search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூட்டுறவு பால் சங்க  தேர்தலுக்கு விரைவில் புதிய அட்டவணை
    X

    கூட்டுறவு பதிவாளரை சந்தித்து மனு அளித்த காட்சி. 

    கூட்டுறவு பால் சங்க தேர்தலுக்கு விரைவில் புதிய அட்டவணை

    • விவசாயிகள் சங்கத்தினரிடம் பதிவாளர் உறுதி
    • வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து தேர்தல் நடத்தும் நிலையில் ஒரு நாள் முன்பு திடீரென தேர்தலை நிறுத்தியது ஜனநாய கத்திற்கு எதிரானதாகும்.

    புதுச்சேரி:

    புதுவை விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன் தலைமையில் துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆனந்தன், பாண்டுரங்கன், வீரப்பன், குப்புசாமி, வீராசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டுறவு பதிவாளரை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் உள்ள பெரும்பாலான சங்கங்களில் தேர்தல் நடத்தப்படாமல் அதிகாரி களே நிர்வகித்து வருகின்றனர். சில பால் உற்பத்தியாளர் சங்கங்க ளில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் கால அட்டவணை தயாரிப்பு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போது திடீரென தேர்தலை நிர்வாகம் நிறுத்தி விடுகிறது.

    விநாயகம்பட்டு , சோரப்பட்டு பால் சங்கத்திற்கு தேர்தல் தேதி அறிவித்த பின் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து தேர்தல் நடத்தும் நிலையில் ஒரு நாள் முன்பு திடீரென தேர்தலை நிறுத்தியது ஜனநாய கத்திற்கு எதிரானதாகும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட பதிவாளர் புதிய தேர்தல் அட்டவணை வெளியிட்டு தேர்தல் நடத்த உள்ளதாக உறுதியளித்தாக விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×