என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆட்சி கவிழ்ப்பை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசினார். அவர் பேசியதாவது:-

    மக்களால் தேர்வு செய்த அரசை நாராயணசாமி வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பா.ஜனதா கவிழ்த்துள்ளனர். அநாகரீக அரசியலை அரங்கேற்றி வருகின்றனர்.

    பா.ஜனதாவின் அருவறுப்பான, அராஜகமான, கேவலமான அரசியலை நாராயணசாமி எடுத்துரைத்தார்.

    தேசத்தை பிடித்திருக்கும் பெரும் தீங்கு பா.ஜனதா. கொரோனாவை விட பா.ஜனதா கொடிய நோய். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பை செய்துள்ளனர்.

    ஒரு வகையில் காங்கிரசுக்கு பா.ஜனதா நல்லதையே செய்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். புதுவை மக்களுக்கு நாராயணசாமி என்ன துரோகம் செய்தார் என ஆட்சியை கவிழ்த்தார்கள்?.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தது துரோகமா? மக்களால் தேர்வு செய்த அரசை கலைக்க இவர்கள் யார்? என்.ஆர்.காங்கிரஸ் முகத்தில் தற்போதுதான் வெளிச்சம் விழுந்துள்ளது. அவர்கள் யார்? என்பது தெரியவந்துள்ளது.

    பா.ஜனதாவின் அடாவடி அரசியலுக்கு என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. துணை சென்றுள்ளது. அவர்களையும், ராஜினாமா செய்தவர்களையும் ஓட்டுக்கேட்க வரும்போது வீதிக்குள் நுழையவிடாமல் விரட்டியடிக்க வேண்டும்.

    காங்கிரசுக்கு, கூட்டணிக்கு செய்த துரோகத்தை விட புதுவை மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளனர். பா.ஜனதா விரித்த வலையில் 5, 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்யவேண்டும்.

    இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா சிதைத்துக் கொண்டிருக்கிறது. சாதி வெறியை தூண்டுகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது. எதையும் செய்வோம், எங்களை யார் என்ன செய்ய முடியும்? என்ற அநாகரீமாகன, அறுவருப்பான செயலை செய்யவும் தயாராக உள்ளனர்.

    புதுவை அரசை கலைத் திருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கும் சிக்னல் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்தால் அதனையும் கலைக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கும் ஒத்திகை போல பார்க்கிறோம்.

    ஆனால் தமிழகத்தில் பா.ஜனதா முயற்சி, கனவு பலிக்காது. சில தக்குறுதிகள் வேண்டுமானால் பா.ஜனதாவுக்கு துணை செல்லலாம். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கைகோர்த்து நிற்கிறது.

    தமிழகத்தில் பா.ஜனதாவை ஓட, ஓட விரட்டி அடிப்போம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறும். இது கூட்டணி அரசியல் அல்ல, சமூகநீதியை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

    இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் புதுவையில் நடைபெறும் போரட்டங்களில் பங்கேற்று வருகிறது. நாராயணசாமி ஆட்சியை பறிகொடுத்திருக்கலாம்.

    ஆனால் மிகப்பெரும் வெற்றியை வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி பெறும். தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் -7, அ.தி.மு.க. -4, நியமனம் (பா.ஜ.க.) 3 என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் சமநிலையில் இருந்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்- அமைச்சருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார்.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

    இதுகுறித்து மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் புதுவையில் கடந்த 2 வாரமாக இருந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் -7, அ.தி.மு.க. -4, நியமனம் (பா.ஜ.க.) 3 என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் சமநிலையில் இருந்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்- அமைச்சருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார்.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

    இதுகுறித்து மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் புதுவையில் கடந்த 2 வாரமாக இருந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) ஜிப்மர் கிளை கட்டிடம் திறப்பு, பா.ஜ.க. பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகிறார்.

    இங்கிருந்து அவர் டெல்லிக்கு சென்றதும் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுவை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் சிவக்கொழுந்து கடைபிடிக்கவில்லை என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதையடுத்து காங்கிரஸ்-தி.மு.க., சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சபையில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து முதல்-அமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

    இதனால் புதுவை அரசு கவிழ்ந்தது. சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்தாமல் அரசு பெரும்பான்மையை இழந்தது என்று எப்படி சொல்லமுடியும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்து சட்டப் பேரவையில் உரையாற்றினேன். அந்த நேரத்தில் அரசு கொறடா அனந்தராமன் ஜனாதிபதி தேர்தலில் நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உரிமையில்லை என்ற பிரச்சினையை எழுப்பினார். அதனை சபாநாயகர் ஏற்காத காரணத்தினால் நாங்கள் எங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி வெளிநடப்பு செய்தோம்.

