என் மலர்
விளையாட்டு
- முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224/5 ரன்கள் குவித்து மிரட்டியது.
- 225 ரன்களை துரத்திய சிட்னி 20 ஓவர்களில் 209 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் பிரீமியர் லீக் டி20 தொடர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்தொடரில் 2023 புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியன்று நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் பிரிஸ்பென் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.
காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224/5 ரன்கள் குவித்து மிரட்டியது.
அதை தொடர்ந்து 225 ரன்களை துரத்திய சிட்னி 20 ஓவர்களில் 209 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
முன்னதாக அப்போட்டியில் மிடில் ஓவர்களில் களமிறங்கி மிரட்டலாக பேட்டிங் செய்த ஜோஸ் சில்க் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக ரன்களை சேர்த்து சிட்னி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வர போராடினார். குறிப்பாக 19-வது ஓவரின் முதல் பந்தில் அதிரடி காட்டிய அவர் டீப் திசையில் சிக்சரை பறக்க விட்டார். அதை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் நாசீர் முடிந்தளவுக்கு தாவி பந்தை பிடித்தார். அதே சமயம் பேலன்ஸ் செய்ய முடியாமல் பவுண்டரி எல்லையை கடந்த அவர் வழக்கம் போல பந்தை மேலே தூக்கி போட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்றார்.
Let's keep aside the ruling for a bit and appreciate how incredibly aware Michael Neser is of the law here.?? #Unreal https://t.co/rTxnYi1hrE
— Shikha Pandey (@shikhashauny) January 2, 2023
ஆச்சரியப்படும் வகையில் அவர் வீசிய கோணத்தில் மைதானத்திற்குள் செல்லாத பந்து தொடர்ந்து அவரை நோக்கியே பவுண்டரி எல்லைக்குள் காற்றில் இருந்தது. அப்போது பவுண்டரிக்குள் சென்று 3- 4 அடிகள் மெதுவாக ஓடிய அவர் தன்னை நோக்கி வந்த பந்து கச்சிதமாக பிடிக்க முயற்சிதார். ஆனால் பவுண்டரிக்குள் இருந்த அவர் தனது கையால் கீழே வந்து கொண்டிருந்த பந்தை பிடிக்க சென்ற போது ஒரு காலில் தாவி இன்னொரு காலையும் தரையிலிருந்து எடுத்த பின்னர் பந்தை பிடித்து அடுத்த அரை நொடிக்குள் மீண்டும் மைதானத்திற்குள் இருக்கும் வகையில் காற்றில் தூக்கி போட்டார். அதாவது பந்தை பிடிக்கும்போது அவரது இரு கால்களும் அரை நொடிப் பொழுது காற்றில் இருந்தது. அதனால் மீண்டும் களத்திற்குள் வந்து பந்தை பிடித்த அவர் கேட்ச் பிடித்து விட்டதாக நடுவரிடம் வாதாடினார்.
அதை தொடர்ந்து அதை சோதித்த 3-வது நடுவர் அழைத்த நிலையில் ஒன்றுக்கு 2 முறை அவரது இந்த சாதுரியமான வேலையை சோதித்து பார்த்தார். இறுதியில் பவுண்டரிக்குள் சென்றாலும் பந்தை அவர் கையில் பிடிக்கும் போது 2 கால்களும் தரையில் இல்லாத காரணத்தால் அது அவுட் என்று நடுவர் அறிவித்தார்.
அதனால் வர்ணையாளர்கள் மிகவும் ஆச்சரியமடைந்து வியப்பில் ஆழ்ந்தது போலவே ரசிகர்களும் வாய் மேல் கை வைத்து நின்றார்கள். மேலும் இது நான் பார்த்ததிலேயே மிகவும் சர்ச்சையான அவுட் என்று வர்ணனையாளர்கள் செய்த ஆடம் கில்கிறிஸ்ட், சைமன் டௌல் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
- முதல் விக்கெட்டுக்கு டாம் லாதம் - கான்வே 134 ரன்கள் சேர்த்தனர்.
