என் மலர்
விளையாட்டு
- ஜனவரி, மே மாதங்களிலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
- 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு மே.30-ல் கடிதம் எழுதி இருந்தது.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷ் சிங் பணியாற்றினார். அவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட் டது. இதற்காக பூபிந்தர்சிங் பஜ்வா தலைமையில் தற்காலிக குழுவை கடந்த ஏப்ரல் 27-ந்தேதி இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பஞ்சாப் ஐகோர்ட்டு தேர்தலை நிறுத்தி வைத்தது. வருகிற 28-ந்தேதி வரை தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.காலவரையற்ற சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது. ஆனாலும் குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சஸ்பெண்டு காரணமாக இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் தேசிய கொடியின்கீழ் பங்கேற்க முடியாது.
செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கும் ஒலிம்பிக் தகுதி போட்டியான உலக சாம்பியன்ஷிப்புக்கு இந்திய மல்யுத்த வீரர்கள் நடுநிலை வீரர்களாக பங்கேற்பார்கள்.
- இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது.
- விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை டோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இதன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. இந்த 'லேண்டர்', நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர்.
இறுதியில் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் டோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஜிம்மில் இருந்த டிவியில் இந்த வீடியோ காட்சியை பார்த்து கைகளை தட்டி அவரது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இவர் மட்டுமல்லாமல் அவரது மகளாக ஷிவாவும் இந்த காட்சியை பார்த்து துல்லி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
- ஆண்களுக்கான 5000 மீட்டர் ஸ்டீப்பிள் சேசில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் தோல்வியடைந்தார்.
- ஆகஸ்ட் 27-ம் தேதி பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதிப் போட்டி நடைபெறும்.
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் ஸ்டீபிள் சேஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஸ்டீப்பிள் சேசில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான 3000 மீ ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் 28 வயதான பருல் சௌத்ரி பங்கேற்றார். அவர் ஹீட் 2-ல் 9:24.29 வினாடிகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் பாருல் தனது தனிப்பட்ட சிறந்த 9:29.51 சாதனையை முறியடித்துள்ளார்.
ஆகஸ்ட் 27-ம் தேதி பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதிப் போட்டி நடைபெறும்.
- ‘சந்திரயான்-2’ தோல்வியால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
- அரை இறுதியில் நியூசிலாந்திடம் 21 ரன்னில் தோற்றது.
மும்பை:
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி நேற்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன்மூலம் இந்தியா புதிய உலக சாதனை படைத்தது.
'சந்திரயான்-3' வெற்றியை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'சந்திரயான்-3' வெற்றி தொடர்பாக 5 முறை ஐ.பி.எல். கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட டுவீட் வைரலாகி உள்ளது.
'சந்திரயான்-2' தோல்வியால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அரை இறுதியில் நியூசிலாந்திடம் 21 ரன்னில் தோற்றது. 'சந்திரயான்-3' வெற்றியால் தற்போது நடைபெற இருக்கும் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுமா? என்று மும்பை இந்தியன்ஸ் அந்த போஸ்டில் தெரிவித்து உள்ளது. இந்த டுவீட் வைரலாகி உள்ளது.
இந்திய அணி ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையில் இந்தியா 1983-ம் ஆண்டு முதல் முறையாக கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் இந்தியா 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. முன்னதாக 2007-ல் அறிமுக 20 ஓவர் உலகக் கோப்பை அவர் பெற்றுக் கொடுத்தார்.
தற்போது 13-வது உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா? என்பதே ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பாக இருக்கிறது.
உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடுகிறது. பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறும் இந்தப்போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
- 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி நேரடியாக 2-வது சுற்றில் களம் புகுந்தது.
ஹோபன்ஹேகன்:
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் புகுந்த இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-9 என்ற நேர் செட்டில் வெறும் 30 நிமிடங்களில் ஆஸ்திரேலியாவின் கென்னத் ஸி ஹூய் - மிங் சூயன் லிம் இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டியது.
காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன்களான சாத்விக்- சிராக் ஷெட்டி கூட்டணி அடுத்து இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னன்டோ- டேனியல் மார்தின் ஜோடியுடன் மோதுகிறது.
பெண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-18, 21-10 என்ற நேர் செட்டில் சாங் சிங் ஹய் - யாங் சிங் டுன் (சீனதைபே) இணையை விரட்டியடித்தது.
- உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
- 5-வது நாளான நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதலின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் உள்பட மொத்தம் 37 பேர் களம் இறங்கினர்.
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
5-வது நாளான நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதலின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் உள்பட மொத்தம் 37 பேர் களம் இறங்கினர். இதில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தனது முதல் முயற்சியில் 8 மீட்டர் நீளம் தாண்டினார். அடுத்த இரு முயற்சியில் 'பவுல்' செய்தார். என்றாலும் 12 பேர் கொண்ட இறுதிப்போட்டிக்கு 12-வது வீரராக தகுதி பெற்றார். நடப்பு தொடரில் இறுதிப்போட்டியை எட்டிய முதல் இந்தியர் இவர் தான். தூத்துக்குடி மாவட்டம் முதலுரைச் சேர்ந்த 21 வயதான ஜெஸ்வின் ஆல்ட்ரின் கடந்த மார்ச் மாதம் தேசிய சாதனையாக 8.42 மீட்டர் நீளம் தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 3 வாய்ப்புகளில் முறையே 7.74 மீட்டர், 7.66 மீ., 6.70 மீ. நீளம் தாண்டி 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டு தகுதி சுற்றோடு நடையை கட்டினார். ஸ்ரீசங்கர் பல போட்டிகளில் 8 மீட்டர் தூரத்தை எளிதில் கடந்திருக்கிறார். ஆனால் இந்த போட்டியில் அவர் 8 மீட்டரை நெருங்காதது ஆச்சரியம் அளித்தது. அவர் கடந்த ஆண்டு உலக தடகளத்தில் இறுதிசுற்றில் கால்பதித்திருந்தது நினைவிருக்கலாம். ஜமைக்காவின் வெய்ன் பினோக் 8.54 மீட்டர் நீளம் தாண்டி தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்தார். பதக்கமேடையில் ஏறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் 12 பேர் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.