    அதன் பிறகு நான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் சரியான விதிமுறையை கடைபிடிக்கவில்லை. அந்த தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேசிய பிறகு அந்த தீர்மானத்தின் மீது வாக்கொடுப்பு நடத்த வேண்டும்.

    நாங்கள் வெளிநடப்பு செய்தாலும் கூட முதல்- அமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுகிறேன் என்று சபாநாயகர் அறிவிக்க வேண்டும். ஆளுங்கட்சியில் யாரும் இல்லாததால் எதிர்க் கட்சியின் எண்ணிக்கையை எண்ணி எவ்வளவு பேர் எதிர்த்து வாக்களிக்கிறார்கள் என்று பதிவு செய்த பிறகு தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும்.

    அதைவிட்டு விட்டு முதல்- அமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் தீர்ப்பு வழங்குகிறார். வாக்கெடுப்பு நடத்தாமல் எப்படி பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று சபாநாயகர் சொல்ல முடியும்.? இது ஒரு சட்டப் பிரச்னை. இதுசம்பந்தமாக சட்டவல்லுநர்களுடன் கலந்து பேசுவோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி கவர்னர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் கவிழ்ந்தது.

    சட்டசபையில் நம்பிக்கை பிரேரணையை முன்மொழிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியும், ஆளும்கட்சியான காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் சபையை விட்டு வெளியேறினர். இதனால் சபாநாயகர் சிவகொழுந்து, நம்பிக்கை தீர்மானம் நிறைவேறாததால் அரசு தோல்வியடைந்தது என அறிவித்தார்.

    சபையிலிருந்து வெளியேறிய முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் தமிழிசையை சந்தித்து தனது அமைச்சரவையை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார்.

    சட்டசபையில் அரசு கவிழ்ந்து விட்டதால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதவியிழந்து விட்டனர். ஆனால் இதன் பின் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இது மரபுப்படியான செயலாக பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை. சட்டசபை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் அரசு அமைக்க எதிர்கட்சிகள் விரும்பவில்லை.

    மேலும், மாற்று அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரினால் ஒட்டு மொத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் கொறடா அனந்தராமன் கூறியுள்ளார்.

    அதுபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால் புதிய அரசு அமைக்க முடியாது.

    கவர்னர் உத்தரவின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததால் சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சட்டசபை செயலர் கவர்னருக்கு ஒரு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த அறிக்கையை வைத்து கவர்னர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி பரிந்துரை செய்ய உள்ளார்.

    இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யும். இதன்படி புதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும்.

    இதனால் கவர்னரின் நேரடி மேற்பார்வையில் புதுவை அரசு நிர்வாகம் மற்றும் சட்டசபை தேர்தல் நடக்கும்.

    புதுச்சேரி அரசியலும், ஆட்சி கவிழ்ப்பும் எப்போதும் பிரிக்க முடியாததாகத்தான் அமைந்துள்ளன. பிரெஞ்சு விடுதலைக்குப் பின் அமைந்த ஆட்சிகள் பெரும்பாலும் கவிழ்ப்புக்குள்ளானதுதான் கடந்த கால வரலாறாக இருந்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 1974-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வை சேர்ந்த ராமசாமி முதல்-அமைச்சர் ஆனார். பெரும்பான்மை இல்லாததால் அவரது ஆட்சி 21 நாட்களில் கவிழ்ந்தது. பின்னர் ஜனாதிபதி ஆட்சி நடந்தது.

    அதன்பின் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் ராமசாமி முதல்-அமைச்சர் ஆனார். அவரது ஆட்சி 1½ ஆண்டுகாலம் மட்டுமே நீடித்தது. 1990-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.-ஜனதாதளம் கூட்டணி வெற்றிபெற்றது. தி.மு.க.வை சேர்ந்த டி.ராமச்சந்திரன் முதல்-அமைச்சர் ஆனார். ஆனால் கோ‌‌ஷ்டிபூசல் காரணமாக அவரது ஆட்சி 11 மாதத்திலேயே கவிழ்ந்து போனது.

