என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 182 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும். அவருக்கு பக்கபலமாக ஆடிய விராட் கோலி சதமடித்தார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது, எபாட் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும்,

    மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 511 ரன்னும், 2வது இன்னிங்சில் 199 ரன்னும் எடுத்து டிக்ளேர் செய்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 511 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லபுசேன் 163 ரன்னிலும், ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், டேவன் தாமஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சந்தர்பால் 47 ரன்னும், பிலிப் 43 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் லயோன் 3 விக்கெட்டும், ஸ்டார்க், நீசர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    297 ரன்கள் முன்னிலை பெற்ற அஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கவாஜா அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், ரூஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 497 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.

    மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இன்னும் இரண்டு நாள் ஆட்டம் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது.

    • இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
    • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியிட்டார்.

    சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி இன்று தேர்வானார். இதன்மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றுள்ளார்.

    • போர்ச்சுக்கல் வீரர்கள் அடித்த அனைத்து கோல்களையும் ரொனால்டோ கொண்டாடினார்.
    • ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.

    தோஹா:

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், கோல் மெஷின் என அழைக்கப்படும் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோ (வயது 37), களமிறக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.

    சுவிட்சர்லாந்துடனான போட்டி தொடங்கியபோது, தேசிய அணியில் இருந்து விலகப் போவதாக மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோசுடனான உரையாடலின்போது இதனை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு விளக்கம் அளித்தது. அதில், "கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த நேரத்திலும் கத்தாரில் தேசிய அணியை விட்டு வெளியேறுவதாக மிரட்டவில்லை. அவர் தேசிய அணிக்காகவும் நாட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சாதனையை உருவாக்குகிறார். இதை மதிக்க வேண்டும்" என கூறியிருந்தது.

    இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரொனால்டோ குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டி நடைபெற்ற நாளில் மதிய உணவுக்குப் பிறகு ரொனால்டோவை எனது அலுவலகத்திற்கு அழைத்தேன். அவர் எப்போதும் ஆரம்பத்திலேயே களமிறங்கியதால், நான் எடுத்த முடிவு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

    இது ஒரு நல்ல யோசனை என்று நினைக்கிறீர்களா? என என்னிடம் கேட்டார். இந்த உரையாடல் சாதாரணமாகவே இருந்தது. நான் எனது கருத்துக்களை விளக்கினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார். வெளிப்படையாகவும் சாதாரணமாகவும் உரையாடினோம். அப்போது அவர் தேசிய அணியை விட்டு வெளியேற விரும்புவதாக என்னிடம் ஒருபோதும் கூறவில்லை.

    அவர் தனது சக வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்தார். மேலும் நாங்கள் அடித்த அனைத்து கோல்களையும் கொண்டாடினார். இறுதியில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சக வீரர்களை அழைத்தார். அவரை விட்டுவிடுங்கள். அவரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், 90 சதவீத கேள்விகள் அவரைப் பற்றியே இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரொனால்டோவுக்கு பதிலாக களமிறங்கிய ஸ்ட்ரைக்கர் கோன்கலோ ராமோஸ் (21) ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

    எனினும், இன்று மொராக்கோவுடனான காலிறுதி ஆட்டத்தில் ரொனால்டோவுக்கான கதவு திறந்திருக்கிறது என பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார். இது வித்தியாசமான ஆட்டமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த வீரராக இருந்தாலும், களத்தில் இறக்கப்படாமல் மாற்று வீரராக வெளியில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்றும் பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார்.

    • கிரிக்கெட்டில் மாற்று வீரர் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ முடியாது.
    • தலையில் அடிபட்டு அதிர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறங்க முடியும்

    கிரிக்கெட்டில் மாற்று வீரர் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ முடியாது.கிரிக்கெட்டில் 11 வீரர்கள் களம் இறங்கி விளையாட முடியும். ஒருவேளை ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கலாம். ஆனால் இவரால் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது.

    இதனால், ஒரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் காயம் அடைந்தால், அந்த அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். அதேபோல்தான் பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால், பந்து வீச்சில் சிரமம் ஏற்படும்.

    இதனால் மாற்று வீரர்கள் ஏன் ஆக்டிவ் வீரராக செயல்படக் கூடாது? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அது ஒரு அணிக்கு சாதகமாக முடிந்து விடும் என்பதால் ஐ.சி.சி. இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த முறையை அமல்படுத்தாமல் உள்ளது.

    சில வருடங்களுக்கு முன், ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு அவரால் விளையாட முடியாது நிலை ஏற்பட்டால், மருத்துவர்கள் அறிவுரையின்படி மாற்று வீரரை களம் இறக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மாற்று வீரரை அக்டிவ் வீரராக செயல்பட பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதனை அறிமுகப்படுத்த இருக்கிறது.

    ஒரு அணியில் அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்கலாம். 7 இந்திய வீரர்கள் இடம் பெறவேண்டும். தற்போது இந்திய வீரரை மட்டும் மாற்றம் செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

    அதன்படி மாற்று வீரராக களம் இறங்கும் வீரர் பந்து வீச முடியும். பேட்டிங் செய்ய முடியும். கால்பந்து, ரக்பி போன்ற போட்டிகளில் மாற்று வீரர்கள் ஆக்டிவ் வீரராக செயல்படுவார்கள். அதேபோன்று இதிலும் கொண்டு வர பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

    இதற்கு முன்னோட்டமாக இந்தியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சையது முஷ்டாக் அலி தொடரில் பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கு வரவேற்பு கிடைக்கவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வரவிருக்கிறது.

