என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் காவலாளியாக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்பவர், கடையின் வாயிலில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் காவலாளியாக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்பவர், கடையின் வாயிலில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் அங்கு சென்ற 3 பேர் அவரை இரும்பு குழாயால் அடித்துள்ளனர். பின்னர் துடித்து எழுந்து தப்பிக்க முயற்சித்த அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட காவலாளி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள முத்துகுமாரசாமி தப்பி ஒடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் காவலாளியாக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்பவர், கடையின் வாயிலில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் அங்கு சென்ற 3 பேர் அவரை இரும்பு குழாயால் அடித்துள்ளனர். பின்னர் துடித்து எழுந்து தப்பிக்க முயற்சித்த அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட காவலாளி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள முத்துகுமாரசாமி தப்பி ஒடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு திருக்காஞ்சி சாலையில் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்து குவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் கடத்தியதாக இருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர்கள் உத்திரவாகினிபேட் வசந்த் (வயது32), தமிழக பகுதியான குமாரமங்கலம் தமிழ் (25) என்பதும் தெரியவந்தது. அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து மணலை பறிமுதல் செய்தனர்.
இளைஞர்களுக்கு வேலை தருவதாக முதல்-அமைச்சர் ஏமாற்றுகிறார் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலின்போது வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. ஆனால் இப்போது புதுவை மாநிலத்தில் 75 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். 2½ லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் வேலைவாய்ப்பகத்தில் இருந்து இதுவரை அவர்களுக்கு ஒரு அழைப்பு கடிதம் கூட வரவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக சரியான வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறிவருகின்றனர். அவர்கள் கூலிப்படையாக செயல்படுகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து வருகிற 6-ந்தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம். அப்போது வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை ஒப்படைக்க உள்ளோம்.
இத்தகைய சூழ்நிலையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை தருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இளைஞர்களை ஏமாற்றுகிறார். அனைத்து தரப்பு மக்களும் இந்த அரசுக்கு எதிராக உள்ளனர்.
மக்களின் எதிர்ப்பினை சமாளிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் புதுப்புது கதைகளை சொல்லி வருகின்றனர். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்தபின் புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலம் கூட இணைக்கப்படவில்லை. அப்படியிருக்க புதுவையை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இவர்கள் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
இதை கூறிவரும் முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும், வைத்திலிங்கம் எம்.பி.யும் பதவி விலகவேண்டும். நாங்கள் தேர்தல் பணியை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். ஆளுங்கட்சியினர்தான் தொழிற்சாலைகளில் மாமூல்கேட்டு மிரட்டுகின்றனர். இதனால்தான் கொலைகளும் நடக்கின்றன.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.
காரைக்கால் அருகே கஞ்சா கடத்தல்காரர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த நிரவி போலீசார் கடந்த மாதம் விழிதியூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூட்டையுடன் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது, மூட்டையில் மதுபாட்டில் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், கஞ்சா கடத்தல்காரர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பா.ம.க. காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி புகைப்பட ஆதாரத்துடன் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு புகார் அளித்தார். அதில், கஞ்சா கடத்தல்காரர் மீது வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்த, போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில், முதல்கட்ட விசாரணைக்கு பிறகு, நிரவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் குமாரனை பணியிடை நீக்கம் செய்து, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீதும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
காவலர் தேர்வை நடத்தக்கோரி கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக மாணவர்கள் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தினார்கள்.