    1996 தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி வென்றது. தி.மு.க.வை சேர்ந்த ஜானகிராமன் முதல்-அமைச்சர் ஆனார். 2000-ம் ஆண்டில் த.மா.கா. விலகியதால் அரசு கவிழ்ந்தது.

    2001-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சண்முகம் தலைமையிலான அமைச்சரவை உருவானது. தேர்தலில் போட்டியிடாததால் 6 மாதத்தில் அவர் பதவி விலக நேரிட்டது.

    2006 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆனார். அமைச்சரவையில் அவருக்கு ஒத்துழைப்பு இல்லாததால் 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக வைத்திலிங்கம் பதவியேற்றார்.

    2016-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று நாராயணசாமி முதல்-அமைச்சர் ஆனார். எம்.எல்.ஏ.க்களின் தொடர் ராஜினாமா காரணமாக அவரது அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது.
    வில்லியனூரில் பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரூபிசகாய சாந்தகுமாரி (55). மாற்றுத்திறனாளியான இவர், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது 15 வயது மகள், 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் திடீரென மாணவி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து ரூபிசகாயசாந்தகுமாரி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், துணைநிலை ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து ஒரு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவரது மாளிகையின் நுழைவாயிலுக்கு வெளியே இரவு-பகல் என்று பாராமல் அங்கேயே உறங்கி தொடர் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது. புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்ட அதே சமயத்தில் தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார்.

    முதலமைச்சர் நாராயணசாமி நேரடியாக வெளியேறி துணைநிலை ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியிருக்கிறார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நேர்மையை புதுச்சேரி மக்கள் நிச்சயம் பாராட்டுவார்கள் என கூறியுள்ளார். ஆனால், புதுச்சேரி போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதை சகித்துக் கொள்ள முடியாத நிலையை வைத்து பாஜகவின் சர்வாதிகார அணுகு முறையை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

    கர்நாடகா, மத்தியபிரதேசம், மணிப்பூர், கோவா என தொடர்ந்து பல மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜக கவிழ்த்ததை சுட்டிக்காட்டியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பதவியிலிருந்து விலகினாலும், மக்கள் மனதிலிருந்து எந்த சக்தியாலும் விலக்க முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சாம, பேத, தான, தண்டங்களை கையாண்டு காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வின் இந்த அறுவறுப்பான அரசியலை விடுதலை சிறுத்தைகள கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:பா.ஜனதா ஏற்கனவே கர்நாடகம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தி ஆட்சி கவிழ்ப்பு செய்வது போன்ற அநாகரிக அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

    அதேபோல தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து உள்ளது.

    இந்த அறுவறுப்பான அரசியலை விடுதலை சிறுத்தைகள கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரியில் ஒத்திகை பார்க்கிறது. தமிழ்நாட்டிலும் இதேபோன்ற அநாகரிக செயலை நடத்தி எதிர்காலத்தில் காலூன்ற துடிக்கிறது. அரசியல் அரங்கில் இதுபோன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கைகளை இதற்கு முன்னர் எந்த அரசியல் கட்சியும் செய்தது இல்லை.

    ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவின் இப்போக்கை கண்டிக்க வேண்டியது. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது அவசியமாகும்.

    கே: அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

    ப: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. வைத்துள்ள கூட்டணி அ.தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது அ.தி.மு.க. தலைமைக்கு நன்கு தெரியும். ஆனாலும் ஊழல், முறைகேடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க., பா.ஜ.க.வை பகைத்துக் கொள்ள இயலவில்லை. நனைந்து ஈரம் சுமக்கும் கதையாக அ.தி.மு.க., பா.ஜனதாவை சுமக்கிறது.

    தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் வெற்றி பெற கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை கூட விலைக்கு வாங்கி அ.தி.மு.க.வை மேலும் பலவீனப்படுத்துவதற்கு தயங்கமாட்டார்கள்.

    தமிழகத்தில் 2-வது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம் ஆகும். அதற்காக அ.தி.மு.க.வை அழிப்பதற்கும் தயங்கமாட்டார்கள். இது அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    கே:தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதா?

