என் மலர்
விளையாட்டு
- இந்த போட்டியில் ரோகித் சர்மா, அர்தீப்சிங் ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.
- இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
2022 டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தற்போது பெர்த் நகரில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், 2வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் விராட் கோலிக்கும், சூர்யகுமார் யாதவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனாக ராகுல் செயல்பட்டார்.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அர்தீப்சிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பவர்பிளேவில் ஹர்திக் பாண்டியா பந்தவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் அவர் அதிவேகமாக பவுண்சர்களை வீசி நெருக்கடி அளித்தாலும், வெஸ்ட்டர்ன் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களை குவித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் வெஸ்ட்டர்ன் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், ஹர்சல் 2 விக்கெட்டும்,ஆர்ஸ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - ரிஷப் பண்ட் ஆடினர். ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் தீபக் ஹூடா 6 ரன்னிலும் வெளியேறினர். இந்நிலையில் கேஎல் ராகுலுடன் பாண்ட்யா ஜோடி சேர்ந்து ஆடினார்.
17 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட்யாவும் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார். அடுத்த வந்த அக்சர் படேல் 2 ரன்னிலும் தினேஷ் கார்த்திக் 10 ரன்னிலும் நடையை கட்டினர். நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் 74 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட்டர்ன் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, அர்தீப்சிங் ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.
- முத்தரப்பு தொடரில் வங்களா தேசம் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
- முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.
முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்காள தேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் சகீப் அல்ஹசன் மற்றும் தாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் வங்காள தேசம் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் -பாபர் அசாம் ஜோடி நிதானமாக ஆடி அரை சதம் அடித்தனர். பாபர் 40 பந்துகளில் 55 ரன்களிலும் அடுத்து வந்த அலி 0 ரன்னிலும் வெளியேறினர்.
இதனையடுத்து வந்த முகமது நவாஸ் -ரிஸ்வான் ஜோடி அதிரடியாக விளையாடினார். ரிஸ்வான் 69 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய நவாஸ் 20 பந்துகளில் 45 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 19.5 ஓவரில் பாகிஸ்தான் அணி 177 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டார்.
நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதிய முத்தரப்பு தொடரில் வங்களா தேசம் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.
- இந்திய பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் வீட்டில் அடிப்படை வசதி இல்லை.
- அஸ்டம் ஊருக்கு தார்சாலை அமைக்கும் பணியில் அவரது பெற்றோரும் கலந்து கொண்டு தினக்கூலியாக வேலை செய்தனர்.
திருப்பதி:
ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் அஸ்டம் (வயது 17). இவர் 17 வயதுக்கு உட்பட்டவர்க்கான இந்திய பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக உள்ளார். இவருடன் பிறந்தவர்கள் 5 பேர். இவரது பெற்றோர் தினமும் கூலி வேலை செய்தால் மட்டுமே சாப்பிட முடியும்.
தனது மகள் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தாலும் இவர்கள் தினமும் கூலி வேலை செய்து வந்தனர்.
அஸ்டம் வசித்து வரும் ஊரில் யார் வீட்டிலும் டிவி இல்லை. அஸ்டம் இந்திய அணிக்காக விளையாடுவதை டிவியில் பார்க்க வேண்டும் என அவரது பெற்றோர் ஆசைப்பட்டனர்.
வீட்டில் டிவி வாங்குவதற்காக கூலி வேலை செய்து வரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வந்தனர்.

அஸ்டமின் வீட்டில் டிவி இல்லை என்பது குறித்து ஒரு சில பத்திரிகைகளில் செய்தி வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அஸ்டமின் வீட்டிற்கு டி.வி, இன்வெர்ட்டர், டி.டி.எச் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து தந்தனர். மேலும் அவரது ஊருக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அஸ்டம் ஊருக்கு தார்சாலை அமைக்கும் பணியில் அவரது பெற்றோரும் கலந்து கொண்டு தினக்கூலியாக வேலை செய்தனர்.
- ஒரு நாள் போட்டி தர வரிசையில் விராட் கோலிக்கு சரிவு ஏற்பட்டு உள்ளது.
- டி20 பந்து வீச்சை பொறுத்தவரை 'டாப்10'ல் இந்திய வீரர்கள் யாரும் இல்லை.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கும் அவருக்கும் 15 புள்ளிகளே வித்தியாசம் இருக்கிறது. ரிஸ்வான் 853 புள்ளிகளுடன் இருக்கிறார்.
