என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது.
- கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர்.
புதுச்சேரி:
நர்சுகள் தேர்வில் தற்காலிக நர்சுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல்பாடு குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இதன்பின் எதிர்கட்சித் தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை நிரப்ப முடியவில்லை. இதற்கு அதிகாரிகள்தான் தடையாக உள்ளனர்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது புதிதாக ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அரசு செயலர், தலைமை செயலர் நர்சுகளை பணி நிரந்தரம் செய்வதை தடுக்கின்றனர்.
முதலமைச்சரிடம் நர்சுகளோடு சென்று கோரிக்கை வைத்தோம். அப்போது முதலமைச்சர், எதையும் செய்ய முடியவில்லை.
தற்காலிக செவிலியர்களுக்கே 3 மாதத்திற்கு ஒரு முறை சம்பளம் வழங்க முடியவில்லை. இவர்களை ஏன் பணியில் வைத்துள்ளீர்கள்? என அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.என மன உளைச்சலை முதலமைச்சர் கொட்டியுள்ளார். அவர் செய்ய நினைத்ததை அவரால் செய்ய முடியவில்லை.
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்த முதலமைச்சர் பின்பக்கமாக போய்விடலாமா? என சொல்லும் அளவுக்கு முதலமைச்சரையும், தேர்வு செய்த அரசையும் மதிக்காமல் தனி அரசு நடத்தி வருகின்றனர். மக்கள் கோரிக்கைகள், சட்டமன்ற அறிப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. செவிலி லயர்களுக்கு ஒரு ஆண்டுக்குகூட பணி வழங்க முடியவில்லை.
முதலமைச்சர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் எதையும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.
இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், வாக்களித்த மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. புதுவை மக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் இதற்கு நல்ல பதில் கிடைக்கும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் புதுவையில் எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார். எல்லா கோப்புகளிலும் அவர் எடுக்கும் முடிவுப்படிதான் நடக்கிறது. பா.ஜனதா அளித்த வாக்குறுதிப்படி புதுவைக்கு இதுவரை எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 105 நர்சு பணி இடங்களை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
- நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு சுகாதாரத்துறை 105 நர்சு பணி இடங்களை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
இப்பணிக்கு வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், புதுவை அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சுகாதாரத்துறை மூலம் கொரோனா தொற்று காலத்தில் பணி அமர்த்தப்பட்ட தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த நர்சுகள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றினர்.
மத்திய அரசு கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த டாக்டர், நர்சு மற்றும் உதவியாளர்களுக்கு தக்க சன்மானமும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கியுள்ளது.
ஆகையால், தற்போது நிரப்பப்பட உள்ள நர்சு பணியிடங்களுக்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும் கொரோனா காலத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் அஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய நர்சுகளுக்கு முன்னுரிமை அளித்து பணிக்கான இடங்களை நிரப்பவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் பொதுப்பணித்துறை மூலம் சாலை அமைக்க பணிகள் தொடங்கியது.
- புதைவட கேபிள் அமைக்கும் பணி முழுமை பெறாமல் இருப்பதால் சாலை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் பொதுப்பணித்துறை மூலம் சாலை அமைக்க பணிகள் தொடங்கியது.
இந்த நிலையில் மின்துறை சார்பில் புதைவட கேபிள் அமைக்கும் பணி முழுமை பெறாமல் இருப்பதால் சாலை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடந்தது.
கூட்டத்தீதில், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம், செயற்பொறி யாளர் திரு நாவுக்கரசு, பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்குப் பிரிவு செயற்பொறியாளர் சவுந்தர்ராஜன், உதவிப் பொறியாளர் சீனிவாசன், மின்துறை புதைவடப் பிரிவு உதவிப் பொறியாளர் லோகநாயகி, கொம்யூன் இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாட வீதிகளில் விடுபட்டுள்ள மின் புதைவட கேபிள் அமைக்கும் பணியை துரிதாக முடித்துக் கொடுத்து, பொதுப்பணி த்துறை மூலம் சாலை அமைக்கும் பணியை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கொம்யூன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவுறுத்தினார்.
மேலும், பொதுப்பணித்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மூலம் வில்லியனூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.
- மயிலம் நர்சிங் கல்லூரியில் மாணவர் செவிலியர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார்.