    ஆனால், அதுகுறித்து முழுமையாக விதிமுறையை பி.சி.சி.ஐ. இன்னும் வெளியிடவில்லை. ஐ.பி.எல். அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகம் இறுதி முடிவை அறிவிக்கும்.

    • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது..
    • இஷான் கிஷன் இரட்டைச் சதமடித்தார். விராட் கோலி சதமடித்தார்.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.

    டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.

    இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடினார். கோலி சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.

    • வங்காளதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
    • இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார்.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.

    இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    • உள்நாட்டு கிரிக்கெட்டில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்
    • ரஞ்சி கோப்பையில் ஒரு சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்

    இந்திய அணியில் அறிமுகமாகி அதன்பின் காணாமல் போன வீரர்களில் ஏராளமானோர். அதில் ஒருவர் ஜெய்தேவ் உனத்கட்டும் ஒருவர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் ஜெய்தேவ் உனத்கட். அப்போது அவருக்கு 19 வயது. அதன் பிறகுடெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் அவர், உள்நாட்டு தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் அணியில் நிரந்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இவரை அணிகள் வாங்கின.

    இதுவரை ஒரு டெஸ்ட், ஏழு ஒருநாள், 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால், இதுவரை ரஞ்சி டிராபியில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    2019-2020 ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தார்.

    வங்காளதேச அணிக்கெதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் முகமது சமி இடம் பிடித்திருந்தார். அவர் காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2010-ம் ஆண்டு டெஸ்ட் அணியில் விளையாடி அதன்பின் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அணியில் இடம் கிடைத்துள்ளது. ஒருவேளை ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்தால் அறிமுக போட்டிக்குப்பின் 12 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.

    • இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
    • காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை வீழ்த்திய வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. கேப்டனாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடரை இழந்த நிலையில், இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    • மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
    • ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.

    தோகா:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெறும் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

    போர்ச்சுக்கல் அணி 3-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவையும், 2-0 என்ற கணக்கில் உருகுவேயையும் தோற்கடித்து இருந்தது. தென் கொரியாவிடம் 1-2 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    போர்ச்சுக்கல் 12 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான 2-வது சுற்றில் அந்த வீரர்கள் அபாரமாக ஆடினார்கள்.ரொனால்டோ இடத்தில் இடம் பெற்ற ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார். புருனோ பெர்னாண்டஸ், பெப்பே , ரபெல் லியோ போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    மொராக்கோ முதல் முறையாக உலக கோப்பை அரைஇறுதிக்கு நுழைந்து புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.

    மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை. லீக் சுற்றில் பெல்ஜியம்(2-0), கனடா (2-1 ) அணிகளை வீழ்த்தி இருந்தது. குரோஷியாவுடன் கோல் எதுவும் இல்லாமல் டிரா செய்தது. 2-வது ரவுண்டில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.

    போர்ச்சுக்கல் அணிக்கு எல்லா வகையிலும் மொரோக்கோ சவால் கொடுக்கும். இதனால் போட்டி பரபரப்பாக இருக்கும்.

    இரு அணிகள் 2 முறை முறை மோதியுள்ளன. இதில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

    அல்கோரில் உள்ள அல்பயத் மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி கால் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும்.

    பிரான்ஸ் 7-வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (4-1), டென்மார்க்கை ( 2-1 ) வீழ்த்தி இருந்தது. துனிசியாவிடம் (0-1) தோற்றது. 2-வது சுற்றில் 3-1 என்ற கணக்கில் போலந்தை தோற்கடித்தது.

    பிரான்ஸ் அணியில் எம்பாப்வே (5 கோல்), ஆலிவர் ஜிரவுட் ( 3 கோல்) , ரேபியாட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி 4-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணி தோல்வி எதையும் சந்திக்கவில்லை. ஈரான் ( 6-2 ) , வேல்சை (3-0) வீழ்த்தியது. அமெரிக்காவுடன் (0-0 ) டிரா செய்தது. 2-வது சுற்றில் செனகலை 3-0 என்ற கணக்கில் வென்றது.

    இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரிகேன் , ராஷ்போர்ட், ஷகா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகள் மோதிய போட்டிகளில் பிரான்ஸ் 9-ல், இங்கிலாந்து 17-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் 'டிரா' ஆனது.

    • முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வங்காளதேசம் தொடரை கைப்பற்றியது
    • இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல்.

    சிட்டாகாங்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை வீழ்த்திய வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.

    காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர். சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இன்றைய போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா ? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    • கூடுதல் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
    • பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் 3-4 என்ற கணக்கில் நெதர்லாந்து தோல்வி.

    கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு லுசைல் கால்பந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது நிமிடத்தில்அர்ஜெண்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

    2 வது பகுதியின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அர் ஜென்டினாவுக்கான 2-வது கோலை அடித்தார். இதனால் வெற்றி அர்ஜென்டினா பக்கம் இருந்தது. எனினும் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 வது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போது 11 நிமிடங்களில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார்.

    கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

    ×