என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் உள்துறை மந்திரி அமித் ஷா பிரசார பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டதால், முதல்வர் நாராயணசாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படடது. உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காரைக்காலில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் முன்னிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் பாஜகவில் இணைந்தார்.
அதன்பின்னர் சபாநாயகர் சிவக்கொழுந்து தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பி உள்ளார்.
எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் நீங்களும் ஒரு சிறந்த இடத்துக்கு வர முடியும் என்று புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
பாகூர்:
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் உள்ள ஆர்.கே.என். பீச் ரிசார்ட்டில், புதுவை நகர மற்றும் கிராம அமைப்பு துறை, புதுவை நகர அமைப்பு குழுமம் சார்பில், அரசு துறை அதிகாரிகளுக்கு, பொதுத்துறையில் திட்டமேலாண்மை மற்றும் திட்ட இடர் மேலாண்மை என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நேற்று காலை நடைபெற்றது.
இதில், மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசகர் பிரேம் சிங் கலந்து கொண்டு புதுவை அரசு அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளித்தார். இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர அமைப்பு துறை செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார்
சிறப்பு விருந்தினராக புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் பயிற்சி அளித்த மத்திய அரசு நிதி ஆயோக் ஆலோசகர் பிரேம்சிங்குக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது,
பயிற்சி என்பது நம்மை செதுக்கி சிறப்பாக செயல்பட வைக்கிறது. முறையான பயிற்சி தன்னம்பிக்கையை தருகிறது. எந்த ஒரு வேலையை தொடங்கும் முன்பாக, அதனை எப்படி செய்வது, எப்போது தொடங்கி முடிப்பது என மனதில், கணக்கிட்டு அதனை செய்து முடிக்க வேண்டும். நன்கு பயிற்சி பெற்றவர்கள் பிரச்சினைகளை பார்த்து பக்குவப்படுகின்றனர்.
நான் இவ்வளவு தூரம் உயர்ந்ததற்கு ரகசியம் உள்ளது. அது உழைப்பு மட்டுமே. எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் நீங்களும் ஒரு சிறந்த இடத்துக்கு வர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகர அமைப்பு துறை, நகர அமைப்பு குழுமம், குடிசை மாற்று வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுவை - தமிழக எல்லை பகுதியான கோரிமேடு பகுதியில் மதுபானம், பரிசுப்பொருட்கள் போன்றவைகள் கொண்டு செல்லப்படுகிறதா என இரவு முதலே போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து புதுவை மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்ந நிலையில் புதுவை தமிழக எல்லை பகுதியான கோரிமேடு பகுதியில் மதுபானம், பரிசுப்பொருட்கள் போன்றவைகள் கொண்டு செல்லப்படுகிறதா என இரவு முதலே போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கலால்துறை இணை ஆணையர் சுதாகர், வருவாய்த்துறை துணை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் தலைமையிலான போலீசார் புதுவைக்குள் வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.

மேலும் மது விற்பனை நேரமும் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. புதுவையில் காலை 9 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்படும். இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தது.
தற்போது இரவு 10 மணி வரை மட்டுமே திறந்து இருக்க வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மதுபான கடைகள், ‘கள்’ மற்றும் சாராய கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்.
இதேபோல் மதுபானங்களை அனுமதி பெற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்.
மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எந்த இடத்திலும் வைத்திருக்க கூடாது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆட்சி அமலான நிலையில் புதுவை கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் புதுவையில் ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வழக்கமாக ஜனாதிபதி ஆட்சி நடக்கும்போது அவரது பிரதிநிதியாக கவர்னர்களே மாநில நிர்வாகத்தை கவனிப்பார்கள். அதேபோல் தற்போது புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாநில நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
அவ்வாறு நிர்வாகத்தை கவனிக்கும் கவர்னர்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆலோசகர்களை மத்திய அரசு நியமிக்கும். அந்த விதிகளின் அடிப்படையில் புதுவை கவர்னருக்கும் ஆலோசனை வழங்க 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன்படி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரமவுலி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரல் ஏ.பி.மகேஸ்வரி ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவினை மத்திய அரசின் துணை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். ஆலோசகர்கள் இருவரும் விரைவில் புதுவை வந்து பொறுப்பேற்க உள்ளனர்.