புதுச்சேரி:
புதுவையில் வருகிற 4-ந்தேதி நடைபெற இருந்த காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வினை நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தேர்வை உடனடியாக நடத்த வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர், காவலர் தேர்வை நடத்தக்கோரி கருப்புக்கொடி ஏந்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் புதுவை காமராஜர் சிலையருகே நேற்று கூடினார்கள். அங்கிருந்து கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலம் நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டைகளை தள்ளிக்கொண்டு செல்ல மாணவர் கூட்டமைப்பினர் முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். அதன்பின் மாணவர் கூட்டமைப்பினர் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புதுவையில் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் நாட்டார் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுதா (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுதா அரியாங்குப்பத்தில் உள்ள மிட்டாய் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த கடையில் வேலைசெய்யும் மற்றொரு ஊழியருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி சுதா திடீரென்று மாயமானார். அதன்பின் கடந்த 30-ந்தேதி அவர் வீடு திரும்பினார். அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்த அவரது அண்ணன் சதீஷ்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுதா சாகமுடிவெடுத்து தலையில் தடவும் ஹேர்டையை எடுத்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சுதா பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்ததும் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி:
புதுவை பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பிரமுகரும், அட்சயா அறக்கட்டளை மற்றும் சைன்பேரா மெடிக்கல் குழுமத்தின் தலைவியான தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சாமிநாதன் எம்.எல்.ஏ., புதுவையில் 2021-ல் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தவுடன் மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தவுடன் ரூ.7 ஆயிரம் கோடி கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். மூடப்பட்டுள்ள மில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, தொகுதி தலைவர் துரைசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல், தொகுதி பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, சுகுமார், முத்துநாராயணன் ரெட்டியார், பிரபாகர் ரெட்டியார், விஷ்வா மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவை பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பிரமுகரும், அட்சயா அறக்கட்டளை மற்றும் சைன்பேரா மெடிக்கல் குழுமத்தின் தலைவியான தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சாமிநாதன் எம்.எல்.ஏ., புதுவையில் 2021-ல் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தவுடன் மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தவுடன் ரூ.7 ஆயிரம் கோடி கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். மூடப்பட்டுள்ள மில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, தொகுதி தலைவர் துரைசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல், தொகுதி பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, சுகுமார், முத்துநாராயணன் ரெட்டியார், பிரபாகர் ரெட்டியார், விஷ்வா மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்ததும் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ கூறினார்.
புதுச்சேரி:
புதுவை பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பிரமுகரும், அட்சயா அறக்கட்டளை மற்றும் சைன்பேரா மெடிக்கல் குழுமத்தின் தலைவியான தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சாமிநாதன் எம்.எல்.ஏ., புதுவையில் 2021-ல் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தவுடன் மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தவுடன் ரூ.7 ஆயிரம் கோடி கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். மூடப்பட்டுள்ள மில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, தொகுதி தலைவர் துரைசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல், தொகுதி பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, சுகுமார், முத்துநாராயணன் ரெட்டியார், பிரபாகர் ரெட்டியார், விஷ்வா மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை கடற்கரையில் நடந்த விடுதலை நாள் விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றினார். அவர் பேசுகையில், புதுவையின் தனித்தன்மையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம் என கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி விடுதலை நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்று தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசியகீதம் இசைத்தனர்.
அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி போலீஸ் அணிவகுப்பினை பார்வையிட்டார். அதன்பின் விழாமேடைக்கு திரும்பிய அவர் விடுதலை நாள் உரையை வாசித்தார். தொடர்ந்து போலீஸ், ஊர்க்காவல்படை, தீயணைப்பு படையினரின் அணிவகுப்பு நடந்தது. அவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
புதுவை மாநிலம் அமைதியான மாநிலம் என்பதை நிலைநிறுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறும் விழுக்காடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் சாலை விபத்துகளும் பெருமளவில் குறைந்துள்ளன. பயன்கருதாத பலரது தியாகத்தால் நமக்கு இந்த விடுதலை கிடைத்துள்ளன. விடுதலையின் பயன்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பது அத்தியாக தலைவர்களின் கனவு. அதை நிறைவேற்றி தருவது எங்களது கடமை. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக, வளமாக, நலமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம். புதுவையின் தனித்தன்மையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி கடற்கரையில் உள்ள கைவினை கண்காட்சி அரங்கில் புதுச்சேரி வரலாறு குறித்த கைவினை கண்காட்சியை திறந்துவைத்தார்.
