search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தாய்லாந்துக்கு 149 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய பெண்கள் அணி
    X

    தாய்லாந்துக்கு 149 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய பெண்கள் அணி

    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
    • அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்களும் கவூர் 36 ரன்களும் எடுத்தனர்.

    சில்ஹெட்:

    8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 பு]ள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

    நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின. இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் காலை முதலாவது அரைஇறுதியில் இந்தியா -தாய்லாந்தை எதிர்கொள்கிறது.

    இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்களும் கவூர் 36 ரன்களும் எடுத்தனர்.

    இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து அணி விளையாடி வருகிறது.

    Next Story
    ×