search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு
    X

    கோப்பு படம்.

    ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு

    • அறங்காவலர் குழுவினர் புகார்
    • அந்த இடம் காலியாக இருப்பதால் ஒரு கும்பல் 15 ஆண்டாக ஆக்கிரமித்து தனது பயன்பாட்டில் வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 65 ஆயிரம் சதுர அடி நிலம் ரெயின்போ நகரில் இருந்தது.

    கோவில் நிலத்தை ஒரு கும்பல் போலி பத்திரம் மூலம் பதிவு செய்து வீட்டுமனைகளாக மாற்றி விற்றுவிட்டனர்.

    இதுதொடர்பான புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் போலி பத்திரம் மூலம் கோவில் நிலம் விற்கப் பட்டது உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து சார்பதிவாளர் சிவசாமி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர்.

    இந்த வழக்கில் பின்புலமாக செயல்பட்ட அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுவையின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலமும் அபகரிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக கோவில் அறங்காவலர் குழுவினர் இந்து அறநிலையத்துறை மற்றும் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடம் வில்லியனூர் பைபாஸ் 4 முனை ரோடு சந்திப்பில் உள்ளது.

    50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை கோவில் நிர்வாகம் வாங்கியது. அப்போது வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் நாயக்கர் என்பவர் 3 போகம் பயிர் செய்து கோவில் நிர்வாகத்திற்கு குத்தகை கொடுத்து வந்தார். அவருக்கு வயதான கா ரணத்தினால் அந்த நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டார்.

    அந்த இடம் எதற்கும் பயன்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த இடத்தை சுற்றி பல்வேறு நகர்கள் உருவாகி விட்டன. தற்போது அந்த இடம் காலியாக இருப்பதால் ஒரு கும்பல் 15 ஆண்டாக ஆக்கிரமித்து தனது பயன்பாட்டில் வைத்துள்ளனர்.

    சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள ரூ.4 கோடி மதிப்புள்ள கோவில் சொத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இதுகுறித்து இந்து அறநிலையத்துறை, வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×