என் மலர்
விளையாட்டு
- இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரனேஷ்.
- தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் மாஸ்டர் பிரனேஷ் இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
இவர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில் தங்கம், 16 வயதுக்கு உட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் பிரனேஷ். இவர் காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் படித்து வருகிறார். தந்தை முனிரத்தினம் ஜவுளிக்கடை ஒன்றில் கணக்கராகவும், அம்மா மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் சேர்த்தது
- அக்சர் பட்டேல், ஷிவம் மவி இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை எட்ட கடுமையாக போராடினர்.
புனே:
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 51 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
இதேபோல் கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல், ஷிவம் மவி இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை எட்ட கடுமையாக போராடினர். கடைசி ஓவரில் 21 பந்துகள் தேவை என்ற நிலையில், அடித்து ஆட முற்பட்ட அக்சர் பட்டேல் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் கடைசி பந்தில் ஷிவம் மவியும் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் இந்தியா 4 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டி கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. கடைசி போட்டி 7ம் தேதி நடக்கிறது.
- இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சனகா 56 ரன்கள் சேர்த்தார்.
- இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
புனே:
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலனா இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது.
துவக்க வீரர் குஷால் மென்டிஸ் 52 ரன்கள் சேர்த்தார். பதும் நிசங்கா 33 ரன்கள், சரித் அசலங்கா 37 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் தசுன் சனகா, 22 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக 16வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
- புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்றைய போட்டி நடக்கிறது.
புனே:
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் உள்ளூர் வீரர் ராகுல் திரிபாதி, சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். 31 வயது நிரம்பிய இவர், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரை அடுத்து, ஆடவர் டி20 போட்டிகளில் அறிமுகமான மூன்றாவது மூத்த வீரர் ஆவார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை வீரர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர்.
- ஹெட் அரைசதம் அடித்து 70 ரன்களில் வெளியேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.
உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர். சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த டிரேவிஸ் ஹெட் கவாஜாவுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து ஆடிய ஹெட் அரைசதம் அடித்து 70 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம் கவாஜா நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். 2வது ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 195 ரன்களும் , ரென்ஷா 5 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
- ஐ.பி.எல்.லை விட ஒரு நாள் போட்டிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்- இந்திய வீரர்களுக்கு காம்பீர் அறிவுரை
- ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் உலக கோப்பை போட்டியில் இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (ஒரு நாள் போட்டி) இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. சொந்த மண்ணில் நடப்பதால் இந்திய அணி இதில் வெற்றி பெற்று 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல்.லை விட உலக கோப்பை தான் மிகவும் முக்கியமானது. இதனால் உலக கோப்பையை மனதில் வைத்து 50 ஓவர் போட்டிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அறிவுரை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் சுழற்பந்தில் அபாரமாக ஆடுவார்கள். இந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
ஒரு நாள் போட்டியில் நிலைத்து நின்று ஆடுவது முக்கியமானது. பயமின்றி விளையாடும் வீரர்களை அடையாளம் காண வேண்டும். அதோடு ஒரு நாள் போட்டிக்கு ஏற்றவராக இருக்க வேண்டும்.
உலக கோப்பையை வெல்ல புதிய அணுகு முறையை கையாள வேண்டும். தேவைப்படும் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஒரு நாள் போட்டியில் கவனம் செலுத்தும் வகையில் 20 ஓவரில் ஓய்வு கொடுக்க வேண்டும்.
கடந்த இரண்டு உலக கோப்பையிலும் அணியாக விளையாடவில்லை. இது மிகப்பெரிய தவறாக அமைந்தது. இந்திய வீரர்கள் தேவைப்பட்டால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
உலக கோப்பையை மனதில் வைத்து 50 ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஐ.பி.எல். போட்டியை விட உலக கோப்பை மிக முக்கியமான தாகும்.
இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.
டோனி தலைமையில் 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் காம்பீர் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் அவர் 97 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெண்டர் விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி வருகிற 21ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
- 5 ஐ.பி.எல். அணிகளின் நிர்வாகம் பெண்கள் அணிகளையும் வாங்க ஆர்வத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலாவது பெண்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 3 முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அணிகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் உரிமை கோரலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் டெண்டர் அழைப்பை விடுத்து இருந்தது.
