search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unadkat"

    • உள்நாட்டு கிரிக்கெட்டில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்
    • ரஞ்சி கோப்பையில் ஒரு சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்

    இந்திய அணியில் அறிமுகமாகி அதன்பின் காணாமல் போன வீரர்களில் ஏராளமானோர். அதில் ஒருவர் ஜெய்தேவ் உனத்கட்டும் ஒருவர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் ஜெய்தேவ் உனத்கட். அப்போது அவருக்கு 19 வயது. அதன் பிறகுடெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் அவர், உள்நாட்டு தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் அணியில் நிரந்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இவரை அணிகள் வாங்கின.

    இதுவரை ஒரு டெஸ்ட், ஏழு ஒருநாள், 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால், இதுவரை ரஞ்சி டிராபியில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    2019-2020 ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தார்.

    வங்காளதேச அணிக்கெதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் முகமது சமி இடம் பிடித்திருந்தார். அவர் காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2010-ம் ஆண்டு டெஸ்ட் அணியில் விளையாடி அதன்பின் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அணியில் இடம் கிடைத்துள்ளது. ஒருவேளை ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்தால் அறிமுக போட்டிக்குப்பின் 12 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.

    ×