புதுவை மாநிலத்தில் 233 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (அதாவது நேற்று) முதல் அமலுக்கு வந்தது. இது தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும்.
புதுவையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்கள், பேனர்கள் அகற்றப்படும். பொது இடங்களில் வேட்பாளரின் சின்னம் மற்றும் பெயர் தொடர்பாக எழுதவோ, படம் வரையவோ கூடாது. அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில், பிரசாரங்களில் பங்கேற்கக் கூடாது. இது தொடர்பாக புகார் வந்தால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் 10 லட்சத்து 2 ஆயிரத்து 414 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 71 ஆயிரத்து 863 பேர் ஆண்கள். 5 லட்சத்து 30 ஆயிரத்து 438 பெண்கள். 113 பேர் மூன்றாம் பாலினத்தவர். 352 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். 303 பாதுகாப்பு படையினர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட புதிய வாக்காளர்கள் பட்டியல் தனியாக வெளியிடப்படும்.
புதுவை மாநிலத்தில் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கை 1,559 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 9,140 அரசு ஊழியர்களும், 3 ஆயிரத்து 98 போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புதுவையில் 154 கிராமங்களில் உள்ள 233 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதில் 16 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்தம் 36 சோதனைச்சாவடிகள் அமைத்து, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு பணியில் 10 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கெனவே 6 கம்பெனி துணை ராணுவப் படையினர் புதுவைக்கு வந்துள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நேற்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தததை தொடர்ந்து புதுவையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர பதாகைகளை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் இணைந்து அகற்றினர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுவையில் 22 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் பெயர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இடம், முன்பு பணி செய்த இடம் (அடைப்புக்குறிக்குள்) போன்ற விவரங்கள் வருமாறு:-
சிவக்குமார்-மேட்டுப்பாளையம் (திருக்கனூர்), ஜெரோம்-நிரவி (சி.பி.சி.ஐ.டி.), எம்.குமார்-திருக்கனூர் (வில்லியனூர்), வெங்கடேச பெருமாள்-காட்டேரிக்குப்பம் (லஞ்ச ஒழிப்பு துறை), எல்.குமார்-அரியாங்குப்பம் (கிருமாம்பாக்கம்), வெங்கடேசன்-லஞ்ச ஒழிப்பு துறை (சிக்மா செக்யூரிட்டி), வேலு-போக்குவரத்து காவல்நிலையம் கிழக்கு, (பொதுப்பணித்துறை அமைச்சரின் சிறப்பு அதிகாரி), திருமுருகன்-லாஸ்பேட்டை (கோரிமேடு).
புனிதராஜ்-போக்குவரத்து காவல்நிலையம் வடக்கு, (பெரியகடை), கட்ட சுபராஜூ-அரசு ஊழியர் குடியிருப்பு புறக்காவல் நிலையம் (ஏனாம்), பாஸ்கரன்-போக்குவரத்து காவல்நிலையம் தெற்கு (குற்றபதிவேடுகள் துறை), யாக்கோபு-மடுகரை (உணவு கடத்தல் தடுப்பு பிரிவு), பிரியா-மகளிர் காவல்நிலையம் காரைக்கால் (மேட்டுப்பாளையம்), இளவரசன்-முதலியார்பேட்டை (சி.பி.சி.ஐ.டி), சேக் அலாவூதின்- சிக்மா செக்யூரிட்டி (ஆயுதப்படை).
