search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அருண்
    X
    கலெக்டர் அருண்

    கொரோனா அறிகுறிகளை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்- கலெக்டர் எச்சரிக்கை

    கொரோனா அறிகுறிகளை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களில் 70 சதவீதம் பேர் காலதாமதமாக ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் அதை வீடுவீடாக வந்து ஆய்வு செய்யும் பணியாளர்களிடம் மறைப்பதாக தெரிகிறது. யாராக இருந்தாலும் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும்.

    அனைத்து கிளினிக்குகள், மருத்துவமனைகள் தங்களிடம் வரும் கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகள் குறித்த விவரங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரிவிக்கவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தினமும் துணை இயக்குனருக்கு அறிக்கை அளிக்கவேண்டும்.

    வீடுதேடி வரும் அங்கன்வாடி, ஆஷா பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அரசு, தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

    மேற்கண்ட அறிவுறுத்தல்களில் ஏதேனும் விதிமுறை மீறல் இருந்தால் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்றுநோய் பரப்புதல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடியதாகும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×