search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆட்டோவில் பள்ளி மாணவர்களை கூடுதலாக ஏற்ற அனுமதிக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    ஆட்டோவில் பள்ளி மாணவர்களை கூடுதலாக ஏற்ற அனுமதிக்க வேண்டும்

    • தொழிலாளர் சங்கம் கோரிக்கை
    • பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 6 பேர் வரை ஏற்றி செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை மாநில ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், ஆட்டோ சங்க மாநில துணைப் பொது செயலாளர் அந்தோணி, பொருளாளர் செந்தில்முருகன், மாநில துணை தலைவர்கள் பாளையத்தான், பிரகாஷ், ஜீவா, நடனமூர்த்தி, மாநில செயலாளர்கள் தேவநாதன்,சதீஷ், ராஜா, சதீஷ்குமார்,

    முருகேசன், நிர்வாக, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போக்குவரத்து துறை அறிவித்தபடி ஆட்டோவில் மாணவர்களை குறைவான எண்ணிக்கையில் ஏற்றினால் பள்ளிக்கு செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் 2 மடங்கு ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    அதுபோல் மாணவர்களை ஏற்றி செல்வதற்கு பெற்றோர்க ளிடம் வசூலிக்கப்படும் கட்டணமும் 2 மடங்கு உயர்த்தப்படும். இதனால் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படும். எனவே ஆட்டோவில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 8 பேர் ஏற்றி செல்வதற்கும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 6 பேர் வரை ஏற்றி செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

    பள்ளிக்கு செல்லும் ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்வதால் மாணவர்களை சரியான நேரத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. எனவே, பள்ளி முடித்து மாலையில் வரும் போது சோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலங்கள் அமைக்கவும் ,மெட்ரோ ரெயில் விடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். குறுகிய சாலையில் 7 மணி முதல் 9 மணி வரை கனரக வாகனத்தில் குப்பையை ஏற்றி செல்வதை தடை விதிக்க வேண்டும்.

    நகர பஸ்களின் நேரத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    Next Story
    ×