என் மலர்
விளையாட்டு
- இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது.
- தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
சுவிட்சர்லாந்து:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்து காரணமாக மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த சங்கம் கடந்த மே மாதம் 30-ம் தேதி கடிதம் எழுதி இருந்தது. அதில், 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தாவிடில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் போராட்டம் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் கடைசி ஓவரில் 302 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.
அம்பாந்தோட்டை:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 151 ரன்கள் குவித்தார். இப்ராகிம் சட்ரன் 80 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 91 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷதாப் கான் 35 பந்தில் 48 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் 49.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷதாப் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறினார்.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியது.
கோபன்ஹேகன்:
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சிங்கப்பூர் வீரர் கென் லோ யூவுடன் மோதினார்.
இதில் பிரனாய் 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் 3வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
- இதற்கு முன் மூன்று முறை பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.
- கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
இவ்விரு வீரர்களுக்கு இடையேயான இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.
தொடர்ந்து, வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் சுற்று இன்று மாலை தொடங்கியது. முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதனையடுத்து நடந்த 2-வது சுற்று டிரா ஆனது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், ரேபிட் முறையில் 2 போட்டிகள் நடைபெறும் சூழல் இருந்தது. ஆனால் 2-வது சுற்று ஆட்டத்திலும் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த உலக கோப்பை செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனுக்கு இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா கடும் சவால் விடுத்திருந்தார்.
முதல் டைபிரேக்கர் சுற்றில் முதல் 10 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய அவர் கடைசி 10 நிமிடத்தில் தடுமாறினார்.இதனை சுதாரித்து கொண்ட கார்ல்சன் அவரை வீழ்த்தினார்.
இதற்கு முன் மூன்று முறை பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். முதன்முறை 2016-ல் தோற்கடித்த பொழுது 10 வயது வீரராக இருந்தார். இதனைத் தொடர்ந்து, 2018-ல் நடைபெற்ற விரைவான செஸ் போட்டியில் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார். கடந்த 2022-லும், பிரக்ஞானந்தா மூன்றாவது முறையாக கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.
- கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது.
புதுடெல்லி:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 நாடு கள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ஆபரேசன் செய்து கொண்ட கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரது உடல் தகுதியை சோதிக்காமலேயே தேர்வானது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.
அதோடு செப்டம்பர் 2-ந் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போடியில் கே.எல்.ராகுல் ஆடுவது சந்தேகம் என்றும் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் முழு உடல் தகுதி இல்லாமல் இருக்கும் கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை அணிக்கு தேர்வு செய்தது ஏன்? என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கே.ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவரை தேர்வு செய்தது ஏன்? தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது. இதுதான் எங்களின் கொள்கையாக இருந்தது.
தேர்வு செய்யப்படும் நாளில் ஒரு வீரர் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் அவரை தேர்வு செய்யக் கூடாது. நீங்கள் அவரை (கே.எல்.ராகுல்) உலக கோப்பைக்கு தேர்வு செய்ய விரும்பினால் அதற்காக மட்டும் தேர்ந்து எடுக்கவும். தேர்வு குழுவினர் விளக்கம் சரியாக இல்லை.
இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் பிரக்ஞானந்தா.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 'டிரா' ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று துவங்கியது. இந்த சுற்றும் 25 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையைாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. அந்த வகையில் மேக்னஸ் கார்ல்சன் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
- உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2 சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் நடந்தது.
- சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.91 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.
பாகு:
பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் வெற்றி பெறும் வீரர் உலக சாம்பியன் ஆகிவிடுவார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.
பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். சாதுர்யமாக காய்களை நகர்த்தி அசத்திய பிரக்ஞானந்தாவுக்கு எதிராளியிடம் இருந்து பெரிய அளவில் நெருக்கடி எதுவும் வரவில்லை. 11-வது நகர்த்தலுக்குள் ராணியையும், இரு குதிரையையும் இருவரும் பரஸ்பரமாக 'வெட்டு' கொடுத்தனர். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு 'ரேபிட்' முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும்.
இந்நிலையில் டைபிரேக்கர் ஆட்டத்தின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். முதல் 10 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய அவர் கடைசி 10 நிமிடத்தில் தடுமாறினார்.இதனை சுதாரித்து கொண்ட கார்ல்சன் அவரை வீழ்த்தினார்.
