என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை புதுவை மத்திய பல்கலைக் கழகம் மூடப்படுகிறது.

    புதுச்சேரி:

    கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த 23-ந் தேதி முதல் நேற்று (27-ந் தேதி) வரை புதுவை பல்கலைக் கழகம் மூடப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு பல்கலைக்கழகம் மூடப்படும் என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சேகர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை புதுவை மத்திய பல்கலைக் கழகம் மூடப்படுகிறது.

    பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய சேவை பணிகளுக்கு தடை ஏதுமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    புதுவை மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஆயிரத்து 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 13 பேர் பலியாகி இருந்தனர்.

    இந்த நிலையில் தற்போது போலீசாருக்கும் கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் 106 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்குள்ள 41 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதனைத்தொடர்ந்து கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பரிசோதனையில் மேலும் 12 கைதிகளுக்கு தொற்று உறுதியானது. இந்த கைதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடந்தது.

    இதில் மேலும் 12 தண்டனை கைதிகளுக்கு தொற்று பரவியது உறுதியானது. இதனால் தொற்று பரவிய கைதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

    புதுவையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அரசு செயலர் அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் ஏற்கனவே 30-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த ஊரடங்கு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    சட்டசபை வாக்கு எண்ணிக்கையையொட்டி கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர்த்து வெளியே நடமாடக்கூடாது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு செல்ல தடை இல்லை.

    வேட்பாளர்கள், முகவர்கள் கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர். பரி சோதனை செய்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாவிட்டால் ரேபிட் பரிசோதனை செய்யலாம்.

    இந்த சான்றுகளுடன் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வர வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இந்திய தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழ் பெற தன்னுடன் 2 நபர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். வெற்றி ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    கலெக்டர் பூர்வா கார்க்

    இதனிடையே ஊரடங்கு குறித்து கலெக்டர் பூர்வா கார்க் கூறியதாவது:-

    இரவு நேர ஊரடங்கை தவிர்த்து மற்ற நேரங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, உணவு, பழங்கள், பாலகம், மீன், இறைச்சிகடைகள், கால்நடை தீவன கடைகள் திறக்கலாம். சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்கள் செயல் படக்கூடாது. ஓட்டல்களில் உணவுகளை பார்சல் மட்டுமே வழங்கலாம்.

    விடுதிகளில் தங்கியுள்ள விருந்தினர்களின் அறைக்கு சென்றே உணவு வழங்க வேண்டும். டீக்கடை, சிற்றுண்டி கடைகளுக்கு அனுமதியில்லை. மருத்துவ மனைகள், ஆய்வகம், மெடிக்கல் கிளீனிக், மருந்து கடைகள், செய்தித்தாள் விநியோகம், ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

    பஸ், ஆட்டோ, டாக்சி பொது வாகன போக்குரவத்து இயங்கலாம். பஸ்களில் நின்று பயணிக்கக்கூடாது. டாக்சியில் டிரைவரை தவிர்த்து 3 பேரும், ஆட்டோ வில் டிரைவரை தவிர்த்து 2 பேரும் பயணிக்கலாம்.

    அனைத்து மத இடங்களும், வழிபாட்டு தலங்களும் மூடப்படும். அவசியமான பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகள் பாதிரியார்கள், கோவில் பணியாளர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மத சபைகள், கூட்டங்கள், திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிது.

    கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் இன்றி நடத்தலாம். பெட்ரோல் விற்பனை நிலையம், வங்கிகள், காப்பீட்டு அலுவலகம், ஏ.டி.எம்., தொலை தொடர்பு இணையம் தொடர்பானவை, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், குடிநீர், கேபிள், சுகாதாரம், ஒளிபரப்பு, தனியார் பாதுகாப்பு சேவைகள், போலீஸ், தீயணைப்பு, தேர்தல் தொடர்பான சேவைகள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி செயல்படும். நீதிமன்றங்கள் இயங்க அனுமதிக்கப்படும்.

    திருமண நிகழ்ச்சியில் 50, இறுதி சடங்கில் 25 பேர் பங்கேற்கலாம். தொழில்துறை உற்பத்தி, தொழிற்சாலை இயங்கலாம். அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து பணி செய்யலாம்.

    புதுவையில் விதிமீறல் தொடர்பாக 2 ஆயிரத்து 830 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    காரைக்கால் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த மேலகாசாகுடியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள், 7 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசா குடியை சேர்ந்த பரத்குமார் என்பவர் வீட்டிலும் மடிக் கணினி, வெள்ளிக்கொலுசு, ரூ. 5 ஆயிரம் திருடு போனது.

    இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்களை விசாரணை நடத்தினர். அப்போது கரூர் குளித்தலை சுக்கம்பட்டியை சேர்ந்த தர்மதுரை (வயது 30), தனது கூட்டாளிகளான முரளி (24), செல்லதுரை (25) ஆகியோருடன் சேர்ந்து 2 வீடுகளிலும் திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து மயிலாடுதுறை செம்பனார்கோவில் பகுதியில் பதுங்கி இருந்த தர்மதுரையை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான தங்கநகைகள், பணம், லேப்டாப், செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள முரளி, செல்லத்துரையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    காரைக்காலில் கடந்த சில மாதங்களில் திருடு போன 20 செல்போன்களை, சிறப்பு அதிரடிப்பிரிவு போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
    காரைக்கால் மாவட்டத்தில் வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் நடந்து முடிந்த 5 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள், காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அர்ஜூன் சர்மா ஆய்வு செய்தார். அப்போது அங்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆதர்ஷ், சுபாஷ், துணை மாவட்ட தேர்தல் அதிகாரி பாஸ்கரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சண்முகாபுரத்தில் உள்ள மத்திய சமையல் கூடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மலிவு விலையில் (ரூ.10-க்கு) உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் மேலும் பல இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாண்லே பாலகங்களில் உணவு வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சண்முகாபுரத்தில் உள்ள மத்திய சமையல் கூடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு உணவு தயாரிக்கும் முறைகளை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் மதிய உணவு சாப்பிட உணவு பொட்டலம் ஒன்றை வாங்கி சென்றார்.
    வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்ததால் மனமுடைந்து 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மூலக்குளம்:

