search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரமேஷ் மெண்டிஸின் சுழலில் சிக்கிய பாகிஸ்தான் அணி - 231 ரன்னில் ஆல் அவுட்
    X

    ரமேஷ் மெண்டிஸின் சுழலில் சிக்கிய பாகிஸ்தான் அணி - 231 ரன்னில் ஆல் அவுட்

    • ஆகா சல்மான் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார்.
    • இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கல்லே:

    இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கல்லேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 315 ரன்களை எடுத்திருந்தது. சண்டிமால் 80 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    டிக்வெலா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டிக்வெலா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். முதல் இன்னிங்சில் இலங்கை 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷாதிக் டக் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 16 ரன்னும், இமாம் உல் ஹக் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    3-வது நாளான இன்று பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடியது. ரமேஷ் மெண்டிஸ் மற்றும் ஜெயசூர்யாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×