search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலை அமைக்க இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
    X

    அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ.ஆலோசனை நடத்திய காட்சி.

    சாலை அமைக்க இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

    • வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் பொதுப்பணித்துறை மூலம் சாலை அமைக்க பணிகள் தொடங்கியது.
    • புதைவட கேபிள் அமைக்கும் பணி முழுமை பெறாமல் இருப்பதால் சாலை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் பொதுப்பணித்துறை மூலம் சாலை அமைக்க பணிகள் தொடங்கியது.

    இந்த நிலையில் மின்துறை சார்பில் புதைவட கேபிள் அமைக்கும் பணி முழுமை பெறாமல் இருப்பதால் சாலை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தீதில், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம், செயற்பொறி யாளர் திரு நாவுக்கரசு, பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்குப் பிரிவு செயற்பொறியாளர் சவுந்தர்ராஜன், உதவிப் பொறியாளர் சீனிவாசன், மின்துறை புதைவடப் பிரிவு உதவிப் பொறியாளர் லோகநாயகி, கொம்யூன் இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மாட வீதிகளில் விடுபட்டுள்ள மின் புதைவட கேபிள் அமைக்கும் பணியை துரிதாக முடித்துக் கொடுத்து, பொதுப்பணி த்துறை மூலம் சாலை அமைக்கும் பணியை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கொம்யூன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவுறுத்தினார்.

    மேலும், பொதுப்பணித்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மூலம் வில்லியனூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

    Next Story
    ×