search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரம்ப சுகாதார நிலையங்கள்"

    • அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லை. பக்கவாதத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
    • பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் பாதிப்புடன் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்

    திருப்பூர்:

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிசியோதெரபிஸ்ட்டுகளை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேஸ்கண்ணா கூறியதாவது:-

    மருந்தில்லா மருத்துவ சிகிச்சை முறைகளில் பிசியோதெரபி மருத்துவம் முக்கிய பங்காற்றி வருகிறது. இச்சிகிச்சையில் உடலுக்கு வெளியில் பாதிப்பு உள்ள பகுதியில் மட்டும் சிகிச்சை அளிப்பதால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை.

    ஆனால் அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லை. பக்கவாதத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்ட்டுகளை, இதுவரை நியமிக்கவில்லை.

    இதனால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் பாதிப்புடன் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்ட்டுகளே உள்ளனர். இதனால், அனைத்து நோயாளிகளுக்கும், தொடர் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

    இப்பிரச்னைக்கு தீர்வாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக பிசியோதெரபிஸ்ட்டுகளை, தமிழக அரசு நியமிக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும், பயிற்சி பிசியோதெரபிஸ்ட்டுகளை ஊக்க ஊதியத்துடன், தற்காலிகமாக பணியில் அமர்த்த வேண்டும்.ஆரம்ப, வட்டார மருத்துவமனைகளில் பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க, போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முதல்வரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில், பிசியோதெரபி சிகிச்சையை சேர்க்க வேண்டும். இதன் வாயிலாக ஏழை மக்களுக்கு இச்சிகிச்சை எளிதில் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 

    ×