என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கூட்டாளிகளுடன் சேர்ந்து வெடிகுண்டு வீசி கொலை செய்தனர்.
    • முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி(வயது32). லாரி டிரைவரான இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    கடந்த 21-ந் தேதி சவ ஊர்வலத்தில் ராஜிக்கும் ஹரி, நிர்மல் ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு காரணமாக ராஜியை அன்று இரவு ஹரி, நிர்மல் மற்றும் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெடிகுண்டு வீசி கொலை செய்தனர்.

    இந்த கொலை தொடர்பாக முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரி, நிர்மல் மற்றும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், ரெனி, மோகன்ராஜ், ரஞ்சித் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் இந்த கொலையில் தொடர்புடைய மகாலிங்கம் என்பவர் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.   மகாலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

    • வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
    • சில போலீஸ் நிலையங்கள் வாடகை கட்டிடங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி ஆகிய 4 பிராந்தியத்திலும் சட்டம் ஒழுங்கை போலீஸ் நிலை யங்கள் கட்டுப்படுத்துகிறது. இந்த போலீஸ் நிலையங்க ளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிக, மிக குறைவாக உள்ளது. சில போலீஸ் நிலையங்களில் கட்டணம் செலுத்தாததால் தொலைபேசி நீண்டகாலம் இயங்கவில்லை. சில போலீஸ் நிலையங்கள் வாடகை கட்டிடங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    மக்கள் தொகைக்கேற்ப போலீஸ் நிலையங்கள் கூடுதலாக்கப்படாமல் உள்ளது. பெருகி வரும் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு, மக்கள் பாது காப்பு நடவடிக்கை விரைவுபடுத்திட கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைத்திட வேண்டும். அனைத்து போலீஸ் நிலை யங்களிலும் வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பாது காப்பை உறுதிபடுத்தவும், குற்றச் செயல்களை தடுத்திடவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், எல்லையோர போலீஸ் ரோந்து பணிகளை முடுக்கி விட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய். இளங்கோவன் வழங்கினார்
    • அரியாங்குப்பம் தொகுதிக்கு ட்பட்ட சேத்திலால் நகர் பகுதியில் வசிக்கும் பயனாளிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதுவை அரசு ஆதி திராவிடர் நலத்துறை, நகர மற்றும் கிராம அமைப்பு துறை மற்றும் புதுவை குடிசை மாற்று வாரியம் சார்பில் கொண்டா டப்பட்டது.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அரியாங்குப்பம் தொகுதிக்கு ட்பட்ட சேத்திலால் நகர் பகுதியில் வசிக்கும் பயனாளிகளை சந்திக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தி னராக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் கலந்து கொண்டு, நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று இனிப்புகள் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை வழங்கினார். மேலும் திட்டத்தின் பயன் குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் நகர மற்றும் கிராம அமைப்பு துறை தலைமை அமைப்பா ளர் கந்தர் செல்வன், நகர அமைப்பாளர் விஜய நேரு மற்றும் ஆதி திராவிடர் அதிகாரி விஜயலட்சுமி , ஆய்வாளர் ராஜா, ராம மூர்த்தி, நகர அமைப்பு துறை அதிகாரி ரவி உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
    • பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு தொடர்பாக சார்பதிவாளர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நில அபகரிப்பை தடுக்க கோவில் சொத்துக்களுக்கு பூஜ்ய மதிப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் கோவில் சொத்து அபகரிப்பை தடுக்க முடியும்.

    காலாப்பட்டு பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பை தடுக்க அப்பகு தியில் கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகள் சங்கத்தினரிடம் பதிவாளர் உறுதி
    • வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து தேர்தல் நடத்தும் நிலையில் ஒரு நாள் முன்பு திடீரென தேர்தலை நிறுத்தியது ஜனநாய கத்திற்கு எதிரானதாகும்.

    புதுச்சேரி:

    புதுவை விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன் தலைமையில் துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆனந்தன், பாண்டுரங்கன், வீரப்பன், குப்புசாமி, வீராசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டுறவு பதிவாளரை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் உள்ள பெரும்பாலான சங்கங்களில் தேர்தல் நடத்தப்படாமல் அதிகாரி களே நிர்வகித்து வருகின்றனர். சில பால் உற்பத்தியாளர் சங்கங்க ளில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் கால அட்டவணை தயாரிப்பு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போது திடீரென தேர்தலை நிர்வாகம் நிறுத்தி விடுகிறது.

