என் மலர்
புதுச்சேரி
புதுவையில் கொரோனா அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் எச்சரித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 126 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று ஒரே நாளில் 314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 29 ஆயிரத்து 907 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 479 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 35 ஆயிரத்து 675 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 510 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,130 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 33 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
598 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 493 பேர் புதுச்சேரியையும், 55 பேர் காரைக்காலையும், 43 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள். புதுவையில் உயிரிழப்பு என்பது 1.68 சதவீதமாகவும், குணமடைவது 93.73 சதவீதமாகவும் (சுமார் 94 சதவீதம்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை சுகாதார அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் மக்கள் கூடியதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. புதுவையில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த மாத இறுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.

புதுவை அரசு ஊழியர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை சேகரித்து வைத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுகாதாரத்துறையில் சுகாதார உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அய்யனார். பழங்கால பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் 1000-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை புதுவை சாமிபிள்ளைதோட்டத்தில் உள்ள தனது வீட்டில் சேகரித்து வைத்துள்ளார். இதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பொருட்களை சேகரித்து வந்துள்ளார்.
இதில் வெண்கலம், பித்தளை, செம்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்ட செம்பு, டம்ளர், பாத்திரங்கள், பூஜை பொருட்கள், பானைகள், எடைக்கற்கள், மரக்கால் என விதம்விதமாக இடம்பெற்றுள்ளன.
தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பொருட்களை வாங்கியுள்ளார். புதுவை சண்டே மார்க்கெட்டிலும் ஏராளமான பொருட்களை வாங்கி குவித்துள்ளார். இதுதொடர்பாக அய்யனார் கூறியதாவது:-
பழங்கால பொருட்கள் குறித்த விவரங்களை வருங்கால நமது சந்ததியினர் தெரிந்துகொள்வதற்காக இந்த பொருட்களை சேகரித்து வைத்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம்.
இந்த பொருட்களை நமது பெண்கள் புளிபோட்டு துலக்குவார்கள். அது ஒரு உடற்பயிற்சியாகவே அமைந்தது. இந்த பொருட்களில் உணவு சமைத்து உண்பதால் நமக்கு நோய்கள் வராது. ஆனால் இப்போது பிளாஸ்டிக்குகளால் ஆன பாத்திரங்களை பயன்படுத்துவதால் நோய் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
வெண்கல பொருட்களில் சூடான பொருட்களை வைத்தால் அது பல மணிநேரம் அப்படியே இருக்கும். இத்தகைய பொருட்களை பயன்படுத்தியதால் நம் முன்னோர் நூறாண்டுகள் வரை வாழ்ந்தனர். ஆனால் நாம் அதை மறந்ததால் நமது வாழும் காலம் குறைந்து வாழ்க்கை முறையும் மாறிவிட்டது.
நம்மில் பலரது வீடுகளில் மூதாதையர் பயன்படுத்திய பல பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்தாமல் பரணில் போட்டு வைக்காதீர்கள். அதேநேரத்தில் நல்ல விலை கிடைக்கிறது என்று விற்றுவிடவும் கூடாது. முன்னோர்கள் பயன்படுத்திய சாமான்களை நாமும் பயன்படுத்த வேண்டும். இந்த பாத்திரங்களின் பெயர்கள், அவற்றின் பயன்பாடு குறித்து புத்தகம் ஒன்றை தயாரிக்கவேண்டும் என்பது எனது விருப்பம். அதேபோல் அனைவரும் இந்த பாத்திரங்களை பார்த்து ரசிக்க நிரந்தர காட்சியகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
இப்போது ஆயுதபூஜை தினத்தன்று மட்டுமே அனைத்து பொருட்களையும் காட்சிக்கு வைக்கிறேன். மற்ற நேரங்களில் வீட்டில் போதிய வசதியில்லாததால் மூட்டையாக கட்டி வைத்து விடுகிறேன்.
இவ்வாறு அய்யனார் கூறினார்.

புதுச்சேரியை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கணவன்-மனைவி தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை:
சென்னை சூளைமேடு அண்ணாசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (வயது 26). இவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பவரை காதலித்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, தனது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு, சூளைமேட்டில் கணவருடன் வசித்து வந்தார்.
ஆனால் திருமணம் ஆன விவரத்தை வினோத், அவரது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காயத்ரி மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு காயத்ரியின் கணவர் வினோத், அவரது பெற்றோரை பார்க்க புதுச்சேரிக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை காயத்ரி, தனது கணவர் வினோத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மதியம் வினோத், காயத்ரியை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது வெகுநேரமாக காயத்ரி செல்போனை எடுக்காததால், உடனடியாக புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.
வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காயத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த சூளைமேடு போலீசார் காயத்ரி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து துறைகளையும் முழு வீச்சில் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி மணிமேகலைப்பள்ளி அருகே டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் மழைக் காலம் தொடங்கியுள்ளது. இதனால் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தங்கும். அதில் டெங்குவை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும். இது தடுக்கப்பட வேண்டும். எனவே தண்ணீர் தேங்கும் பள்ளமான பகுதிகளில் வசிப்பவர்கள் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கடந்த காலங்களில் தனிவார்டு அமைத்துள்ளோம். அதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றினோம். இப்போது பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மின்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை என பல்வேறு அரசுத் துறைகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க கூறியுள்ளோம்.
மழைநீர் தேங்கினால் அவற்றை உடனடியாக அகற்ற மோட்டார்களும் தயார் நிலையில் உள்ளது. வருவாய்த்துறை, மீன்வளத்துறை மூலம் மீட்பு நடவடிக்கைகளும் எடுக்க தயார் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டால் 12 மணிநேரத்துக்குள் மின்சாரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பருவமழையை எதிர்கொள்ள புதுவை அரசு நிர்வாகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. மக்கள் ஏதாவது உதவி தேவைப்பட்டால் அரசு நிர்வாகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க.வின் வேல் யாத்திரை குறித்த கேள்விக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்து கூறுகையில், ‘புதுவையில் எம்மதமும் சம்மதம் என்று மக்கள் வாழ்கின்றனர். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். மதக்கலவரத்தை உருவாக்குவதற்காக வேல் யாத்திரை நடத்துகிறார்கள். புதுவை மக்கள் மதக்கலவரத்துக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். வேல் யாத்திரை மதக்கலவரம் தூண்டும் வகையில் உள்ளதால் அதை அனுமதிக்கக் கூடாது’ என்றார்.
‘கவர்னரை அதிகாரிகள் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்’
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
சம்பளம் வழங்க கோப்பு அனுப்பினால் பல்வேறு காரணங்களை கூறி அதை கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்புகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதத்துக்கான சம்பளம் வழங்க கையெழுத்திட்டு கோப்பு அனுப்பி உள்ளேன்.
இதேபோல் ஊரடங்கு காலத்தில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கான சாலைவரியை ரத்துசெய்ய கோப்பு அனுப்பினால் அந்த இழப்பினை ஈடுசெய்வது எப்படி? என்று கேள்வி கேட்டு கவர்னர் கிரண்பெடி கோப்பினை திருப்பி அனுப்புகிறார். இதன் காரணமாக வாகன உரிமையாளர்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்னர் செயல்பட்டு வருகிறார். கவர்னரின் தொல்லையால் மக்கள் மத்தியில் கவர்னர் குறித்து அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். நாம் மக்களுக்காகத்தான் இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்தால்தான் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க முடியும். கவர்னரை அதிகாரிகள் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயணிகள் முகக்கவசம் அணிகிறார்களா? என்று போக்குவரத்துத் துறையினர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முழுமையாக ஓட தொடங்கியுள்ள நிலையில் அவற்றில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? பயணிகள் முகக்கவசம் அணிகிறார்களா? பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்கப்படுகிறதா? என்பது குறித்து போக்குவரத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுவை புதிய பஸ் நிலையம், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் சீனுவாசன், தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பஸ்களில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது பஸ்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா? அவை பயணிகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்று பார்வையிட்டனர்.
பயணிகளில் சிலர் முறையாக முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை மறைக்கும்படி முகக்கவசம அணிய அறிவுறுத்தினர். மாஸ்க் அணியாமல் இருந்தவர்களை உடனடியாக வாங்கி அதை அணிய செய்தனர்.
பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினர். அவ்வாறு அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
மழைக்காலத்தில் மின்சாதனங்களை கையாள்வது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கு மின்துறை விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி:
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில்கொண்டு பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? மின் சாதனங்களை எவ்வாறு கையாண்டு விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பது தொடர்பாக மின்துறை செயற்பொறியாளர் ராமநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி கயிறு மற்றும் மாடு முதலியவற்றை கட்டக்கூடாது. மின்துறை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுகவேண்டும். இடி மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம்.
அதேபோல் இடி மின்னல் இருக்கும்போது டி.வி., கம்ப்யூட்டர், தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மின்மாற்றிகள், மின்பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் ஆகியவற்றை தொடக்கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிக்காமல் தீயணைப்புத்துறையின் உதவியை நாடவேண்டும்.