முகமது அலி ஜின்னா-ஒதியஞ்சாலை (வெளிநாட்டு ஆவணங்கள் பதிவகம்), மோகன்-டி.ஆர்.பட்டினம் (காரைக்கால் டவுன்), லாரன்ஸ்-ரெட்டியார்பாளையம் (காரைக்கால் டவுன்), ராஜன்-வில்லியனூர் (அரியாங்குப்பம்), சக்திவேல்-நிரவி (காரைக்கால் டவுன்), பக்தவச்சலம்-திருநள்ளாறு (நெடுங்காடு), மோகன்வேலு-போக்குவரத்து காவல்நிலையம் டி.ஆர்.பட்டினம் (கோட்டுச்சேரி).
இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலக போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

புதுவை மாநிலத்துக்கு பிரதமர் மோடி எந்த புதிய திட்டத்தை அறிவித்தார்? என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்துள்ளார். அதில் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை 6 ஆண்டுகளாக கிடப்பில் போட்டார். ஆனால் இப்போது ரூ.2 ஆயிரத்து 426 கோடி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த 4 வழிச்சாலையில் 15 கி.மீ. மட்டுமே காரைக்கால் வழியாக செல்கிறது.
மீதமுள்ள 95 சதவீத சாலை தமிழக பகுதியில் வருகிறது. ஆனால் அது புதுவைக்கான திட்டம் போன்று புதுவை, காரைக்கால் மக்களை திசை திருப்பும் விதமாக புதுவை வந்து அடிக்கல் நாட்டுகிறார். காரைக்கால் ஜிப்மர் கிளைக்கு 4 ஆண்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு இதுவரை நிதி ஒதுக்காமல் 4 ஆண்டு கழித்து வந்து அடிக்கல் நாட்டுகிறார். மதுரையில் எய்ம்ஸ் கிளை அமைக்க அடிக்கல் நாட்டி 6 ஆண்டு ஆகிறது. ஆனால் இதுவரை எந்தவித பணியும் நடக்கவில்லை.
சாகர்மாலா திட்டம் அறிவித்து 3 வருடமாகிவிட்டது. ஆனால் இப்போதுதான் அடிக்கல் நாட்டுகிறார். புதுச்சேரி நகராட்சி கட்டிடம் முழுக்க முழுக்க உலக வங்கியின் கொடையில் கட்டப்பட்டது. அதற்கு மத்திய அரசு ஒரு பைசாகூட நிதி தரவில்லை. அது சுனாமி நிதியில் கட்டப்பட்டது. அப்படியிருக்க அதை திறக்க பிரதமருக்கு எங்கு தார்மீக உரிமை உள்ளது?
புதுவையில் வளர்ச்சி இல்லை என்று பிரதமர் பேசுகிறார். புதுவை மாநிலத்தின் வளர்ச்சி 10.2 சதவீதம். ஆனால் மத்திய அரசின் வளர்ச்சி விகிதம் மைனஸ் 7 சதவீதம் தான்.
புதுவை மாநிலத்துக்கு என்று ஏதாவது புதிய திட்டத்தை அறிவித்தாரா? அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், ரேஷன்கடை திறப்பு, ஊழியர் சம்பளம் என பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் இருந்தது. மில்கள் மூடல், மீனவர் உதவித்தொகை உயர்த்தி வழங்காதது, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது எல்லாம் அவரால் நியமிக்கப்பட்ட கவர்னர் செய்தது. அதற்காக எங்களை எப்படி குறைகூற முடியும்?
