என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "muthialpet"

    முத்தியால்பேட்டையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். மோட்டார் ரீவைண்டிங் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். ஆனாலும் சித்ரா வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மின்விசிறி கொக்கியில் சேலையால் சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரவேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    முத்தியால் பேட்டையில் தொழில்போட்டியில் தொழிலாளியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை சாராயக்கடை அருகே நேற்று இரவு ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் முத்தியால் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விசாரணை நடத்தியதில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தவர் மரக்காணம் அருகே வெண்ணாங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 40) என்பதும், இவர் புதுவையில் தங்கி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்த குமார் (35) என்பவரிடம் சேர்ந்து வீடுகளில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் குமாரிடம் வேலை செய்து வந்த பழனி கடந்த சில நாட்களுக்கு முன்பு குமாரின் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டில் தனியாக சென்று செப்டிக் டேங்கை சுத்தம் செய்து அதற்குண்டான பணத்தை பழனி பெற்றார். இது, குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    நேற்று இரவு பழனி முத்தியால் பேட்டையில் உள்ள சாராய கடைக்கு சாராயம் குடிக்க வந்தார். பின்னர் சாராயம் குடித்து விட்டு அருகில் உள்ள அரசு பள்ளி அருகே பழனி நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த குமார் பழனியை பார்த்ததும் கடும் ஆத்திரம் அடைந்தார். அவர் பழனியை சரமாரியாக தாக்கினார். அப்போது பழனி மயங்கி கீழே சாய்ந்தார். ஆனாலும், ஆத்திரம் தீராமல் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து பழனி தலையில் போட்டார். இதில், பழனி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் இன்று காலை வீட்டில் பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நோய் கொடுமையால் மனமுடைந்த ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவரது மகள் ஜெகதீஸ்வரி (வயது 27). பி.டெக். படித்து முடித்து இருந்த இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக ஜெகதீஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாக வில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஸ்வரிக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெகதீஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி அவர் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெகதீஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×