32 வயதான சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர்தான் அதிக ரன் குவித்து இருந்தார்.
'டாப்10' வரிசையில் இந்திய வீரர்களில் சூர்ய குமார் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார். லோகேஷ் ராகுல் 13-வது இடத்திலும் (606 புள்ளிகள்), முன்னாள் கேப்டன் விராட் கோலி 14-வது இடத்திலும் (605 புள்ளி), கேப்டன் ரோகித் சர்மா 16-வது இடத்திலும் (604 புள்ளி) உள்ளனர்.
பாபர் அசாம் (பாகிஸ்தான்) மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா), கான்வாய் (நியூசிலாந்து), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), நிஷங்கா (இலங்கை), முகமது வாசிம் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் 3 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.
பந்து வீச்சை பொறுத்தவரை 'டாப்10'ல் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. புவனேஸ்வர் குமார் 638 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளார்.
ஹாசில்வுட் (ஆஸ்திரேலியா) 732 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்), 2-வது இடத்திலும், ஹசரங்கா (இலங்கை) 3-வது இடத்திலும் உள்ளனர்.
ஒரு நாள் போட்டி தர வரிசையில் விராட் கோலிக்கு சரிவு ஏற்பட்டு உள்ளது. 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு பின் தங்கி உள்ளார். அவர் 722 புள்ளிகளை பெற்று உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 718 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார்.
இந்த இருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவில்லை. தவான் 17-வது இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தானின் வீரர்களான பாபர் அசாம், இமாம்-உல் ஹக் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 5 இடங்கள் முன்னேறி உள்ளார். 30-வது இடத்தில் இருந்து அவர் 25-வது இடத்துக்கு வந்து உள்ளார். பும்ரா தொடர்ந்து 10-வது இடத்தில் நீடிக்கிறார். யசுவேந்திர சாஹல் 20-வது இடத்தில் உள்ளார்.
டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து) ஹாசில்வுட் (ஆஸ்திரேலியா), முஜிபுர் ரகுமான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.
- இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
- தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்தது.
சில்ஹெட்:
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரைஇறுதியில் இந்தியா -தாய்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து அணி விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நாட்டாய பூச்சாதம் 21, நருமோல் சாய்வாய் 21 ரன்கள் எடுத்தனர். அந்த 2 பேரை தவிய யாருமே 2 இலக்க ரன்களை எடுக்கவில்லை. இதில் 3 பேர் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தனர்.
இறுதியில் தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பெண்கள் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது.
- இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
- அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்களும் கவூர் 36 ரன்களும் எடுத்தனர்.
சில்ஹெட்:
8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 பு]ள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின. இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் காலை முதலாவது அரைஇறுதியில் இந்தியா -தாய்லாந்தை எதிர்கொள்கிறது.
இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்களும் கவூர் 36 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து அணி விளையாடி வருகிறது.
- மாற்று வீரர்களாக இந்திய அணியில் இடம் பெறுகின்றனர்.
- காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் அணியில் இருந்து விலகினர்.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
காயம் காரணமாக நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் காயமடைந்துள்ளதால் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில் மாற்று வீரர்கள் பட்டியலில் புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கின்றனர். எனினும் மூன்று பேரில் யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஷமியின் உடற்தகுதி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே அவர் அணியில் இடம் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி பெர்த்தில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. பின்னர் பிரிஸ்பேனுக்குச் செல்லும் இந்தியா வீரர்கள் அங்கு இரண்டு ஆட்டங்களில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒலிம்பிக் போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியிருந்தார்.
- ஊக்க மருந்து பயன்படுத்தியதை அவர் ஒப்புக் கொண்டார்.
இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான கமல்பிரீத் கவுர், டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் 2வது இடம் பிடித்தார். இறுதி போட்டியில் அவருக்கு 6வது இடம் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 7ந் தேதி அவரிடம் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட ஸ்டானோசோலோல் என்ற ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானது. கடந்த ஏப்ரல்11ந் தேதி ஊக்க மருந்து பயன்படுத்தியதை கமல்பிரீத் கவுர் ஒப்புக் கொண்டார்.