புதுச்சேரி:
மயிலம் நர்சிங் கல்லூரி யில் மாணவர் செவிலியர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
மயிலம் சுப்பிரமணிய சுவாமி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோரின் வழிகாட்டு தலின் படி ரத்ததான முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார். இயக்குநர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார். இதில் மயிலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் கிரிஜா மற்றும் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பாரதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் மயிலம் கல்வி குழும மாணவர்கள், பேராசிரியர்கள் ஆசிரி யர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமில் கலந்து கொண்ட வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் மாணவர் செவிலியர் சங்கத்தின் பேராசிரியர் வைஷ்ணவி நன்றி கூறினார்.
- புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா. கூட்டணி ஆட்சி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது.
- இந்த நிலையில் அடுத்த வாரம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வருகை தர உள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா. கூட்டணி ஆட்சி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வருகை தர உள்ளார்.
அவரின் வருகையை யொட்டி புதுவை அரசு துறைகள் அனைத்தும் சுறுசுறுப்படைந்துள்ளன. துறைரீதியாக புதிய திட்டங்கள், ஏற்கனவே முடிந்துள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டங்களை நடத்தி பட்டியலை தயாரித்து வருகின்றன.
அமைச்சர் தொடங்கி வைக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் மத்திய நிதித்துறை கேட்டுள்ளது. புதுவைக்கு வரும் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, மாநிலத்தின் நிதி சிக்கல்கள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக மாநில நிதித்துறை முழுமையான நிதி பிரச்சினைகள் குறித்த அறிக்கையை தயாரித்து வருகிறது.
புதுவையை நிதிக்குழு வில் இணைக்க வேண்டும். மாநில சிறப்பு நிதியுதவி திட்டத்தில் புதுவையை இணைத்து ரூ.2 ஆயரித்து 328 கோடி தர வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு 100 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை புதுவை அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.
- தொழிலாளர் துறை பயிற்சி பிரிவு உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
- அருகில் உள்ள தொழில்பயிற்சி நிலையங்களிலும் நேரில் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி:
புதுவை தொழிலாளர் துறை பயிற்சி பிரிவு உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பயிற்சி நிலையங்களில் ஒன்று, 2 ஆண்டு பயிற்சி படிக்க விரும்பும், 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 1-ம் தேதி முதல் சென்டாக் இணையதளத்திலோ, தொழிலாளர் துறை இணையதளத்திலோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அருகில் உள்ள தொழில்பயிற்சி நிலையங்களிலும் நேரில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியை சர்வதேச நடுவர் பகவத்சிங் தொகுத்து வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான தேக்வோண்டோ போட்டிகள் லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
சப் ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் என 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை புதுச்சேரி தேக்வோண்டோ மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளியும், 2-ம் இடத்தை மேஜிக்லெக் தேக்வோண்டோ மார்ஷல் ஆர்ட்ஸ் கிளப்பும், 3-ம் இடத்தை புத்தா சாம்பியன் தேக்வோண்டோ கிளப்பும் பெற்றனர்.
இப்போட்டியை பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத் தலைவரும் வேளாண் துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் மற்றும் துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் தொழில் அதிபரும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகருமான புவனா என்கிற புவனேஸ்வரன் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தார். சங்க நிறுவனத் தலைவர் ஸ்டாலின், ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகரன் மற்றும் சி.இ.ஓ. முத்துகேசவலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீயணைப்புத்துறை அதிகாரி ரித்தோஷ்சந்திரா, கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் சங்க செயலாளர் மஞ்சுநாதன் வரவேற்புரை ஆற்றினார், பொருளாளர் அரவிந்த் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை சர்வதேச நடுவர் பகவத்சிங் தொகுத்து வழங்கினார், பிரேவ் ஹார்ட் தேக்வோண்டோ பயிற்சி பள்ளியின் செயலாளர் நந்தகுமார் விழா ஏற்பாடு களை செய்திருந்தார்.
வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்கின்றனர்.
- நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழி சாலை தற்போது பணி நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில் மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
புதுச்சேரி:
நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழி சாலை தற்போது பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம்.
