் அயபோங்கா காக்கா இந்த தொடரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

    • இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
    • இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்டல் மைதானத்தில் நாளை நடக்கிறது.

    பிரிஸ்டல்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 62 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து 118 ரன் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. 3-வது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

    அடுத்து இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடர் நடக்கிறது. இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்டல் மைதானத்தில் நாளை (27-ந் தேதி) நடக்கிறது. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இரு அணிகளும் உள்ளன. இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2017-ல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தங்கள் மகனுக்கு கவிர் என்று பெயரிட்டுள்ளனர்.
    • பாண்டியா இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

    இந்தியா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கிரிக்கெட் வீரர் குர்ணால் பாண்டியா மற்றும் அவரது மனைவி பன்குரி ஷர்மாவுக்கு ஜூலை 24 அன்று ஆண் குழந்தை பிறந்தது. 2017-ல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தங்கள் மகனுக்கு கவிர் என்று பெயரிட்டுள்ளனர்.

    சச்சின், விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    ஞாயிற்றுக்கிழமை பாண்டியா இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்தப் பதிவு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.

    • காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகி உள்ளார்.
    • நீரஜ் சோப்ரா கடந்த 24-ந் தேதி அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகி உள்ளார்.

    ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா கடந்த 24-ந் தேதி அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது காயம் அடைந்ததால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கவில்லை என்று நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • ஆகா சல்மான் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார்.
    • இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கல்லே:

    இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கல்லேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 315 ரன்களை எடுத்திருந்தது. சண்டிமால் 80 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    டிக்வெலா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டிக்வெலா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். முதல் இன்னிங்சில் இலங்கை 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷாதிக் டக் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 16 ரன்னும், இமாம் உல் ஹக் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    3-வது நாளான இன்று பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடியது. ரமேஷ் மெண்டிஸ் மற்றும் ஜெயசூர்யாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • சாய் ஹோப் 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
    • நூறாவது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஹோப் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சாய் ஹோப் 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

    நூறாவது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஹோப் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள வீரர்கள் யாரும் தாங்கள் விளையாடிய ஐம்பதாவது மற்றும் நூறாவது போட்டியில் சதம் விளாசியது கிடையாது. ஆனால் சாய் ஹோப் தனது நூறாவது போட்டியில் அடித்த சதத்தின் மூலம் சாதனையை படைத்துள்ளார்.

    ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக தனது ஐம்பதாவது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த சாய் ஹோப் 170 ரன்கள் அடித்த வேளையில், நூறாவது ஒருநாள் போட்டியிலும் 115 ரன்கள் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50-வது மற்றும் நூறாவது போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனையை ஒருநாள் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சதுர்வேதி தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • வெற்றி காணும் அணி முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோதும்.

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    இன்று இரவு 7.15 மணிக்கு சேலத்தில் நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் சதுர்வேதி தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி காணும் அணி முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோதும்.

    • இந்தியா தரப்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் பங்கேற்கின்றன.
    • விஸ்வநாதன் ஆனந்த் 50 வயதை கடந்தாலும் செஸ் உலகில் இன்னும் மிகப் பெரிய சக்தியாக இருக்கிறார்.

    சென்னை:

    மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தரப்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் ஆக மொத்தம் 6 அணிகள் ( 30 வீரர் , வீராங்கனைகள்) பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

    கோனேரு ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் 'ஏ' அணி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் 'ஏ' அணி தங்கப்பதக்கம் வெல்லும் என்று பயிற்சியாளர் ஷியாம் சுந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அணியில் உள்ள வீராங்கனைகள் பெரும்பாலானவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். பல ஆண்டுகளாக உயர்ந்த நிலையில் ஆடி வருகின்றனர். இதனால் மகளிர் 'ஏ' அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    இந்த போட்டிக்காக அணியை தயார்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. அவர்கள் நல்ல உடல் நிலையில் இருக்கிறார்கள். அவர்களது மனநிலையும் சரியான நிலையில் உள்ளதால் அழுத்தம் இல்லாமல் செயல்பட முடியும்.

    வலிமையான ரஷியா சீனா பங்கேற்காததால் இரு பிரிவுகளிலும். ( ஓபன் மற்றும் பெண்கள்) இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்பதால் சாதகமும் பாதகமும் என இரு நிலையும் இருக்கிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது சதுரங்கத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த விளையாட்டுக்கும் பெரிய ஊக்கமாக இருக்கும். விளையாட்டை இளைஞர்கள் அதிக ஆர்வமாக எடுத்து கொள்வார்கள். மேலும் அதை ஒரு தொழிலாக கருதுவார்கள்.

    விஸ்வநாதன் ஆனந்த் 50 வயதை கடந்தாலும் செஸ் உலகில் இன்னும் மிகப் பெரிய சக்தியாக இருக்கிறார். மேலும் தொடர்ந்து மக்களை ஊக்கு வித்து வருகிறார்.

    இவ்வாறு பயிற்சியாளர் ஷியாம் சுந்தர் கூறினார்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கம் கிடைத்துள்ளது. 2020-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் நடந்த போட்டியில் இந்திய அணி ரஷியாவுடன் இணைந்து தங்கம் வென்றது. 2014-ம் ஆண்டு நார்வேயில் நடந்த போட்டியிலும், கடந்த ஆண்டு இணையம் வழியாக நடந்த போட்டியிலும் வெண்கல பதக்கம் கிடைத்தது.

    ×