என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருல் சவுத்ரி"

    • டயமண்ட் லீக் தடகளப் போட்டி கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.
    • பாருல் சவுத்ரி 3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தார்.

    தோஹா:

    டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.

    இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்கினர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பாருல் சவுத்ரி பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் 9:13:39 நிமிடத்தில் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.

    இந்தப் போட்டியில் பாருல் சவுத்ரி தேசிய சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், ஆறாவது இடத்தையும் பிடித்தார்.

    நடப்பு ஆண்டின் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (3000 மீட்டர்) பாருல் சவுத்ரி போட்டியிடுவார்.

    • ஆண்களுக்கான 5000 மீட்டர் ஸ்டீப்பிள் சேசில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் தோல்வியடைந்தார்.
    • ஆகஸ்ட் 27-ம் தேதி பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதிப் போட்டி நடைபெறும்.

    19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் ஸ்டீபிள் சேஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஸ்டீப்பிள் சேசில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான 3000 மீ ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் 28 வயதான பருல் சௌத்ரி பங்கேற்றார். அவர் ஹீட் 2-ல் 9:24.29 வினாடிகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் பாருல் தனது தனிப்பட்ட சிறந்த 9:29.51 சாதனையை முறியடித்துள்ளார்.

    ஆகஸ்ட் 27-ம் தேதி பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதிப் போட்டி நடைபெறும்.

    ×