வீட்டின் சுவர்களில், மின் சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு மின்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சைக்கிள் செயின், கம்பிகள், பச்சை கொடிகள், ஈரமான பூமாலை போன்றவற்றை மின் கம்பிகளில் தூக்கி எறிவது ஆபத்தை விளைவிக்கும்.
பழுதான மின் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. உடைந்த சுவிட்ச், பிளக், பியூஸ் போன்றவற்றை உடனடியாக மாற்றவேண்டும். மின்சார சார்ஜரில் இணைப்பில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது. தரை கழுவும்போது ஈரக் கைகளால் இணைப்பில் இருக்கும் மின்விசிறி போன்றவற்றை நகர்த்தக் கூடாது. கிரைண்டர் போன்ற உபகரணங்களுக்கு தனியாக நில இணைப்பு (எர்த்) கொடுக்கவேண்டும். மின்மோட்டார், தண்ணீர் பம்பு மோட்டார் போன்றவற்றின் மீது மழைநீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெங்கு பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள 34 துறைகள் மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைந்து பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலும், டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்கவும் தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஒருங்கிணைந்து அன்றாட களஆய்வு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக தினசரி ஒருங்கிணைந்து கூட்டு டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோய் பரப்பும் வகையில் சுகாதார சீர்கேடு இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து நகராட்சி மூலம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் தண்ணீர் தேங்காதவண்ணம் சுத்தமாக சுற்றுப்புறத்தை பராமரித்து வர வேண்டும். புதுவையில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சோப்புப் போட்டு அடிக்கடி கழுவுதல் போன்ற தடுப்பு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து டெங்கு மற்றும் கொரோனா நோய் இல்லாத புதுவையை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உணவு தானிய மானியத்தை வங்கிக்கணக்கில் பெற முடியும்.
புதுச்சேரி:
மத்திய அரசு புலம் பெயர் மக்கள் பயன்பெற ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்தியது.
புதுவை உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. புதுவை ரேசன் கடையில் எந்த பொருளும் வழங்காத நிலையில் பிற மாநில மக்களுக்கு எதை வழங்க முடியும் என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனிடையே மற்ற மாநிலங்களில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. புதுவையில் இத்திட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் திடீரென நேற்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் புதுவையில் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உணவு தானிய மானியத்தை வங்கிக்கணக்கில் பெற முடியும். இத்திட்டத்தில் பயனடைய தொழிலாளர்கள் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்கு புதுவையில் ரேசன் கார்டு இருக்கக்கூடாது. அவ்வாறு வேலை செய்யும் நபர்களின் மானியத்தை மட்டும் அவர்களின் வங்கி கணக்கில் பெறலாம்.
எஞ்சிய குடும்ப உறுப்பினர்களின் உணவு தானியத்தை அவர்கள் மாநிலத்திலேயே பெறலாம். மானியம் பெற விரும்பும் தொழிலாளர்கள் கட்டண மில்லா தொலை பேசி எண்ணில் 0413 14445 தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
கிருமாம்பாக்கம் அருகே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்த மளிகை கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
கிருமாம்பாக்கத்தை அடுத்த காட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற பாலன் (வயது 61). மளிகை கடைக்காரர். இவரது மனைவி விமலா (60). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
பாலனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அடிக்கடி நெஞ்சுவலி, வயிற்று வலி காரணமாகவும் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,429 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 83,13,877 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 514 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,23,611 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,429ஆக உயர்ந்துள்ளது.

தாசில்தார் அலுவலகங்களில் ஆய்வு நடத்திய முதல்- அமைச்சர் நாராயணசாமி சான்றிதழ்களை விரைவாக வழங்குமாறு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேருவதற்காக வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி, இருப்பிட சான்றிதழ்கள் பெறுவதில் கடும் சிரமம் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சான்றிதழ் தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று புதுவை, வில்லியனூர் தாலுகா அலுவலகங்களில் முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதற்கு அதிக அளவில் காத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர்களிடம் சென்று சான்றிதழ் பெறுவதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது? என்பது குறித்து நாராயணசாமி பரிவுடன் கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்களை அலைக்கழிக்காமல் சான்றிதழ்களை விரைவாக வழங்குமாறு அறிவுறுத்தினார்.
குறிப்பாக பொதுமக்கள் கூட்டமாக கூட வாய்ப்பு அளிக்காமல் தனித்தனியாக பிர்கா வாரியாக சான்றிதழ்களை விரைவாக வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டரும், வருவாய்த்துறை செயலாளருமான அருண் உடனிருந்தார்.
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு காவல் நிலையத்திற்கு எதிரே இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் அந்தத வாலிபர் உயிரிழந்தார்.
காவல் நிலையத்திற்கு எதிராகவே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.