    ப: அதிகாரப்பூர்வமாக குழு அமைத்து பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடக்கவில்லை என்றாலும் தொகுதி பங்கீடு குறித்த கலந்துரையாடல் தொடங்கிவிட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவோம். சுமூகமான முறையில் தொகுதி பங்கீடு நடைபெறும்.பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்புகின்றன. தி.மு.க. கூட்டணி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    கே: விடுதலை சிறுத்தை சின்னம் தொடர்பாக என்ன முடிவு எடுத்து உள்ளது?

    ப: சின்னம் குறித்து ஏற்கனவே விடுதலை சிறுத்தையின் நிலைப்பாடு குறித்து பலமுறை கருத்து சொல்லி இருக்கிறேன். தி.மு.க. தரப்பில் அது தொடர்பான சுதந்திரத்தில் தலையிடாது. எனவே சின்னம் தொடர்பான முடிவை விடுதலை சிறுத்தை சுதந்திரமாக எடுக்கும்.

    கே: 5 சதவீத இடங்களில் போட்டியிட்டால் தான் தனி சின்னம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறதே?

    ப: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக சின்னங்களை பெற விரும்பும் கட்சிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே 10 சதவீத இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற வரையறை இருந்ததது.

    இப்போது அது 5 சதவீதமாக தளர்த்தப்பட்டுள்ளது. 5 சதவீதம் என்றால் குறைந்தது 12 இடங்களில் போட்டியிட வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சுயேச்சை வேட்பாளர்களை போல சின்னங்களை கேட்டு பெறலாம். பதிவு பெற்ற அரசியல் கட்சிகளுக்கும் அதில் முன்னுரிமை வழங்குவார்கள். சமூக ஊடகங்கள் வலிமை பெற்று இருக்கிற இந்த சூழலில் பல மாதங்களுக்கு முன்பே சின்னங்களை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    கே: 3-வது அணி குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப: ஒவ்வொரு தேர்தலிலும் பிரதான 2 அணிக்கு மாற்றாக 3, 4-வது அணிகள் உருவாவது உண்டு. அது தவிர்க்க முடியாது. ஆனாலும் இந்த தேர்தலை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான இரு அணிகளே தேர்தல் பலத்தில் முதன்மையானவையாக விளங்கும். மற்ற அணிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

    கே: ரஜினி- கமல் சந்திப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப: ரஜினியின் ஆதரவை கமல் கேட்டு இருக்கலாம். ஆனால் அவர்கள் வெளிப்படையாக சந்திப்பு பற்றி எதுவும் கூறவில்லை. ரஜினிகாந்த் எந்த அணிக்கும் வெளிப்படையான ஆதரவை அறிவிக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததையடுத்து முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. சட்டசபையில் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து ஆட்சி கவிழ்ந்தது. அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து முறைப்படி அறிவித்தார். 

    நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சியை கவிழ்த்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவையைவிட்டு வெளியேறிய நாராயணசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். தனது அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாக கூறினார். இனி ஆளுநரின் முடிவைப் பொருத்து அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.

    ராஜினாமா செய்த நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். இனி முடிவு செய்யவேண்டியது ஆளுநர்தான். நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தக்க தண்டனை கொடுப்பார்கள். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தான் வாக்களிக்க உரிமை உண்டு. நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    நாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேல் 6 மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான் குமார் ஆகியோர் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதனால் 30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாராயணசாமி பெரும்பான்மையை சட்டசபையில் 22-ந்தேதி (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று புதிதாக கவர்னர் பொறுப்பை ஏற்ற டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதனால் சட்டசபையில் நாராயணசாமி அரசின் பலம் 12ஆக குறைந்தது. இதுதொடர்பாக நேற்று மாலையும், இன்று காலை 8 மணிக்கும் நாராயணசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. முதல்-மந்திரி நாராயணசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது அவர் உரையாற்றினார்.

    புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி சோனியா காந்தி, கருணாநிதியின் ஆசியாலும், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் பேராதரவாலும் நடந்து வருகிறது.

    நான் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியை செய்து வருகிறார்கள். இடைத்தேர்தலில் நான் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ், தி.மு.க.வின் ஆதரவோடு வெற்றிபெற்றேன்.

    அதன்பிறகு 3 தேர்தல்களை நான் சந்தித்துள்ளேன். அதில் முக்கியமானது 2019 பாராளுமன்ற தேர்தல். நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 70 சதவீத வாக்குகளை அந்த தொகுதி மக்கள் அளித்து என்னை வெற்றிபெற வைத்தார்கள்.

    அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களது காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

    அதேபோல கூட்டணி கட்சியை சேர்ந்த வெங்கடேசன் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். எங்கள் அணியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் இருந்தன. எதிர் அணியில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா ஆகியவை ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்தன. ஆனாலும் எங்கள் அணி வெற்றிபெற்றது.

    இது புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. புதுச்சேரி மாநில மக்களுடைய ஆதரவோடும், ஒத்துழைப்போடும் இங்கு அமர்ந்து இருக்கின்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேராதரவோடு தொடர்ந்து நாங்கள் மக்கள் நல திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் நிறைவேற்றி வருகிறோம்.

    மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நிதி கிடைக்கவில்லை. மற்றொரு புறம் மத்திய அரசின் நெருக்கடி, இன்னொரு புறம் கிரண்பேடியை துணை நிலை ஆளுநராக நியமித்தது புதுச்சேரி அரசுக்கு தொல்லை.

    இன்னொரு புறம் மத்திய அரசின் ஆட்சி கவிழ்ப்பு வேலை. புதுச்சேரி மாநில மக்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் 5 ஆண்டுகளை நிறைவு செய்த அரசு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் இருப்பது 5 நாளோ, 10 நாளோதான்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களது வேலையை பல ஆண்டுகாலம் காட்டினார்கள். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது அஸ்திரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். நான் எங்களுடைய ஆட்சியில் 4 ஆண்டுகால சாதனைகளை, செயல்பாடுகளை பத்திரிகைகளில் விளம்பரமாக கொடுத்தேன். இருந்தாலும் கூட புதுச்சேரி மாநில மக்களுக்கு அதை நிறைவேற்றும் விதமாக சிலவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.

    கடந்த ஆட்சி காலத்தில் விட்டுவிட்டு சென்ற திட்டங்கள், நிறைவேற்றாமல் சென்ற திட்டங்கள், அடிக்கல் நாட்டாமல் சென்ற திட்டங்கள் எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

    புதுச்சேரியில் 4 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 திறக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உப்பனாறு பாலம் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.

    காரைக்கால் தொகுதியில் நீதிமன்ற வளாகம் நாங்கள் திறந்து இருக்கிறோம். கடற்கரை சாலையில் நீதிபதிகள் தங்கும் விடுதியை புனரமைத்து திறந்து இருக்கிறோம். புதுச்சேரி மாநிலத் தில் வரலாறு காணாத வகையில் 120-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறோம்.

    கொரோனா காலத்தில் எங்கள் அரசின் பணிகள் பாராட்டுக்குரியது. உயிரை பணயம் வைத்து அமைச்சர்கள், காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், செயல்பட்டதை புதுச்சேரி மாநில மக்கள் அறிவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாராயணசாமி பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இதையடுத்து நாராயணசாமி உள்பட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து புறக்கணிப்பு செய்தனர். பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று கூறியபடி வெளியேறினார்கள்.

    இதையடுத்து சபாநாயகர் சில உத்தரவுகளை வெளியிட்டார். நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. அவர் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என்று சபநாயகர் தெரிவித்தார்.

    இதனால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
    4 ஆண்டுகளாக தங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது அஸ்திரத்தை எடுத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி பேசினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-

    மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன். எவ்வளவு இன்னல் வந்தாலும் மக்களுக்காக இரவு பகல் பாராமல் போராடினோம். கடந்த ஆட்சி செய்யத் தவறிய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். கொரோனா காலத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது. மக்களுக்காக தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரி மாநில மக்கள் காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

    ஆனால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றார்கள். முன்னாள் ஆளுநர் கிரண் பேடியும் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது அஸ்திரத்தை எடுத்துள்ளார்கள். 

    புதுச்சேரியை மத்திய பாஜக அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டது. பல மாநிலங்களுக்கு 41 சதவீத வரி கொடுத்தார்கள். ஆனால் புதுச்சேரிக்கு 21 சதவீத வரி மட்டுமே கொடுத்தார்கள். சட்டமன்றம் உள்ள புதுச்சேரியும் டெல்லியும் நிதி கமிஷனில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

    மத்திய அரசு இந்தியை திணிக்க முயன்றது. நாங்கள் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது. நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. இது துரோகம் இல்லையா? மத்திய அரசு செய்யும் துரோகத்தை எதிர்க்கட்சிகள் ஆதரித்தால், அது அவர்களை பாதிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×