- தற்போது வரை நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
கராச்சி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே கராச்சியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 2) கராச்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் விக்கெட்டுக்கு டாம் லாதம் - கான்வே 134 ரன்கள் எடுத்தனர். தற்போது வரை நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி நடக்கும் கராச்சி மைதானத்தில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார்.
- கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார். இருவரும் இடம்பெறும் ஃபோட்டோவை விராட்கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு 6 மில்லியன் அதாவது 60 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன. விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 229 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

முன்னதாக தோனி தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருகிறது.
தனது மகளை மகிழ்ச்சிப்படுத்தி தந்தையாகவும் தோனி முன் மாதிரியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட்டில் கூறியுள்ளனர்.
சமீபத்தில் ஜிவா தோனிக்கு லியோனல் மெஸ்ஸி ஆட்டோகிராஃப் அளித்த டி ஷர்ட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

மேலும் தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருவருக்கும் இந்த மாதமோ அல்லது மார்ச் மாதமோ திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும், இந்திய கிரிக்கெட் வீரருமான கே எல் ராகுல் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.

தற்போது ஓய்வில் இருக்கும் ரோகித் சர்மா, மனைவி மற்றும் மகளுடன் ஓய்வு நேரத்தை நன்றாக செலவிட்டு வருகிறார். தற்போது மாலத்தீவு சென்றுள்ள ரோகித் சர்மா அங்கு நன்றாகவே என்ஜாய் பண்ணுகிறார்.

இதேபோன்று சச்சின் டெண்டுல்கரும் வித்திசாயசமான முறையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த பதிவும் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- தென் ஆப்பிரிக்க வீரர் தனது மனைவியின் முதல் பிரசவத்துக்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.
- சிட்னி டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக வான் டெர் டசன் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்றிச் கிளாசன் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ளது.
சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் டி பிரைன் தனது மனைவியின் முதல் பிரசவத்துக்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.
இதையடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியில் டி பிரைனுக்கு பதிலாக வான் டெர் டசன் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்றிச் கிளாசன் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
- இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும்.
சான்டோஸ்:
கால்பந்து உலகின் பிதாமகனும், உலகக் கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் சாவ் பாலோ ஆஸ்பத்திரியில் உள்ள பீலேவின் உடல் இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் பீலேவின் உடல் அடங்கிய சவப்பெட்டி நாளை அங்குள்ள தெருக்களின் வழியாக எடுத்து செல்லப்படும் போது, அவரது தாயார் 100 வயதான செலிஸ்டி அரன்டெஸ் வசிக்கும் இல்லத்தையும் கடந்து செல்ல இருக்கிறது. படுத்த படுக்கையாக, மகன் இறந்த தகவலை புரிந்து கொள்ளும் நிலையில் செலிஸ்டி இல்லை.
இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு உள்ளன. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவுக்கு விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர்.
- நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனருக்கு பதில் மெட் ஹென்றி இடம் பெற்றார்.
கராச்சி:
பாகிஸ்தான-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர். நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனருக்கு பதில் மெட் ஹென்றி இடம் பெற்றார். முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
- ரிஷப் பண்ட்டின் காயங்கள் குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
- ரிஷப் பண்ட் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்றனர்.
டேராடூன்:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரரான ரிஷப் பண்ட், தனது சொகுசு காரில் டெல்லியில் இருந்து உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு சென்ற போது விபத்தில் சிக்கினார்.
கார் சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்ட் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தலை, முதுகு, கால் ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணுக் காலில் ஜவ்வு கிழிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரிஷப் பண்ட்டின் காயங்கள் குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ரிஷப் பண்டின் காயங்கள் முழுமையாக குணமடைந்து அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாட ஒரு ஆண்டு ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளது. அவரது காயங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர் இந்திய அணியில் விளையாடுவதற்காக முழு உடல் தகுதியை பெற ஒரு ஆண்டு வரை ஆகலாம் என்றனர்.
மேலும் ரிஷப் பண்ட்க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினர் கூறும் போது, ரிஷப் பண்ட் உடல் ரீதியாக ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைப்பது முக்கியம். காயங்களால் அவர் இன்னும் வலியுடன் இருக்கிறார். அவரை பார்க்க வருபவர்களிடம் பேசுகிறார்.
