என் மலர்
செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த தாசில்தார் ராஜேஷ்கண்ணா.
ஜீப்புக்கு டீசல் வழங்கப்படாததால் மோட்டார் சைக்கிளில் சுற்றும் தாசில்தார்கள்
புதுவையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஜீப்புக்கு டீசல் வழங்கப்படாததால் அதனை ஓரங்கட்டி விட்டு தாசில்தார்கள் அனைவரும் தற்போது தங்களது மோட்டார் சைக்கிள்களில் சுற்றி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக சுகாதாரம், வருவாய், காவல், பொதுப்பணி, உள்ளாட்சி உள்ளிட்ட அரசு துறைகளின் அதிகாரிகளும், ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். கட்டுப்பாட்டு மண்டலங்களை கண்காணிப்பது, உதவிகளை வழங்குவது போன்ற பணிகளில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் தாசில்தார்களுக்கு அரசு சார்பில் ஜீப் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி மூலம் டீசல் வழங்கப்படுவது வழக்கம். இந்த டீசலுக்கான பணத்தை அரசே செலுத்திவிடும். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த ஜீப்களுக்கு பெட்ரோல் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பெட்ரோல் வழங்குவதை அமுதசுரபி நிறுத்தி விட்டது.
இதையடுத்து ஜீப்புகளை ஓரங்கட்டி விட்டு தாசில்தார்கள் அனைவரும் தற்போது தங்களது மோட்டார் சைக்கிள்களில் சுற்றி வருகின்றனர். இதனால் அவசரப் பணிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அவர்களால் செல்ல முடிவதில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story