என் மலர்
செய்திகள்

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
ஜனாதிபதி ஆட்சி அமலான நிலையில் கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்
ஜனாதிபதி ஆட்சி அமலான நிலையில் புதுவை கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் புதுவையில் ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வழக்கமாக ஜனாதிபதி ஆட்சி நடக்கும்போது அவரது பிரதிநிதியாக கவர்னர்களே மாநில நிர்வாகத்தை கவனிப்பார்கள். அதேபோல் தற்போது புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாநில நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
அவ்வாறு நிர்வாகத்தை கவனிக்கும் கவர்னர்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆலோசகர்களை மத்திய அரசு நியமிக்கும். அந்த விதிகளின் அடிப்படையில் புதுவை கவர்னருக்கும் ஆலோசனை வழங்க 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன்படி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரமவுலி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரல் ஏ.பி.மகேஸ்வரி ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவினை மத்திய அரசின் துணை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். ஆலோசகர்கள் இருவரும் விரைவில் புதுவை வந்து பொறுப்பேற்க உள்ளனர்.

Next Story