இது விரைவாக குணமடைய வேண்டிய அவரது ஆற்றலை குறைக்கிறது. அவரை பார்க்க விரும்புபவர்கள் அதை தற்போது தவிர்க்க வேண்டும். ரிஷப் பண்ட் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்றனர்.
- புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியமும், சந்தோசமும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
- உலகக் கோப்பை வெற்றிக்களிப்பில் மூழ்கியுள்ள அவர் புத்தாண்டை தனது மனைவி, குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடினார்.
பியூனஸ் அயர்ஸ்:
லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சமீபத்தில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. 36 ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.
இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 7 கோல்கள் அடித்து சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட 35 வயதான லயோனல் மெஸ்சி, இன்னும் தனது கிளப் அணியான பாரீஸ் செயின்ட் ஜெர்மைனுடன் இணையவில்லை.
உலகக் கோப்பை வெற்றிக்களிப்பில் மூழ்கியுள்ள அவர் புத்தாண்டை தனது மனைவி, குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்களுக்காக சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்ட ஒரு பதிவில், '2022-ஆண்டு முடிந்து விட்டது.
இந்த ஆண்டை எனது வாழ்வில் ஒரு போதும் மறக்க முடியாது. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை எப்போதும் துரத்திக்கொண்டு இருந்தேன். இறுதியில் அது 2022-ல் நனவாகி உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இத்தகைய மறக்க முடியாத நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது தேசம் மற்றும் பாரீஸ், பார்சிலோனா இன்னும் பல நகரங்கள், நாடுகளில் இருந்து எனக்கு கிடைத்த அன்பும், பேராதரவும், ஊக்கத்தினால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது. புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியமும், சந்தோசமும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
- டோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது.
- வாண வேடிக்கைகளைப் பார்த்தவாறே தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் டோனி.
உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதலே பொது இடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி துபாயில் தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை வரவேற்று குதூகலமாக கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது. வாண வேடிக்கைகளைப் பார்த்தவாறே வீடியோவில் தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் டோனி. இந்த வீடியோவுக்கு ஹேப்பி நியூ இயர் 2023 என்று தலைப்பிட்டு சாக்ஷி டோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை.
- 2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.
மும்பை:
இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி, முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 20 வீரர்களையும் இனிவரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை. அவரது கேப்டன்ஷிப் குறித்து அதிருப்தியான அம்சங்கள் எதையும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ரோகித் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது கேப்டன்சி சாதனை சிறப்பாக உள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவுறுத்தல்களை பிசிசிஐ வழங்கி உள்ளது. மேலும், வரும் ஐபிஎல் சீசனில் விளையாடுவதை தவிர்க்கும்படி முன்னணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்படலாம்.
- நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது
- தொடர்ந்து டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பதாக நடால் பேட்டி
பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர் 22 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உள்ளார். இதற்கிடையே யுனைடெட் கோப்பை கலப்பு அணி போட்டியில் ரபேல் நடால், இங்கிலாந்தின் கேமரூன் நோரியிடம் தோல்வி அடைந்தார். இதனால் நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது. ஆனால் அதை நடால் மறுத்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, 'நான் என் போட்டியில் தோற்றேன். ஒவ்வொரு முறையும் நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வரும்போது நான் ஓய்வு பெறவேண்டும் என்று தோன்றுகிறது. இதனால் என் ஓய்வு பற்றி நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள். ஆனால் ஓய்வு பெறுவது பற்றி இன்னும் என் மனதில் தோன்றவில்லை. அந்த நாள் வரும்போது உங்களிடம் தெரிவிப்பேன். எனவே அதைப்பற்றி கேட்கவேண்டாம். ஏனென்றால் இங்கு நான் டென்னிஸ் விளையாடி கொண்டே இருக்கிறேன்' என்றார்.
- ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது.
- மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி புவனேஸ்வரில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
அந்த அணி 9வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி உள்ளூரில் விளையாடுவதால் வெற்றிக்கு போராடும்.






