search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி
    X

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் புவனா என்ற புவனேஸ்வரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி

    • புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியை சர்வதேச நடுவர் பகவத்சிங் தொகுத்து வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான தேக்வோண்டோ போட்டிகள் லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    சப் ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் என 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை புதுச்சேரி தேக்வோண்டோ மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளியும், 2-ம் இடத்தை மேஜிக்லெக் தேக்வோண்டோ மார்ஷல் ஆர்ட்ஸ் கிளப்பும், 3-ம் இடத்தை புத்தா சாம்பியன் தேக்வோண்டோ கிளப்பும் பெற்றனர்.

    இப்போட்டியை பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத் தலைவரும் வேளாண் துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் மற்றும் துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் தொழில் அதிபரும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகருமான புவனா என்கிற புவனேஸ்வரன் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தார். சங்க நிறுவனத் தலைவர் ஸ்டாலின், ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகரன் மற்றும் சி.இ.ஓ. முத்துகேசவலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீயணைப்புத்துறை அதிகாரி ரித்தோஷ்சந்திரா, கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

    நிகழ்ச்சியில் சங்க செயலாளர் மஞ்சுநாதன் வரவேற்புரை ஆற்றினார், பொருளாளர் அரவிந்த் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை சர்வதேச நடுவர் பகவத்சிங் தொகுத்து வழங்கினார், பிரேவ் ஹார்ட் தேக்வோண்டோ பயிற்சி பள்ளியின் செயலாளர் நந்தகுமார் விழா ஏற்பாடு களை செய்திருந்தார்.

    வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்கின்றனர்.

    Next Story
    ×