என் மலர்

  கிரிக்கெட்

  3வது ஒருநாள் போட்டி - வங்காளதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இந்தியா
  X

  அக்சர் படேலை பாராட்டும் சக வீரர்கள்

  3வது ஒருநாள் போட்டி - வங்காளதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது.
  • அடுத்து ஆடிய வங்காளதேசம் 182 ரன்களில் ஆல் அவுட்டானது.

  சிட்டகாங்:

  வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும். அவருக்கு பக்கபலமாக ஆடிய விராட் கோலி சதமடித்தார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

  இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

  வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது, எபாட் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

  இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும்,

  மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர்.

  இறுதியில், வங்காளதேச அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

  இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

  Next Story
  ×