முன்னதாக கமல் பிரீத் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து, தடகள ஒருமைப்பாடு பிரிவு அறிவித்துள்ளது. இந்த தடை காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2024 ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கமல்பிரீத் கவுர் பங்கேற்க முடியாது.
- 128 பதக்கங்களை வென்ற சர்வீசஸ் அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.
- ஹாஷிகா ராமச்சந்திராவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது.
சூரத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வந்தன. நேற்றுடன் அந்த போட்டிகள் நிறைவடைந்தன. இதில் சர்வீசஸ் அணி ஒட்டுமொத்தமாக 61 தங்கம், 35 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் உள்பட 128 பதக்கங்களை கைப்பற்றி முதலிடம் பிடித்தது.
39 தங்கம், 38 வெள்ளி, 63 வெண்கலம் உள்பட 140 பதக்கங்களை கைப்பற்றிய மகாராஷ்டிரா அணி 2வது இடத்தை பிடித்தது. 38 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் உள்பட 116 பதக்கங்களுடன் அரியானா அணி 3வது இடத்தில் இருந்தது. 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 74 பதக்கங்களை வென்ற தமிழக அணி பதக்கப் பட்டியலில் 5 இடத்தில் நீடித்தது.

நேற்று நடைபெற்ற வண்ண மிகு நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், முதலிடம் பிடித்த சர்வீசஸ் அணி நிர்வாகத்திடம் கோப்பையை வழங்கினார்.
ஐந்து தனிநபர் தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் எட்டு பதக்கங்களை வென்று கேரளாவை சேர்ந்த சஜன் பிரகாஷ், சிறந்த ஆண் தடகள வீரருக்கான விருதை பெற்றார்.

ஆறு தங்கப் பதக்கங்கள் உள்பட 7 பதக்கங்களை வென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 14 வயதான ஹாஷிகா ராமச்சந்திராவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டிகளுக்கான கொடி, கோவா விளையாட்டுத்துறை அமைச்சர் கோவிந்த் கவுட் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல்
- இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்போது நடந்தாலும் அது முக்கியமானதாக இருக்கும்.
இஸ்லாமாபாத்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.
போட்டி தொடங்க சில தினங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தீபக் சாஹரும் காயம் காரணமாக உலகக்கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, இந்தியாவின் முக்கிய போட்டி அணியாக கருதப்படும் பாகிஸ்தான் அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த அவர் விரைவில் அணியில் இணைய உள்ளார்.
இந்த சூழ்நிலைகள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்போது நடந்தாலும் அது முக்கியமானதாக இருக்கும். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு வலுவாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கை இன்னும் மேம்படுத்த வேண்டும். இந்தியா தற்போது பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அவர்களிடம் பும்ரா இல்லை. அது பெரிய இழப்பு. ஷாஹீன் ஷா அப்ரிடி மீண்டும் உடற்தகுதி பெற்று விளையாடினால், எங்களின் வேகப்பந்து வீச்சு மேலும் வலுவடையும். சமீபத்திய ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள் என்பதைப் பார்க்கும்போது, அவர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது, எனவே பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.
- முதல் டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மலான் 82 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.
அந்த அணி 20 ரன்னில் முதல் விக்கெட்டை(பிஞ்ச்) இழந்தது. அடுத்த ஓவரில் வார்னர் அவுட் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் (8 ரன்னில்)வந்த வேகத்தில் வெளியேறினார். இதனையடுத்து மிட்செல் மார்ஷ் - டிம் டேவிட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
மிட்செல் மார்ஷ் 45 ரன்னிலும் டிம் டேவிட் 40 ரன்னிலும் ஆட்டமிழக்க இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக மலான் தேர்வு செய்யப்பட்டார்.
முதல் டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.
- பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் முகமது சமி ஆடும் லெவனில் இடம் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக சமியை தேர்வு செய்வதற்கு மாற்றாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் காரணத்துடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். சமி நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் ஒருசில பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு நேரடியாக உலக கோப்பையில் விளையாடுவது நிச்சயம் சரியான வழியல்ல.
இருப்பினும் தற்சமயத்தில் 15ஆவது வீரராக யாரும் தேர்வு செய்யப்படாத நிலையில் சமி ஆஸ்திரேலியாவுக்கு செல்வாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் எந்த டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பதே பிரச்சனையாகும்.
அவரிடம் தரமும் திறமையும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.
இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.