பெண்களுக்கான ஈட்டி எறிதலின் தகுதி சுற்றில் மொத்தம் 34 வீராங்கனைகள் தங்களது திறமையை காட்டினர். இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 57.05 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 19-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தார். முந்தைய இரு உலக தடகள போட்டியில் இறுதிசுற்றை எட்டியிருந்த 30 வயதானஅன்னு ராணி இந்த முறை தனது சிறந்த செயல்பாட்டை கூட (63.24 மீட்டர்) நெருங்க முடியாத சோகத்துடன் வெளியேறினார்.
முன்னதாக பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் யர்ராஜி ஜோதி 13.05 வினாடிகளில் இலக்கை கடந்து தகுதி சுற்றோடு பின்வாங்கினார்.
நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஒலிம்பிக் சாம்பியன் இத்தாலி வீரர் கியான்மார்கோ தம்பேரி, அமெரிக்காவின் ஜூவான் ஹாரிசன் இருவரும் அதிகபட்சமாக தலா 2.36 மீட்டர் உயரம் தாண்டி சமநிலையில் இருந்தனர். 2.38 மீட்டர் உயரத்தை தொடுவதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இருவரும் சமநிலை வகித்தாலும் ஹாரிசன் 2.36 மீட்டர் உயரத்தை தனது 2-வது முயற்சியில் தான் எட்டினார். ஆனால் தம்பேரி தனது முதல் வாய்ப்பிலேயே அதை தாண்டினார். அதன் அடிப்படையில் தம்பேரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உலக தடகளத்தில் ருசித்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். ஹாரிசனுக்கு வெள்ளிப்பதக்கமும், கத்தாரின் முதாஷ் பார்ஷிமுக்கு (2.33 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கிடைத்தது.
பெண்களுக்கான வட்டு எறிதலில் அமெரிக்க வீராங்கனை லாலாகா தசாகா 69.49 மீட்டர் தொலைவுக்கு வட்டுவை வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 65.56 மீட்டர் தூரம் வட்டு எறிந்ததே அதிகபட்சமாக இருந்தது. மகுடம் சூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் சாம்பியனும், மற்றொரு அமெரிக்க வீராங்கனையுமான வலரி அல்மான் 69.23 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
23 வயதான தசாகா கூறுகையில், 'கடந்த இரு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கடைசி இடத்துக்கு (12-வது) தள்ளப்பட்டேன். 12-ல் இருந்து இப்போது முதலிடத்துக்கு வந்திருப்பதை நம்ப முடியவில்லை. நான் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று விட்டேன். இது நிஜமா என்றே என்னால் நம்ப முடியவில்லை' என்று கூறி சிலாகித்தார்.
- முதலில் ஆடிய இரு போட்டிகளிலும் இந்தியா வென்றது.
- மழையால் 3வது போட்டி ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது.
டப்ளின்:
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்க இருந்தது. மழையின் காரணமாக போட்டி தடைப்பட்டது. மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படவில்லை.
இந்நிலையில், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்தானது. இதையடுத்து, டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா.
- அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றிவிட்டது.
- தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி கடைசி போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்க இருந்த நிலையில், போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே மழை பெய்து வந்ததால், போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகக் கோப்பை 2023 தொடரில் பத்து அணிகள் பங்கேற்கின்றன.
- உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டன.
உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் 5-ந்தேதி துவங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானி்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து என பத்து அணிகள் பங்கேற்கின்றன.
ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் எப்போது நடைபெறும் என்ற விவரங்களை ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

அதன்படி, செப்டம்பர் 29-ந்தேதி மட்டும் மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதே நாளில், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. செப்டம்பர் 30-ந்தேதி இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
அக்டோபர் 2-ந்தேதி இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம், நயூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன. அக்டோபர் 3-ந்தேதி நடைபெறும் மூன்று ஆட்டங்களில், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை, இந்தியா மற்றும் நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன.
உலகக் கோப்பை 2023 தொடருக்கான டிக்கெட்களை இந்திய ரசிகர்கள் புக்மைஷோ தளத்தில் வாங்கிட முடியும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது. உலகக் கோப்பை 2023 தொடரில் மொத்தம் 58 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பத்து பயிற்சி ஆட்டங்களும் அடங்கும்.
டிக்கெட் விற்பனை நாளை (ஆகஸ்ட் 24) துவங்கி, செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடரின் ஒவ்வொரு கட்டம் மற்றும் போட்டிகளுக்கான டிக்கெட்கள் பலக்கட்டங்களாக விற்பனை செய்யப்பட உள்ளன.
- இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
- இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர்.
சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
இந்த 'லேண்டர்', இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர். அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.
- இந்த சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போட்டியின் 2-வது சுற்று இன்று நடைபெற்றது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. டைபிரேக்கர் சுற்று நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரரானார் பிரக்ஞானந்தா.
- இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று இன்று நடைபெற இருக்கிறது.