புதுச்சேரி மக்கள் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள் என்று விடுதலை நாள் செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை விடுதலை நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுவை மாநிலத்தின் விடுதலை திருநாள் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிற உன்னத தருணம் இதுவாகும். அன்னிய தேசத்தவர் நம்மை அடிமைப்படுத்தி இருந்தபோது அதனை எதிர்த்து நம் மாநில விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் எழுச்சியுடன் போராடி விடுதலையெனும் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை நமக்கு அளித்த நாள் இந்த பொன்னாள்.
இது புதுச்சேரி விடுதலைக்காக மட்டும் போராடிய நாள் அல்ல. மாநிலத்தை இந்திய தேசத்துடன் இணைத்து தேசிய நீரோட்டத்தில் நாம் கலக்கும் முடிவினையும் எடுத்த நாளாகும். நாம் இந்தியாவோடு இணைந்தபோது பிரதமராக இருந்த நேரு காலந்தொட்டு மத்தியில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுகள் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் உரிமைகள் மதிக்கப்பட்டன. பிரெஞ்சு ஜன்னலாக விளங்கிய புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இன்று நம் தனித்தன்மைக்கும் உரிமைகளுக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சிலரின் செயல்பாடுகள் உள்ளன. நம் போராட்ட வரலாற்றினை அறியாதவர்களுக்கு இந்த நாள் ஒரு பாடமாக விளங்கும். உரிமைகளை விட்டுத்தர ஒருநாளும் புதுச்சேரி மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், தங்கள் மாநில நலனுக்காக எத்தகு தியாகத்தினையும் செய்ய தயாராக இருப்பார்கள் என்பதையும் இந்த விடுதலை நாள் எடுத்துக்காட்டுகிறது.
நம் மாநில விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் அனைவருக்கும் இந்த திருநாளில் என்னுடைய வீர வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் நலனில் புதுச்சேரி அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களை கவுரவிக்கும் வகையில் தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் ஈமச்சடங்கு நிதியினை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு இந்த தொகை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியின் வரலாற்றினை நம் குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையில் அவற்றை நாம் எடுத்துரைக்கவேண்டும். போராடி நாம்பெற்ற சுதந்திரத்தை யாரிடமும் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை நம்மை அடிமைகளாக ஆக்க துடிப்பவர்களுக்கு புரிய வைப்போம். புதுச்சேரி மக்கள் யாருக்கும் அஞ்சுபவர்கள் இல்லை. ஆனால் நாகரிகம் அறிந்தவர்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த விடுதலை நாளில் புதுச்சேரியின் தனித்தன்மையை காப்போம். அதற்காக எத்தகு தியாகத்தினையும் செய்ய தயாராக இருப்போம் என்று சூளுரைப்போம். புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் எனது விடுதலை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
திருத்தப்பட்ட அட்டவணையை தயார் செய்து காவலர் தேர்வுகளை நடத்த கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை காவல்துறையில் காவல் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக பணி நியமனம் செய்யப்படாமல் தள்ளிப் போனது. இந்த நிலையில் அரசு சார்பில் காலியாக உள்ள 431 காவலர் பணியிடங்களை நிரப்ப அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான உடல் தகுதி தேர்வுகள் வருகிற 4-ந்தேதி முதல் தொடங்க இருந்தது. ஆனால் இந்த தேர்வின்போது ஓட்டப்பந்தய நேரத்தை எலக்ட்ரானிக் சிப் முறையை பயன்படுத்தி கணக்கிடுவதற்கு பதிலாக மாற்று முறை (விசில்) பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதுதொடர்பாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவலர் தேர்வினை நிறுத்தி வைக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட கோப்புகளை தன்னிடம் கொண்டுவருமாறு தலைமை செயலாளருக்கும் அவர் உத்தரவிட்டார். கவர்னரின் இந்த அதிரடி நடவடிக்கை புதுவை மாநில இளைஞர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்தநிலையில் காவலர் பணியிட கோப்புகளை ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டபடி அப்போது அறிவிக்கப்பட்டபடியே தேர்வுகளை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
தேர்வுத்துறையானது புதிய திருத்தப்பட்ட அட்டவணை தயார் செய்து உடல்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வுகளை நடத்த வேண்டும். இதுதொடர்பாக விண்ணப்பித்தவர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
என்மீது 10 ஊழல் புகார்களை சி.பி.ஐ.க்கு கவர்னர் கிரண்பேடி அனுப்பி உள்ளார். 4 வேட்டி, சட்டையுடன் சிறை செல்லவும் தயார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திராகாந்தி நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் ஆகியோர் கலந்து கொண்டு தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது நாராயணசாமி பேசியதாவது:-
புதுவையில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்காக நாம் தயாராக வேண்டும். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்தும், எதிர்க்கட்சிகளை சாடி வியூகம் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 4½ ஆண்டுகளாக மக்களைப்பற்றி கவலைப்படாமல் தூங்கியவர்கள் தற்போது வெளியே வரத்தொடங்கி உள்ளனர். மக்கள் நலத்திட்டங்களை முடக்கியவர்களுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்கவில்லை.
தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் எப்படியெல்லாம் செயல்படுகிறார். ஆனால் புதுவையில் நமக்கு எதிர்க்கட்சி கவர்னர் கிரண்பேடி தான். தேர்தலுக்கு முன்பாக நாம் 4 முக்கிய திட்டங்களை நிறைவேற்றவேண்டும்.
முதலாவதாக அனைவருக்கும் ரூ.5 லட்சத்துக்கு பயன் கிடைக்கும் ஆயுள்காப்பீடு திட்டத்தை செயல்படுத்தவேண்டும். 2-வதாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் கருணாநிதி பெயரிலான திட்டம், 3-வதாக 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டேப்லெட் வழங்கவேண்டும். 4-வதாக 100 யூனிட் வரை அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கவேண்டும்.
புதுவையில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு உள்ளது. மறுபுறம் அரசின் திட்டங்களை இன்னொரு கொரோனா தடுத்து நிறுத்துகிறது. கவர்னர் கிரண்பேடி நமது அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தி வருகிறார்.
காவலர் பணிக்கு வயதுவரம்பு 22 ஆக இருந்தது. அதை 24 ஆக உயர்த்திகேட்டோம். அவர் அனுமதி அளிக்கவில்லை. இறுதியாக மத்திய அரசு வரை சென்று அனுமதிபெற்று வந்தோம். இந்த பணிக்காக 15 ஆயிரம் பேர் மனுபோட்டு உள்ளனர். இதற்கான தேர்வு பணியை மின்னணு முறையில் நடத்த ஈசாக் என்ற தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தோம். ஆனால் கொரோனாவை காரணம்காட்டி அவர்கள் வர மறுத்துவிட்டனர்.
அதனால் நமது அதிகாரிகளை வைத்தே நடத்த கூறினோம். ஆனால் வராதவர்களை கவர்னர் கிரண்பேடி கூப்பிடச் சொல்கிறார். இந்த தேர்வினை நடத்தக் கூடாது என்பதுதான் அவரது எண்ணம். அவரது எதிர்ப்பினையும் மீறி வயது வரம்பு 24 ஆக உயர்த்தப்பட்டதால் தேர்வினை தடுத்து நிறுத்துகிறார்.
இத்தகைய போராட்டத்துக்கு இடையேதான் ஆட்சியை நடத்தி வருகிறோம். அதனால் கட்சிக்காரர்களாகிய உங்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இத்தகைய போராட்டங்களுக்கு இடையேயும் சிறிய மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் அளித்த மாநிலமாக புதுச்சேரி 2-வது இடத்தில் உள்ளது. கவர்னரின் தடைகள் இல்லாவிட்டால் இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்தி இருப்போம்.
கவர்னர் கிரண்பேடி என்மீது இதுவரை 10 ஊழல் புகார்களை சி.பி.ஐ.க்கு அனுப்பி உள்ளார். 4 வேட்டி, சட்டையுடன் நான் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன். நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அதை கட்சி அலுவலகத்துக்குள்ளேயே முடித்துக்கொள்ள வேண்டும். வெளியே ஒற்றுமையாக செயல்படுவோம்.
கடந்த 2016-ம் ஆண்டு ராஜீவ்காந்தி சமாதியில் புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர சூளுரைத்தோம். அதேபோல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இப்போது சூளுரை எடுப்போம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.