    விநாயகம்பட்டு , சோரப்பட்டு பால் சங்கத்திற்கு தேர்தல் தேதி அறிவித்த பின் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து தேர்தல் நடத்தும் நிலையில் ஒரு நாள் முன்பு திடீரென தேர்தலை நிறுத்தியது ஜனநாய கத்திற்கு எதிரானதாகும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட பதிவாளர் புதிய தேர்தல் அட்டவணை வெளியிட்டு தேர்தல் நடத்த உள்ளதாக உறுதியளித்தாக விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன் தெரிவித்துள்ளார்.

    • சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தல்
    • நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டையில் நடந்தது. சங்க தலைவர் நாரா யணசாமி, பொருளாளர் வி.சி.சி.நாகராஜன் தலைமை தாங்கினர். கூட்டத்தில் நீட் தேர்வில் 720-க்கு 700 மதிப் பெண் எடுத்த புதுச்சேரி மாணவர் அசோக்குமார் கவுரவிக்கப்பட்டார்.

    சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பாக சங்க நிர்வாகிகள், பெற்றோர், மாணவர்கள் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்தனர்.

    கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் மருத்துவம் படிக்க உள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மாநில மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்கள் முறைகே டாக படிப்பதை தடுக்க வேண்டும்.

    சென்டாக் மூலம் தேர் வாகும் அனைத்து மாணவர்களுக்கும் காமராஜர் கல்வி நிதியுதவியை வழங்க வேண்டும்.நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது. 2023ம் ஆண்டிற்கான நர்சிங் கல்லூரிக்கு அனுமதி பெற்ற பிறகே கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நிர்வாக இட ஒதுக்கீட்டிலும், மாநில மாணவர்களுக்கு 85 சவீத இட ஒதுகீடு வழங்குவது போன்று புதுச்சேரியிலும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாநில மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னர் மற்றும் முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • தேசிய ஆசிரியர் சங்கம் தீர்மானம்
    • இந்த ஆண்டு சங்கத்தில் ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

    இதில் 3 ஆண்டுக்கான புதுவை மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதை தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டம் புதுவையில் நடந்தது. இதில் புதுவை மாநில தலைவராக பாட்சா, துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் சுந்தரமூர்த்தி, மகளிர் செயலாளர் தாட்சாயிணி, மகிளா பிரமுகர் கலைவாணி, பொதுச்செய லாளர் தீபக்உச்சம்பள்ளி, இணை செயலாளர் செந்தமிழ்செல்வன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    மாவட்ட தலைவர்களாக புதுவை விஜயா, காரைக்கால் வேலாயுதம், மாகே அர்ச்சனா அசோக், ஏனாம் ராமதாஸ்கனக்காலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ முழுமையாக புதுவை மாநிலத்துக்கு கொண்டுவந்த மத்திய, மாநில அரசுக்கு வாழ்த்து தெரிவிப்பது.

    கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இந்த ஆண்டு சங்கத்தில் ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தொழிலாளர் சங்கம் கோரிக்கை
    • பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 6 பேர் வரை ஏற்றி செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை மாநில ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், ஆட்டோ சங்க மாநில துணைப் பொது செயலாளர் அந்தோணி, பொருளாளர் செந்தில்முருகன், மாநில துணை தலைவர்கள் பாளையத்தான், பிரகாஷ், ஜீவா, நடனமூர்த்தி, மாநில செயலாளர்கள் தேவநாதன்,சதீஷ், ராஜா, சதீஷ்குமார்,

    முருகேசன், நிர்வாக, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போக்குவரத்து துறை அறிவித்தபடி ஆட்டோவில் மாணவர்களை குறைவான எண்ணிக்கையில் ஏற்றினால் பள்ளிக்கு செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் 2 மடங்கு ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    அதுபோல் மாணவர்களை ஏற்றி செல்வதற்கு பெற்றோர்க ளிடம் வசூலிக்கப்படும் கட்டணமும் 2 மடங்கு உயர்த்தப்படும். இதனால் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படும். எனவே ஆட்டோவில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 8 பேர் ஏற்றி செல்வதற்கும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 6 பேர் வரை ஏற்றி செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

    பள்ளிக்கு செல்லும் ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்வதால் மாணவர்களை சரியான நேரத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. எனவே, பள்ளி முடித்து மாலையில் வரும் போது சோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலங்கள் அமைக்கவும் ,மெட்ரோ ரெயில் விடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். குறுகிய சாலையில்  7 மணி முதல் 9 மணி வரை கனரக வாகனத்தில் குப்பையை ஏற்றி செல்வதை தடை விதிக்க வேண்டும்.