இந்த மாட்டுச்சந்தையில் மாடுகள் மட்டுமின்றி காய்கறிகள், பழவகைகள், கருவாடு மற்றும் விவசாய த்திற்கு தேவை யான இடு பொருட்களை கடைகள் அமைத்து வியாபாரிகள் சந்தை பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் மதகடிப்பட்டில் இருந்து மடுகரை செல்லும் சாலை மேம்பால பணிக்காக முற்றி லுமாக அடைக்கப்பட்டு மடுகரை செல்லும் அனைத்து வாகனங்களும் சந்தை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால் சந்தை பகுதியில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வியாபாரிகள் நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழி சாலையி லேயே கூடாரங்களை அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
வியாபாரிகளின் இன்னல்களைப் போக்க உடனடியாக மடுகரை செல்லும் சாலையை சரி செய்து வாகனங்களை அந்த வழியாக அனுமதித்து சந்தை பகுதியில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அமைச்சக ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
- படித்த இளைஞர்களை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தூண்டுகிறார்.
புதுச்சேரி:
புதுவை ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் முத்தியால்பேட்டை யில் உள்ள விஜிலென்ஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அமைச்சக உதவியாளர் பணிக்கான நியமன விதி 2012-ல் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது.
அப்போதைய பணி யாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகாரிகள் தவறுதலாக அளித்த தகவல்களால் 20 சதவீதம் பணியிடங்கள் நேரடி நியமனம், வெளிமாநிலத்தினர் பங்கு பெறும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த நியமன விதிகளுக்கு அமைச்சக ஊழியர்கள், அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏனெனில் உதவியா ளர்கள் நேரடி நியமனத்தில், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் விண்ணப் பிக்கலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது.
எல்.டி.சி., யூ.டி.சி.க்கு அடுத்தபடியாக உள்ள உதவியாளர் பதவியை நேரடி நியமனம் மூலம் நிரப்பினால் தேக்க நிலை ஏற்பட்டு, வரும்காலத்தில் மண்ணின் மைந்தர்களான புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும்.
அரசு நிர்வாகத்தில் முக்கிய பதவியான உதவி யாளர் பதவியை அனுபவம் வாய்ந்த யூ.டி.சி.க்களை கொண்டு நிரப்பினால்தான் நிர்வாகம் செம்மையாக இருக்கும். ஊதியக்குழு பரிந்துரையில் குறிப்பிட்டு ள்ளது போல 3-ம் நிலையில் நேரடி நியமனத்தை கைவிட வேண்டும்.
தற்போது 116 யூ.டி.சி. காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வெளி யிட்டுள்ளது. இதோடு 600 யூ.டி.சி.க்களை உதவியா ளர்களாக பதவி உயர்த்தி னால் இந்த காலி பணியிட எண்ணிக்கை 716 ஆக உயரும்.
இதன்மூலம் 716 யூடிசி பணியிடங்களில் வேலை யில்லா பட்டதாரி இளைஞர்கள் மூலம் நிரப்ப வாய்ப்பு ஏற்படும். மேலும் 2 ஆண்டு வயது வரம்பு குரூப் சி பதவியில் அளிக் கப்பட்டுள்ளதால் அரசு வேலைவாய்ப்பு கிடைப்பது பிரகாமாக உள்ளது.
எனவே உதவியாளர் பதவியை 7 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் யூ.டி.சி.க்களை கொண்டு சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
புதுவை பொதுப்பணித் துறையில் பணியாற்றும் நபர் நேரடி நியமனத்தை ஊக்குவிக்கிறார். இவர் வேலைவாயப்பு பயிற்சி மையத்தை நடத்தி வரு வதால் தனக்கு சாதகமாக படித்த இளைஞர்களை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தூண்டுகிறார்.
அப்பாவி இளைஞர்கள் உண்மை நிலையை அறி யாமல் அவரின் தூண்டு தலுக்கு பலியாகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜிலென்சில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அறங்காவலர் குழுவினர் புகார்
- அந்த இடம் காலியாக இருப்பதால் ஒரு கும்பல் 15 ஆண்டாக ஆக்கிரமித்து தனது பயன்பாட்டில் வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 65 ஆயிரம் சதுர அடி நிலம் ரெயின்போ நகரில் இருந்தது.
கோவில் நிலத்தை ஒரு கும்பல் போலி பத்திரம் மூலம் பதிவு செய்து வீட்டுமனைகளாக மாற்றி விற்றுவிட்டனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் போலி பத்திரம் மூலம் கோவில் நிலம் விற்கப் பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சார்பதிவாளர் சிவசாமி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர்.
