என் மலர்
புதுச்சேரி
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 81,37,119 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 551 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,641 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,013ஆக உயர்ந்துள்ளது.
புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் நெல் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது.
ஆகவே சம்பா பருவ நெற்பயிர் பயிரிட்ட தகுதியான விவசாயிகள் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதியில் இயங்கும் உழவர் உதவியகங்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வருகிற 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ள இத்தருவாயில் சம்பா நெற் பயிருக்கான பயிர் காப்பீடு விண்ணப்பத்தையும் தங்கள் பகுதியில் உள்ள உழவர் உதவியகம் மூலம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் வேளாண் இயக் குனர் வசந்தகுமார் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆத்மா திட்டத்தின்கீழ் செயல்படும் விளைபொருள் ஆர்வலர் குழுமங்கள், சுய உதவி குழுக்கள், உணவு பாதுகாப்பு மகளிர் குழுக்களுக்கு மாட்டு தீவனப்புல் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மானியத்தொகையாக ஆண்டொன்றுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.800 வீதம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய இவ்வாண்டில் புதியதாக தீவனப்புல் பயிரிட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற் கான விண்ணப்பத்தினை தங்கள் பகுதியில் செயல்படும் உழவர் உதவியகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 10-ந்தேதிக்குள் உழவர் உதவியக அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
புதுவை காவல் துறை பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 2018-ம் ஆண்டு புதுவை காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்த பணியிடங்களில் சேர விரும்பி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இதில் போதுமான சான்றிதழ்கள் இணைக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக போலீஸ் பணிக்கு ஆட்கள் எடுக்கப்படாததால் வேலை தேடும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வயது வரம்பில் 2 ஆண்டுகள் சலுகை வழங்கவேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை வழங்கிட புதுவை அரசு முடிவெடுத்து கவர்னர் கிரண் பெடிக்கு கோப்புகளை அனுப்பியது. ஆனால் அதற்கு அவர் அனுமதி மறுத்து விட்டார். இதையடுத்து வயது வரம்பில் தளர்வு அளிக்கக் கேட்டு சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த ஐகோர்ட்டு வயது வரம்பு சலுகை தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன் பின்னரே 2 ஆண்டுகள் தளர்வு அளித்து உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வு வருகிற 4-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையொட்டி இளைஞர்கள் தொடர்ச்சியாக கடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் காவலர் உடல்தகுதி தேர்வின்போது ஓட்டம் நடக்கும்போது நேரத்தை துல்லியமாக கண்டறிய மைக்ரோ சிப் பொருத்தும் முறைக்கு பதிலாக விசில் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கவர்னர் கிரண் பெடிக்கு புகார்கள் சென்றன. இந்த தேர்வு முறை குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் காவலர் தேர்வினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அரசு தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி அனுப்பியுள்ள குறிப்பாணையில் கூறியிருப்பதாவது:-
உடல் தகுதி தேர்வின்போது டிஜிட்டல் முறைக்கு பதிலாக வேறுமுறையை பயன்படுத்துவது, பிற பிராந்தியங்களில் 400 மீட்டர் ஓட்டத்துக்கான டிராக் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன.
தேர்வு முறைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிமுறை, நிலையாணை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது பிரச்சினைகளை ஏற்படுத்தி கோர்ட்டுக்கு சென்றுவிடும்.
எனவே உரிய அதிகாரம் பெற்றவர் முடிவு எடுக்கும்வரை காவலர் பணிக்கான தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதுதொடர்பான கோப்புகளை தலைமை செயலாளர் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இந்த உத்தரவின் நகல் போலீஸ் டி.ஜி.பி.க்கும் அனுப்பப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று தற்காலிகமாக நிறுத்தி வைத்து கவர்னர் உத்தரவிட்டு இருப்பது வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,908ஆக உயர்ந்துள்ளது.
புதுவை கரிக்கலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நிரூபன்.சமையல் கலை பயின்ற இவர் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு புதுவை திரும்பினார். பின்னர் நோணாங்குப்பம் படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு பாரம்பரிய உணவகம் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவர் தனது ஒட்டலுக்கு ஒரு கிலோ வெங்காயம் எடுத்து வந்தால் அசைவ உணவு இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இதனை அறிந்தவர்கள் வெங்காயத்தை கொடுத்து சாப்பிட்டு செல்கிறார்கள்.வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலும், பழைய பண்டமாற்று முறையை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக ஒட்டல் உரிமையாளர் நிரூபன் கூறினார்.
இவர் ஏற்கனவே 100 திருக்குறள் ஒப்புவித்தால் குடும்பத்துடன் இலவசமாக சாப்பிடலாம். மாமியார்- மருமகள் இணைந்து வந்தால் தோசை இலவசம் என சலுகையில் உணவு விருந்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோ வெங்காயத்துக்கு இலவச அசைவ சாப்பாடு
கொரோனா தொற்று காரணமாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜிப்மரில் இன்று (புதன்கிழமை) முதல் புறநோயாளிகள் சிகிச்சை பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியது.
சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற்று டாக்டருடன் செல்போனில் மருத்துவ கலந்தாலோசனையை கட்டாயமாக பெற வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு துறைகளுக்கும் தொலைபேசி எண்களின் விவரங்கள் ஜிப்மர் இணையதள முகவரியில்www.jipmer.edu.in தரப்பட்டுள்ளது
ஹலோ ஜிப்மர் என்ற ஆன்ட்ராய்டு செயலி உதவியுடனும் முன் அனுமதி பெற்று தொலைபேசி மூலம் மருத்துவ கலந்தாலோசனை, சிகிச்சை சேவைகளை பெறலாம்.
தொலைபேசி மூலம் மருத்துவ கலந்தாலோசனையின் போது நேரில் மருத்துவ ஆய்வு தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் ஜிப்மர் வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இந்த முன் அனுமதிக்கான கைபேசி குறுஞ்செய்தியை உறுதி செய்த பின்னரே ஜிப்மரின் உள்ளே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரும் முககவசம் அணிந்து வருவது கட்டாயமாகும். மேலும், நோயாளியுடன் ஒருவர் மட்டுமே வரலாம் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொற்றானது ஆஸ்பத்திரியின் வெளிப்புற சேவை பிரிவுகளில் பரவுவதை தடுக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.






