என் மலர்

  கிரிக்கெட்

  கவாஜா -ஸ்டீவ் ஸ்மித் அபார சதம்... 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 475 குவிப்பு
  X

  கவாஜா -ஸ்டீவ் ஸ்மித் அபார சதம்... 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 475 குவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர்.
  • ஹெட் அரைசதம் அடித்து 70 ரன்களில் வெளியேறினார்.

  சிட்னி:

  ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.

  உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர். சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த டிரேவிஸ் ஹெட் கவாஜாவுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து ஆடிய ஹெட் அரைசதம் அடித்து 70 ரன்களில் வெளியேறினார்.

  மறுபுறம் கவாஜா நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். 2வது ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 195 ரன்களும் , ரென்ஷா 5 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

  Next Story
  ×