இதன் மூலம் ரைபிரேக்கர் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
- விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.
- கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
நேற்று விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.
இந்த வெற்றிக்கு கிரிக்கெட் வீரர்கள் சினிமா பிரபலங்கள் என வெளிநாட்டு தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இது மிகப்பெரிய விஷயம். வெல்டன் இந்தியா என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான அன்பை டேவிட் வார்னர் வெளிப்படுத்தி உள்ளார். இவர் ஐபிஎல் போட்டியின் போது ஜடேஜா போன்று பேட்டை சுழற்றி காட்டியது வைரலானது. கிரிக்கெட் மட்டுமல்லாமல் சினிமா குறித்த சில வீடியோக்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக புஸ்பா போன்று விளையாட்டு களத்தில் செய்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டர்வர் என்றே கூறலாம்.
- ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
- அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும்.
பாகு:
சென்னையை சேர்ந்த இளம்கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா- உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் மோதும் பீடே உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டி அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.
இறுதிப்போட்டி 2 ஆட்டங்களை கொண்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டி 'டிரா' ஆனது. 35-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. பிரக்ஞானந்தா-கார்ல் சென் மோதிய 2-வது கிளாசிக்கல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.
வெள்ளைநிற காய்களுடன் விளையாடுவது கார்ல்செனுக்கு சாதகமானது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது. 1 மணி நேரம் நடந்த இந்தப்போட்டி 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு 'டிரா' ஆனது.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு டைபிரேக்கர் இன்று நடத்தப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி நடக்கிறது. டைபிரேக்கர் 2 ஆட்டங்களை கொண்டது.
ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும். அவ்வாறு 2 டைபிரேக்கர் ஆட்டங்களும் 'டிரா' ஆகும் பட்சத்தில் அடுத்து 2 ஆட்டங்கள் விளையாடப்படும்.
இதில் இருவருக்கும் தலா 5 நிமிடங்கள் ஒதுக்கப்படும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 3 வினாடிகள் கூடுதலாக கிடைக்கும்.
தமிழக வீரர் பிரக்ஞானந்தா நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான கார்ல்செனை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பாரா? என்று இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு நுழைந்த ஒரே இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்று இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் பிரக்ஞானந்தா புதிய சாதனை படைப்பார்.
- ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.
- 5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இருந்த ஃபகார் ஜமான் 2 இடங்கள் பின் தங்கி 5-வது இடத்தை பிடித்தார்.
5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து 9-வது இடத்தில் விராட் கோலியும் 11-வது இடத்தில் ரோகித் சர்மாவும் நீடிக்கிறார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் நீடிக்கிறார்.
டி20-யை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரேஒரு இந்தியர் மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் 143 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஜனவரி, மே மாதங்களிலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
- 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு மே.30-ல் கடிதம் எழுதி இருந்தது.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷ் சிங் பணியாற்றினார். அவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட் டது. இதற்காக பூபிந்தர்சிங் பஜ்வா தலைமையில் தற்காலிக குழுவை கடந்த ஏப்ரல் 27-ந்தேதி இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பஞ்சாப் ஐகோர்ட்டு தேர்தலை நிறுத்தி வைத்தது. வருகிற 28-ந்தேதி வரை தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.காலவரையற்ற சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது. ஆனாலும் குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சஸ்பெண்டு காரணமாக இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் தேசிய கொடியின்கீழ் பங்கேற்க முடியாது.
செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கும் ஒலிம்பிக் தகுதி போட்டியான உலக சாம்பியன்ஷிப்புக்கு இந்திய மல்யுத்த வீரர்கள் நடுநிலை வீரர்களாக பங்கேற்பார்கள்.
- இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது.
- விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை டோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இதன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. இந்த 'லேண்டர்', நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர்.
இறுதியில் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் டோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஜிம்மில் இருந்த டிவியில் இந்த வீடியோ காட்சியை பார்த்து கைகளை தட்டி அவரது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இவர் மட்டுமல்லாமல் அவரது மகளாக ஷிவாவும் இந்த காட்சியை பார்த்து துல்லி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.






