என் மலர்
புதுச்சேரி
கொரோனா நோயாளிகள் விதிமுறைகளை மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாவட்ட கலெக்டர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பலர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால் இவர்களில் பலர் கட்டுப்பாட்டை மீறி வெளியில் சுற்றுகிறார்கள். இவர்கள் மூலம் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் புதுவை அரசு பெருந்தொற்று நோய் விதிமுறை 2020-ன் பிரிவு 4ஏ-வின் கீழ் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் வசூலிக்க திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி தனிமைப்படுத்தப்பட்ட நபர் விதிமுறைகளை மீறினால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெறுபவர் விதிமீறினால் ரூ.1000 வசூலிக்கப்படும்.
இந்த அபராதம் மேற்கண்ட விதிமுறையின் பிரிவு 3-ன்கீழ் காவல்துறை ஆய்வாளர்கள், வருவாய்த்துறை தாசில்தார்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், நலவழித்துறை மருத்துவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி துறைத்தலைவர்கள் ஆகியோராலும் மற்றும் அவர்களின் உயர் அதிகாரிகளாலும் வசூல் செய்யப்படும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து அபராதம் கட்டுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை:
திருபுவனையில் கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆலை மூடப்பட்டது. இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள், தங்கள் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பளம் வழங்கக்கோரி ஊழியர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் சம்பளம் வழங்கக்கோரி நூற்பாலை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். நூற்பாலை முன்பு ஒன்று திரண்ட அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு புதுச்சேரி மத்திய சங்கங்களை சேர்ந்த என்.ஆர்.டி.சி. மோகன்தாஸ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. நிர்வாகி குணசேகரன், தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆலையின் சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதனை ஏற்காமல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர். சிறிது நேரத்துக்கு பின் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்று புதுவை பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி:
கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வு எழுத ஆன்லைன், ஆப்லைன் என மாணவர்கள் விரும்பும் வகையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின்படி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு அறைகளில் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிறஆய்வு பொருட்களை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது.
கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் புரிந்து கொண்டு பதில் அளிக்க இந்தமுறை வழிவகை செய்யும். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்கள் தங்கள் புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை பரிமாறாமல் இருப்பதை தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார்கள்.
தேர்வுகளின் காலம் மற்றும் பிற நிபந்தனைகளும், வினாத்தாள்களின் முறை ஆகியவை ஏற்கனவே முன்பு இருந்த படியே இருக்கும். மாணவர்கள் ஏ4 வெள்ளைத் தாளில் கருப்பு மை கொண்டு பதில் அளிக்க வேண்டும். தேர்வு எழுதிய அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடம், பிரிவு, தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தங்கள் கையெழுத்தை முழுமையாக எழுத வேண்டும். 2-ம் பக்கத்தில் இருந்து விடைகளை எழுத தொடங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 490 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,913 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 52,14,678 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,174 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84,372 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,913ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா விஷயத்தில் படித்தவர்களும் அலட்சியமாக உள்ளனர். பொதுமக்கள் மெத்தனமாக இருந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் எச்சரித்தார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் மருத்துவ குழுவினர் நடத்திய ஆய்வில் பெரும்பாலானவர்கள் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் இருந்துவிட்டு முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் இறப்பு ஏற்பட்டு இருப்பது தெரியந்துள்ளது. விவரம் தெரிந்தவர்கள், டாக்டர்கள் குடும்பத்திலும்கூட இதே நிலை உள்ளது. கொரோனா விஷயத்தில் மெத்தனமாக இருந்துள்ளனர். அப்படி இருந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்களில் வந்து ஆஸ்பத்திரிகளில் சேருகின்றனர். இதனால் பலருக்கும் கொரோனா பரவுகிறது. இதை தடுக்க இனிமேல் ஆம்புலன்சுகள் மூலமாக வருபவர்களை மட்டுமே ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்க உள்ளோம். அரசு வசம் உள்ள ஆம்புலன்சுகள் அனைத்தும் இனிமேல் நோயாளிகளை ஏற்றிவர பயன்படுத்தப்படும்.
முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதியில் தொற்று அதிகமாக உள்ளது. நெல்லித்தோப்பு பகுதியில் ஓரிடத்தில் 3 நாட்கள் சோதனை நடந்தது. வீடுவீடாக சென்று சோதனை செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அங்கு வசித்த ஒரு முதியவர் கொரோனா அறிகுறி இருந்தும் அப்போது சோதனை செய்ய முன்வரவில்லை.
அதன்பின் ஆஸ்பத்திரிக்கு வந்து சோதித்து பார்த்தபோது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் இறந்துவிட்டார். அவரது 8 வயது பேரனுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.
பழைய பஸ் நிலைய பகுதியில் வயதான தம்பதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களது மகனும், மருமகளும் டாக்டர்கள். அவர்கள் 4 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதன்பின் வயதான தம்பதி மட்டும் இங்கு வந்து தங்கி உள்ளனர். இதுகுறித்த விவரங்கள் எதையும் சுகாதாரத் துறைக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் அந்த முதியவர் இறந்துவிட்டார். படித்தவர்கள் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.
கொரோனா பணிகளுக்கு என மத்திய அரசு இதுவரை ரூ.3.80 கோடிதான் தந்துள்ளது. புதுவை அரசு நிதியில் இருந்து ரூ.6.42 கோடி செலவு செய்துள்ளோம். மத்திய அரசிடம் இதற்காக ரூ.139 கோடி கேட்கப்பட்டது. ஆனால் அந்த நிதி கிடைக்கவில்லை. புதுவை பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி, முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதி ஆகியவற்றில் இருந்து வரும் நிதியை கொண்டு செலவிட்டு வருகிறோம்.
ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பயன்பாட்டிற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் செலவிடப்படுகிறது. கொரோனா நோயாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு சாப்பாட்டிற்காக ரூ.225 செலவிடப்படுகிறது. போதிய மருந்து மாத்திரைகள், உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கொரோனா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

புதுச்சேரி அரசின் மாநில சுகாதார இயக்கத்தின் கீழ் உள்ள பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த 4 டாக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் மாநில சுகாதார இயக்கத்தின் கீழ் உள்ள பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த 4 டாக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில்குமாரி மேட்டுப்பாளையத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த ராஜேஷ் கூடப்பாக்கத்திற்கும் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அல்லி தவளக்குப்பத்திற்கும், அங்கு பணிபுரியும் டாக்டர் ஏஞ்சல் மேரி பிரீத்தி அரியாங்குப்பத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

புதுவையில் 20 இடங்களில் கொரோனா பரிசோதனை நடைபெறுவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புதுவையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சோதனை செய்து கொள்கின்றனர்.
இதற்கிடையே கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எளிமையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதியாக 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை குருவிநத்தம், கொரவள்ளிமேடு, ஆலங்குப்பம், பண்டசோழநல்லூர், மணல்மேடு, கொடாத்தூர், லிங்காரெட்டிபாளையம், பொறையூர், டி.என்.பாளையம், நல்லவாடு, திருவண்டார்கோவில், குருமாம்பட்டு, செல்லிப்பட்டு, மேல்சாத்தமங்கலம், கோர்க்காடு, அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை ஆகிய மையங்களில் செயல்படுகின்றன.
இங்கு காய்ச்சல் முகாம், அதிவிரைவு பரிசோதனை, கொரோனா பரிசோதனைக்கான உமிழ்நீர் சேகரிப்பு, நோயாளிகளை கண்டறிதல் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் தற்போது நடந்து வருகிறது. இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
பெரியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி இன்று புதுச்சேரி சாரத்தில் உள்ள அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்.பி., “பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிக்க வேண்டும். பெரியார் பிறந்த நாளில் மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்துப் போராட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் நீட் தேர்வு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி மாணவர்களின் உயிரைப் பறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். தேர்வு முடிவுகள் வரும்போது எத்தனை பேரின் உயிரைப் பறிக்கும் என்று அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்த அவர் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அகில இந்திய அளவில் நீட் தேர்வைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது என்றும் அதனை புதுச்சேரி அரசும் பின்பற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு இந்த நாளில் எனது சார்பாகவும், புதுச்சேரி மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு இந்த நாளில் எனது சார்பாகவும், புதுச்சேரி மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று நோயில் இருந்து வெளியேற நமது நாடு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.
இந்த சவால்களை எதிர்கொள்ள உலக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உங்களது உறுதியான, வலுவான தலைமை தான் தற்போது உள்ள காலத்தின் தேவை. வளர்ந்த நாடுகளுடன் சேர்ந்து உலக வரைபடத்தில் இந்தியாவை ஒரு முக்கிய இடத்தில் நிலைநிறுத்த இன்னும் பல ஆண்டுகாலம் நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்ய நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என எல்லா வல்லமையும் உடைய இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 323 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,428 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 51,18,254 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,132 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,428ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுவையில் பேரக்குழந்தைகளின் ஆசைக்காக பெண் ஒருவர் வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மூலக்குளம் பெரம்பை ரோட்டை சேர்ந்தவர் வசந்தா. இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். வீட்டில் பூனை ஒன்றையும் அவர் வளர்த்து வருகிறார்.
அந்த பூனை கர்ப்பமாக இருந்துள்ளது. இந்த நிலையில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் வளைகாப்பு ஒன்று நடப்பதை பார்த்த வசந்தாவின் பேரக்குழந்தைகள் அதேபோன்ற நிகழ்ச்சியை நமது வீட்டிலும் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் பூனைக்கு வளைகாப்பு நடத்த வசந்தா திட்டமிட்டார். இதற்காக அக்கம்பக்கத்தினரை அழைத்து பூனைக்கு வளைகாப்பு நடத்தினார். பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதை போன்றே மாலை அணிவித்து வளையல் அணிவித்து திருஷ்டி சுற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வளைகாப்பு நடத்தப்பட்ட பூனைக்குட்டி நேற்று முன்தினம் 4 குட்டிகளை ஈன்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதுவையில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்று கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி:
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் தொகுதியை சேர்ந்த இளங்கோ என்கிற குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதற்கான விழா நேற்று மாலை எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் இளங்கோ என்கிற குமார் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார். இதில் மாநில பொதுச் செயலாளர்கள் செல்வம், மோகன்குமார், துணைத்தலைவர்கள் செல்வம், அருள்முருகன், தொகுதி தலைவர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுவையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டனர்.
வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் பிரதமர் மோடி கை காட்டும் நபர் தான் எம்.எல்.ஏ.க்களாக வர முடியும். இங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. இதனை யாராலும் தடுக்க முடியாது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் தான் மாநிலம் வளர்ச்சி அடையும். அப்போது காரைக்கால் பகுதி மேம்படுத்தப்படும். காரைக்கால்-புதுவை ரெயில்பாதை அமைக்கப்படும். நீட், ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக பெட்ரோலிய துறை உதவியுடன் பயிற்சி மையம் அமைக்கப்படும். ஜிப்மர், என்.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை இரட்டிப்பாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.