    நகர பஸ்களின் நேரத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • துணை செயலாளர் பொற்கிலை என்ற பூரணி, மாநில பொருளாளர் வீரப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் வில்லியனூர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், தெற்கு மாநில செயலாளருமான யூ.சி.ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது, பூத் கமிட்டி அமைப்பது, வார்டு நிர்வாகிகள் நியமிப்பது மற்றும் மாநிலம் முழுவதும் கட்சி கொடியை ஏற்றுவது என்று ஒருமனதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் அவை தலைவர் அரிகிருஷ்ணன், இணை செயலாளர் லாவண்யா, துணை செயலாளர் பொற்கிலை என்ற பூரணி, மாநில பொருளாளர் வீரப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவம னையின் கீழ் விழுப்புரத்தில் நகர்புற சுகாதார பயிற்சி மையம் இயங்குகிறது.

    இங்குள்ள சமுதாய மருத்துவ துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டா டப்படுகிறது.

    இந்தாண்டு, சுற்றுச்சூழல் உலக தினத்தை யொட்டி, பூத்தமேடு அரசுஉயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் மாசு பாட்டிற்கான தீர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டி நடந்தது. துணை பேராசிரியர் அருள்மொழி, முது நிலை பட்டதாரி சரண்யா, சமூக சேவகி தேவசுந்தரி உட்பட பயிற்சி டாக்டர்கள் பலர் பங்கேற்று மாணவர்களுக்கு பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து, ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பயிற்சியின்போது பெண் போலீசாருக்கு பயிற்சி கொடுத்த சிலர் பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
    • பயிற்சி காலத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2022-ம் ஆண்டு 131 பெண் மற்றும் 252 ஆண் போலீஸ்காரர்கள் என மொத்தம் 383 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த போலீசார் தற்போது போலீஸ் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பயிற்சியின்போது பெண் போலீசாருக்கு பயிற்சி கொடுத்த சிலர் பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இதுகுறித்து முதலமைச்சர், போலீஸ்துறை உயரதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆண் போலீசாருக்கு பயிற்சி கொடுக்க நியமிக்கப்பட்ட 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசாரை அணிவகுப்பின்போது தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக உயர் அதிகாரிக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரும், விசாரிக்கும் நபரும் ஒரே பகுதி(மாகி)யை சேர்ந்தவர்கள் என்பதால் புகார் விசாரிக்கப்படவில்லை.

    பயிற்சி காலத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு செல்போன் வழங்கினர்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் பயிற்சி பள்ளியில் விசாரித்தபோது, பயிற்சி முடித்து சென்ற சிலர் அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் மொட்டை கடிதம் எழுதி போட்டுள்ளனர்.

    பயிற்சி நிறைவு பெறும் முன்பு பெண் போலீசாரிடம் இதுகுறித்து தனித்தனியே விசாரிக்கப்பட்டது. அப்போது யாரும் நேரடியாக புகார் தெரிவிக்க முன்வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் உண்மை தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது.
    • 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில் போடப்பட்ட புதிய சாலை, பொது மக்களின் புகாரையடுத்து, ஆய்வு செய்த தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன், தரம் இல்லையென புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில், அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி அரசு பாட்கோ நிறுவனம் மூலம், சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

    இரவோடு இரவாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, சாலையின் பல பகுதிகள் பெயர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாக.தியாகராஜன், எம்.எல்.ஏ. பொதுமக்கள் முன்னிலையில், புதிய சாலையை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில், 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. என்றார்.

    அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் 4 செ.மீ. இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், மேலும் கோபம் அடைந்த எம்.எல்.ஏ., தனது உதவியாளரை வரவழைத்து, அரையடி ஸ்கேல் ஒன்றை வாங்கி, சாலையின் தரத்தை, அதாவது 2 செ.மீ. இருப்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறி, முறையாக 4 செ.மீ தரம் கொண்ட சாலையை போடவில்லையென்றால், சாலைக்கான ஒப்பந்த தொகை வழங்க விடமாட்டேன் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×