டெண்டர் விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி வருகிற 21ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 5 ஐ.பி.எல். அணிகளின் நிர்வாகம் பெண்கள் அணிகளையும் வாங்க ஆர்வத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பெண்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்கும் விருப்பத்துடன் உள்ளன.
- சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
- ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 394 குவித்து இருந்தது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. உஸ்மானா கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர். 56-வது டெஸ்டில் விளையாடும் கவாஜா 13-வது செஞ்சுரியையும், 92-வது போட்டியில் ஆடும் ஸ்டீவ் சுமித் 30-வத சதத்தையும் பதிவு செய்தனர். சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 394 குவித்து இருந்தது.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- முதல் போட்டியின் தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
புனே:
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது .இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி புனே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
முதல் போட்டியில் கிடைத்த தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
- முதல் டி20 போட்டியில் பீல்டிங் செய்தபோது சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.
- மீதமுள்ள போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மும்பை:
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.
- நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்தது.
- அபாரமாக ஆடிய சாத் ஷகீல் 124 ரன்களுடன் களத்தில் உள்ளார்
கராச்சி:
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 47 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 19 ரன்னிலும், ஷான் மசூத் 20 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 74 ரன்னுடனும், சாத் ஷகீல் 13 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சாத் ஷகீல், சர்ப்ராஸ் அகமது இணைந்து நிலைத்து ஆடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். சர்ப்ராஸ் அகமது 78 ரன்களில் வெளியேறினார். நிலைத்து ஆடிய சாத் ஷகீல் சதம் அடித்து அசத்தினார். இடதுகை ஆட்டக்காரரான அவருக்கு இது முதல் சதம் ஆகும். மறுபுறம் ஆகா சல்மான் 41 ரன்களுக்கும் , ஹசன் அலி 4 ரன்களுக்கும், நசீம் ஷா 4 ரன்களுக்கும் வெளியேறினர்.
இறுதியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 407 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தை விட 42 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஷகீல் 124 ரன்களுடனும், அப்ரார் அகமது ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 3 விக்கெட், இஷ் சோதி 2 விக்கெட் வீழ்த்தினர். நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
- முதலில் பேட் செய்த ரினிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.
- நடுவர்களின் தீர்ப்பும் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் டி20 லீக்கில் நடந்த ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரினிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 108 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ரினிகேட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் ஆடம் ஜம்பா, இந்த போட்டியின் கடைசி ஓவரின் 5-வது பந்தை வீசியபோது பவுலிங் முனையில் இருந்த பேட்ஸ்மேன் ரோஜர்ஸ் பந்துவீசும் முன்பாக கிரீஸை விட்டு வெளியேறினார். இதை கவனித்த ஜம்பா, மன்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தார். இது 3-வது நடுவரின் ரிவ்யூக்கு சென்றது.
The non-striker can be run out if he/she is out of his/her ground up until the moment the bowler would normally have been expected to release the ball.
— Marylebone Cricket Club (@MCCOfficial) January 3, 2023
That means when the arm gets to its highest point. (1/2)#MCCLaws | @BBLpic.twitter.com/fWtdJAtIh1
மேலோட்டமாக பார்க்கும்போது எல்லாம் சரியாக இருந்து, அவுட் என்று அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பந்துவீசும்போது பவுலரின் கை, 90 டிகிரிக்கும் குறைவான கோணத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. இதை மீறி, 90 டிகிரியையும் தாண்டி ஜம்பாவின் கை சென்றுள்ளது. இதன் அடிப்படையில் ரன் அவுட் கிடையாது என்று நடுவர்கள் முடிவை அறிவித்தனர்.
Adam Zampa's attempt at a run out was deemed by the Third Umpire as not out ?#BBL12 pic.twitter.com/cvhlLBwig5
— 7Cricket (@7Cricket) January 3, 2023
அதாவது பவுரின் கை, முன்னால் சென்று விடக்கூடாது என்பது விதிமுறை. அதற்காக இந்த 90 டிகிரி கோண அளவீடு கணக்கிடப்படுகிறது. ஜம்பாவின் மன்கட் அப்பீலும், நடுவர்களின் தீர்ப்பும் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.