புதுவை ஏற்கனவே கல்வி, சுகாதாரம், சுற்றுலாவில் முதல் இடத்தில் உள்ளது. இவர்களால் புதுவையில் ஆட்சியை கவிழ்த்ததை தவிர வேறு எந்த திட்டமும் வரவில்லை. இப்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். இப்போதுகூட ரூ.90 கோடியில் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்புதல் அளித்திருப்பது நாங்கள் அனுப்பிய கோப்புக்குத்தான். எங்களது திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைத்து இருந்தால் புதுவை இன்னும் வளர்ச்சி பெற்றிருக்கும். எங்கள் அரசை கவிழ்த்ததில் எனக்கு வருத்தமில்லை. மக்கள் நல திட்டங்களை தடுத்து நிறுத்தியதுதான் எனக்கு வருத்தம்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கூறும்போது, புதுவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் மார்ச் மாதம் 5-ந்தேதி வரை கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் தலைமையிலான குழுவிடம் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று கூறினார். இதற்கு கட்டணமாக ரூ.5 ஆயிரமும், ஆதிதிராவிடர், பெண்கள் ரூ.2 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் கடந்த தேர்தல்களைப்போல் அல்லாமல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

புதுவை கடற்கரையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரையில் தலைமை செயலகம் அருகே செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கற்களால் ஆன இருக்கைகள் அமைக்கப்பட்டு அதன் மீது அமர்ந்து கடலை ரசிக்கவும், நடமாடும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் அருண், சுந்தரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது புதிதாக அமைக்கப்பட்ட கற்களால் ஆன இருக்கையில் அமர்ந்து கடலை ரசித்தார். அந்த சமயத்தில் தன்னை படம் எடுத்த 2 குழந்தைகளையும் தன்னருகே அமரவைத்து அவரது சொந்த பணத்தில் இருந்த கடற்கரையில் பொம்மை விற்ற பெண்ணிடம் பொம்மை வாங்கி கொடுத்தார்.
அவர் அங்கிருந்து புறப்படும்போது அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் அவரை சந்தித்து தங்களது சம்பளத்தை உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள், உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ரேஷன்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அங்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதுபோல் கர்ப்பிணிகளுக்கும் சத்தான உணவு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தை போல் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும். மாணவர்களுக்கான உணவு திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார்.
புதுவையிலும் 10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் பள்ளிக்கல்வியை பொறுத்தவரை தமிழக கல்வி வாரியத்தின் பாடத்திட்டமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பாடப்புத்தகங்களே கொள்முதல் செய்யப்பட்டு புதுவையில் பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் அரசு பொதுத்தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களும் தமிழக கல்வி வாரியம் தயாரித்து புதுவைக்கு வழங்குகிறது. விடைத்தாள்களும் தமிழக ஆசிரியர்களால் திருத்தப்பட்டு மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் கொரோனா காரணமாக 9, 10, 11-ம் வகுப்புக்கான தேர்வுகள் நடத்தப்படாமலேயே அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு காரணமாக புதுவை அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் தமிழக கல்வி வாரியம் தயாரிக்கும் கேள்வித்தாள்கள்தான் புதுவையிலும் வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே புதுவையிலும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அறிவிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
புதுவை, காரைக்காலில் தமிழக கல்வி வாரிய பாடத்திட்டம் தான் கடைபிடிக்கப்படுகிறது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள்கள் தமிழக அரசிடமிருந்தே பெறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 9, 10, 11 வகுப்புகளுக்கு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான சுற்றறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது? என்று தெரியவில்லை. அதை பார்த்த பின்னர் அதற்கு தகுந்தாற்போல் புதுவை அரசு நடவடிக்கை எடுக்கும்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி உயர்மட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுகாதாரத்துறை செயலர் அருண் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சுகாதார பணியாளர்கள் 33 சதவீதம், முன்களப்பணியாளர்கள் 6.25 சத வீதம் பேர் தான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவித பாதிப்பு மற்றும் பின்விளைவு ஏற்படாது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பல மாநிலத்தில் 2-ம் சுற்று தொற்று பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை சுமார் 1.25 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அனைவரும் எந்தவித பக்க விளைவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகங்கள் மூலமாக தடுப்பூசியின் பயன்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சுகாதாரத்துறை செயலர் அருண், ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் டாக்டர்கள் தடுப்பூசியின் நன்மையை எடுத்துரைத்தனர்.
முத்தியால்பேட்டையில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கமலா. சம்பவத்தன்று இவர், அந்த பகுதியில் உள்ள வரதவள்ளி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றார். அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அப்போது மர்மநபர் ஒருவர் கமலா அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார். வீட்டிற்கு வந்து பார்த்த பின்னர் தான் தங்க சங்கிலி பறிபோனது கமலாவுக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவர், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.