இந்த வழக்கில் பின்புலமாக செயல்பட்ட அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவையின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலமும் அபகரிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கோவில் அறங்காவலர் குழுவினர் இந்து அறநிலையத்துறை மற்றும் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடம் வில்லியனூர் பைபாஸ் 4 முனை ரோடு சந்திப்பில் உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை கோவில் நிர்வாகம் வாங்கியது. அப்போது வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் நாயக்கர் என்பவர் 3 போகம் பயிர் செய்து கோவில் நிர்வாகத்திற்கு குத்தகை கொடுத்து வந்தார். அவருக்கு வயதான கா ரணத்தினால் அந்த நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டார்.
அந்த இடம் எதற்கும் பயன்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த இடத்தை சுற்றி பல்வேறு நகர்கள் உருவாகி விட்டன. தற்போது அந்த இடம் காலியாக இருப்பதால் ஒரு கும்பல் 15 ஆண்டாக ஆக்கிரமித்து தனது பயன்பாட்டில் வைத்துள்ளனர்.
சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள ரூ.4 கோடி மதிப்புள்ள கோவில் சொத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை, வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்கட்சி தரப்பில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி உள்ளது.
- காங்கிரசின் கோட்டை புதுவை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என புதுவை காங்கிரசார் விரும்புகின்றனர்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதமே உள்ள நிலையில் அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதேபோல் மாநிலங்களிலும் மாநில கட்சி அளவில் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது. தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்துக்கு பிறகு புதுச்சேரியில்தான் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
தற்போது கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை இழந்துள்ள நிலையில் புதுச்சேரியில் பா.ஜ.க.வை காலூன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் 9 தொகுதியில் போட்டியிட்டு 6 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றது. மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வை கொண்டு செல்ல பாராளுமன்ற தேர்தல் வாய்ப்பாக அமையும் என்று பாஜக தலைமை கருதுகிறது. அதோடு பா.ஜ.க. போட்டியிடும் பாராளுமன்ற தொகுதி பட்டியலிலும் புதுச்சேரி இடம் பெற்றுள்ளது.
இதனால் புதுவையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. எம்.பி. தொகுதி பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாதம் 2 முறை புதுவைக்கு வந்து தொகுதியளவில் பா.ஜ.க.வினரை சந்தித்து பேசுகிறார்.
சமீபத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனும் புதுவைக்கு வந்தார். அவர் பூத் கமிட்டிகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனிடையே மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் பிரசாரம் புதுவையில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் தொகுதிதோறும் வீடு, வீடாக சென்று பா.ஜ.க.வினர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி கூறி வருகின்றனர். இது தேர்தலுக்கு முன்கள பிரசாரமாக பார்க்கப்படுகிறது. மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் பா.ஜ.க. 2024 என குறிப்பிட்டு தாமரை சின்னத்தையும் வரைந்து வாக்கு கேட்க தொடங்கியுள்ளனர்.
புதுவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்கள் பட்டியலையும் புதுவை பா.ஜ.க. மேலிடத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் தற்போதைய சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், நியமன எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம், மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
எதிர்கட்சி தரப்பில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி உள்ளது. இதில் காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் காங்கிரசின் கோட்டை புதுவை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என புதுவை காங்கிரசார் விரும்புகின்றனர்.
சமீபத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக தற்போதைய எம்பி வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி.தான் மீண்டும் போட்டியிடுவார் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
வைத்திலிங்கத்திடம் கட்சித் தலைமை மாநில தலைவர் பதவியை அளிக்கும்போதே, தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக அவர் இறங்கியுள்ளார்.
கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்லும் பணியிலும் வைத்திலிங்கம் இறங்கியுள்ளார். கூட்டணி கட்சி அலுவலகங்களுக்கு சென்று கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து வருகிறார். வைத்திலிங்கம் சார்ந்துள்ள ரெட்டியார் சமூகத்தினர் வாக்குகள் சுமார் 50 ஆயிரம் உள்ளது.
இதோடு சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளையும் இணைத்தால் சுமார் 2 லட்சம் வாக்குகள் கிடைக்கும். இதனை பெறும் பட்சத்தில் வெற்றி எளிது என புதுவை காங்கிரசார் கணக்கிட்டுள்ளனர்.
இதனால் புதுவை பாராளுமன்ற தேர்தல் களத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
- அதிகாரிகளுடன் நேரு எம்.எல்.ஏ. ஆய்வு
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதிய பஸ் நிலையத்தை நேரு எம்.எல்.ஏ ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை, பயணிகள் தங்க ஓய்வறைகள் அமைத்தல், பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வின் போது புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரியான ரவிச்சந்திரன், திருஞானம் நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






