search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எலிமினேட்டர் சுற்று - கோவை அணி வெற்றிபெற 127 ரன்களை நிர்ணயித்தது மதுரை அணி
    X

    அருண் கார்த்திக்

    எலிமினேட்டர் சுற்று - கோவை அணி வெற்றிபெற 127 ரன்களை நிர்ணயித்தது மதுரை அணி

    • வெளியேற்றுதல் சுற்றில் மதுரை, கோவை அணிகள் மோதின.
    • முதலில் ஆடிய மதுரை அணி 126 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சை அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆதித்யா 17 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அனிருத் 7 ரன்னிலும், கேப்டன் சதுர்வேத் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 17 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் பொறுப்புடன் ஆடினார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது. அருண் கார்த்திக் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார், அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 127 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×