search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடமாற்றம்
    X
    இடமாற்றம்

    புதுவையில் 22 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுவையில் 22 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுவையில் 22 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களின் பெயர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இடம், முன்பு பணி செய்த இடம் (அடைப்புக்குறிக்குள்) போன்ற விவரங்கள் வருமாறு:-

    சிவக்குமார்-மேட்டுப்பாளையம் (திருக்கனூர்), ஜெரோம்-நிரவி (சி.பி.சி.ஐ.டி.), எம்.குமார்-திருக்கனூர் (வில்லியனூர்), வெங்கடேச பெருமாள்-காட்டேரிக்குப்பம் (லஞ்ச ஒழிப்பு துறை), எல்.குமார்-அரியாங்குப்பம் (கிருமாம்பாக்கம்), வெங்கடேசன்-லஞ்ச ஒழிப்பு துறை (சிக்மா செக்யூரிட்டி), வேலு-போக்குவரத்து காவல்நிலையம் கிழக்கு, (பொதுப்பணித்துறை அமைச்சரின் சிறப்பு அதிகாரி), திருமுருகன்-லாஸ்பேட்டை (கோரிமேடு).

    புனிதராஜ்-போக்குவரத்து காவல்நிலையம் வடக்கு, (பெரியகடை), கட்ட சுபராஜூ-அரசு ஊழியர் குடியிருப்பு புறக்காவல் நிலையம் (ஏனாம்), பாஸ்கரன்-போக்குவரத்து காவல்நிலையம் தெற்கு (குற்றபதிவேடுகள் துறை), யாக்கோபு-மடுகரை (உணவு கடத்தல் தடுப்பு பிரிவு), பிரியா-மகளிர் காவல்நிலையம் காரைக்கால் (மேட்டுப்பாளையம்), இளவரசன்-முதலியார்பேட்டை (சி.பி.சி.ஐ.டி), சேக் அலாவூதின்- சிக்மா செக்யூரிட்டி (ஆயுதப்படை).

    முகமது அலி ஜின்னா-ஒதியஞ்சாலை (வெளிநாட்டு ஆவணங்கள் பதிவகம்), மோகன்-டி.ஆர்.பட்டினம் (காரைக்கால் டவுன்), லாரன்ஸ்-ரெட்டியார்பாளையம் (காரைக்கால் டவுன்), ராஜன்-வில்லியனூர் (அரியாங்குப்பம்), சக்திவேல்-நிரவி (காரைக்கால் டவுன்), பக்தவச்சலம்-திருநள்ளாறு (நெடுங்காடு), மோகன்வேலு-போக்குவரத்து காவல்நிலையம் டி.ஆர்.பட்டினம் (கோட்டுச்சேரி).

    இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலக போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×