    புதுவை மூலக்குளம் சாலை தெருவை சேர்ந்தவர் ஜான்பிராஸ்வா (வயது 50). இவரது மனைவி ஜெனிதாமேரி. இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகள் இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் (வயது 16). ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மகளை கதிர்காமம் அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர். தனது தோழிகள் ஒரே பள்ளியில் படிக்கும்போது, தன்னை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தது குறித்து இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் மனம் வருந்தினார்.

    நேற்று முன்தினம் காலை ஜான்பிராஸ்வாவும், அவரது மனைவி ஜெனிதா மேரியும் வேலைக்கு சென்றனர். வீட்டில் இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் மட்டும் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம்பக்கத்தினருடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது மின்விசிறியில் இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கொரோனா 2-வது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா மையங்கள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன.
    புதுச்சேரி:

    கொரோனா முதல் அலை தீவிரம் குறைந்த நேரத்தில் பல இடங்களில் தோற்றுவிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன. மருத்துவமனைகளில் மட்டுமே நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் நிலைமை கட்டுக்குள் இருந்தது.

    இந்தநிலையில் கொரோனா 2-வது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா மையங்கள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன.

    கூடுதலாக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகளில் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக அதிக அளவில் மக்கள் குவிந்தனர். ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
    மடுகரையில் ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கணவரை மனைவி கண்டித்ததால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    மடுகரை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அமீர் முகமது (வயது48). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி அல்மாஸ்பேகம் (38). இவர்களுக்கு சர்புதீன், உமர்அலி என்ற மகன்கள் உள்ளனர். அமீர் முகமதுவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதற்கிடையே அவர் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். குடிப்பழக்கத்தை விடும்படி அல்மாஸ்பேகம் கண்டித்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று அமீர் முகமது வீட்டின் அருகே உள்ள குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருமாம்பாக்கம் அருகே தூக்குபோட்டு தொங்கிய முதியவர் கயிறு அறுந்ததில் வாய்க்காலில் விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

    பாகூர் அருகே மேல்பரிக்கல்பட்டு பால்வாடிவீதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது44). இவர் பரிக்கல்பட்டு ரோட்டில் உள்ள முள்ளோடை சாராயக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் ஊரடங்கு என்பதால் சாராயக்கடையை மூடிவிட்டு இரவு வீட்டுக்கு வந்தார். நேற்று சாராயக்கடையை பார்வையிட நடராஜன் சென்றார்.

    அப்போது முள்ளோடை சோதனைச்சாவடி அருகே உள்ள வாய்க்காலில் முதியவர் ஒருவர் கவிழ்ந்த நிலையில் கிடப்பதை நடராஜன் கண்டார்.

    இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது தன்னிடம் தினமும் சாராயம் குடிக்க வருபவர் என்பது தெரியவந்தது. பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் அந்த முதியவர் தினமும் சாராயம் குடித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அந்த முதியவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த அந்த முதியவர் அருகில் உள்ள மரத்தில் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கியுள்ளார்.

    பாரம் தாங்காமல் கயிறு அறுந்ததால் வாய்க்காலில் விழுந்து அந்த முதியவர் இறந்து போனது தெரியவந்தது.

    இதுகுறித்து நடராஜன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அந்த முதியவர் யார்-எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வில்லியனூர் அருகே கழிவுநீர் வாய்க்கால் தகராறில் அரசு அச்சக ஊழியரை தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் காலனி முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி அய்யம்மாள்(வயது42). இவர் புதுவை அரசு அச்சகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை அய்யம்மாள் தனது வீட்டின் எதிரே தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த கழிவுநீர் பக்கத்து வீட்டை சேர்ந்த சீத்தாராமன் என்பவரின் வீட்டின் பக்கம் சென்றது.

    இதையடுத்து சீத்தாராமன் மற்றும் அவரது மனைவி தனம் மற்றும் சீத்தாராமனின் தந்தை நாராயணசாமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி அய்யம்மாளை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து அய்யம்மாள் மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    மூலக்குளம் அருகே வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்ததால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் சாலை தெருவை சேர்ந்தவர் ஜான்பிராஸ்வா. இவரது மனைவி ஜெனிதாமேரி. இருவரும் ஒரே நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களது மகள் இசபெல்ஜீஸ்தின் (வயது16). இவர் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தார்.

    இதற்கிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக இசபெல்ஜீஸ்தினை அரசு பள்ளியில் சேர்க்க அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

    இந்தநிலையில் இசபெல்ஜீஸ்தினின் பள்ளி தோழிகள் தாங்கள் அதே பள்ளியில் மேற்படிப்பிற்காக ஆன்லைன் வகுப்பில் படித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் இசபெல்ஜீஸ் தின் மன வருத்தத்தில் இருந்து வந்தார். தோழிகள் ஒரே பள்ளியில் படிக்கும் போது தன்னை பெற்றோர் அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளார்களே என சோகத்தில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை ஜான்பிராஸ்வாவும் அவரது மனைவி ஜெனிதா மேரியும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.

    வீட்டில் இசபெல் ஜீஸ்தின் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து கணவன்-மனைவி வீட்டுக்கு வந்த போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது இசபெல் ஜீஸ்தின் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மகளை தூக்கில் இருந்து மீட்டு ஒரு ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இசபெல்ஜீஸ்தின் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜான் பிராஸ்வா ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×