என் மலர்
புதுச்சேரி
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 56,46,011 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 83,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,085 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90,020 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,227ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் அரசு கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி சார்பில் பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகிறது.
இந்த பெட்ரோல் பங்குகள் மூலம் அரசு துறை வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்படும். இதற்கான தொகையை அமுதசுரபிக்கு அரசு செலுத்தி விடும்.
ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த தொகை அமுதசுரபிக்கு செலுத்தப்படவில்லை.
கூடுதல் தொகையை பாக்கி வைத்திருந்ததால் சமீப காலமாக அரசு வாகனங்களுக்கு பெட்ரோல்- டீசல் நிரப்ப அமுதசுரபி பெட்ரோல் பங்க் நிறுவனம் நிறுத்தி விட்டது. இதனால் பெரும்பாலான அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தை பயன் படுத்தவில்லை.
அதுபோல் புதுவை வருவாய்துறையை சேர்ந்த தாசில்தார்களுக்கும் அரசு சார்பில் ஜீப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால், டீசல் வழங்க மறுப்பதால் அவர்கள் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் தங்களது சொந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கொரோனா பணிகளை மேற்கொண்டு வரும் தாசில்தார்கள் சம்பவ இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களிலேயே செல்கின்றனர்.
இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சென்று அவர்களால் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை என தாசில்தார்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுவையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக சுகாதாரம், வருவாய், காவல், பொதுப்பணி, உள்ளாட்சி உள்ளிட்ட அரசு துறைகளின் அதிகாரிகளும், ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். கட்டுப்பாட்டு மண்டலங்களை கண்காணிப்பது, உதவிகளை வழங்குவது போன்ற பணிகளில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் தாசில்தார்களுக்கு அரசு சார்பில் ஜீப் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி மூலம் டீசல் வழங்கப்படுவது வழக்கம். இந்த டீசலுக்கான பணத்தை அரசே செலுத்திவிடும். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த ஜீப்களுக்கு பெட்ரோல் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பெட்ரோல் வழங்குவதை அமுதசுரபி நிறுத்தி விட்டது.
இதையடுத்து ஜீப்புகளை ஓரங்கட்டி விட்டு தாசில்தார்கள் அனைவரும் தற்போது தங்களது மோட்டார் சைக்கிள்களில் சுற்றி வருகின்றனர். இதனால் அவசரப் பணிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அவர்களால் செல்ல முடிவதில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் கதிர்காமம் பகுதியை சேர்ந்தவர் உதயன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவரும், வில்லியனூர் அருகே உள்ள மணவெளியை சேர்ந்த விசித்ரா (21) என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் முத்தியால்பேட்டையில் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 13-ந் தேதி உதயன் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து விசித்ராவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். உயிருக்கு உயிராக காதலித்த கணவர் இறந்த சோகத்தில் விசித்ரா அழுதபடியே இருந்துள்ளார். மேலும் சரியாக சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள ஒரு அறையில் விசித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, விசித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசித்ராவின் தந்தை தாஸ் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
கணவர் இறந்த ஒரே வாரத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 783 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 273 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, கதிர்காமம் மாணிக்கசெட்டியார் நகரை சேர்ந்த 74 வயது முதியவர், ரெட்டியார்பாளையம் கல்யாணசுந்தர மூர்த்தி நகரை சேர்ந்த 58 வயது ஆண் ஆகியோர், ஜிப்மரில் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த 64 வயது முதியவர், திருக்கனூர் பழைய அஞ்சலக வீதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, நெல்லித்தோப்பை சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோர், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் திருநள்ளாறு தெற்கு வீதியை சேர்ந்த 57 வயது ஆண் மற்றும் ஏனாமில் 75 வயது முதியவர் மற்றும் 57 வயது பெண் ஆகியோர் உயிரிழந்தனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 107 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 514 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 23 ஆயிரத்து 191 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 ஆயிரத்து 659 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,667 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 992 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகின்றனர். 18 ஆயிரத்து 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 467 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 398 பேர் புதுச்சேரி பகுதியையும், 31 பேர் காரைக்காலையும், 38 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்களாவர். புதுவையில் உயிரிழப்பு 2.01 சதவீதமாகவும், குணமடைவது 77.90 சதவீதமாகவும் உள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 72 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.
இந்த இணைப்பு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வுகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் கடந்த 14-ந் தேதி முதல் 19-ந்தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இது, குறுகிய காலமாக இருந்ததால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், இணைப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, இன்று (21-ந்தேதி) முதல் நடக்கிறது.
அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இறுதி பருவ தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் அல்லது இரண்டும் கலந்த முறையில் நடத்தப்படுகிறது.
இத்தேர்வினை இணைப்பு கல்லூரிகளில் பயிலும் 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்த தேர்வை மாணவர்கள் புத்தகம் அல்லது குறிப்புகளை பார்த்து எழுதலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.
இது, ஒரு வித்தியாசமான நடைமுறையாக காணப்பட்டாலும் சில கல்வி நிலையங்களில் இந்த முறைக்கு அனுமதிக்கிறார்கள். அந்த அடிப்படையில் புதுவை பல்கலைக்கழகமும் அனுமதித்தது.
இதனால் மாணவ-மாணவிகள் புத்தகங்கள் மற்றும் குறிப்புகளை கையோடு தேர்வு மையத்துக்குள் எடுத்து சென்றனர். அவற்றை பார்த்து தேர்வுகளை எழுதினார்கள்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 53,08,015 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,247 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85,619 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,456 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களில் 70 சதவீதம் பேர் காலதாமதமாக ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் அதை வீடுவீடாக வந்து ஆய்வு செய்யும் பணியாளர்களிடம் மறைப்பதாக தெரிகிறது. யாராக இருந்தாலும் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும்.
அனைத்து கிளினிக்குகள், மருத்துவமனைகள் தங்களிடம் வரும் கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகள் குறித்த விவரங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரிவிக்கவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தினமும் துணை இயக்குனருக்கு அறிக்கை அளிக்கவேண்டும்.
வீடுதேடி வரும் அங்கன்வாடி, ஆஷா பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அரசு, தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
மேற்கண்ட அறிவுறுத்தல்களில் ஏதேனும் விதிமுறை மீறல் இருந்தால் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்றுநோய் பரப்புதல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடியதாகும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






